அமேசான் காட்டில் எரிந்துவரும் தீயை அணைக்கும் பணிகளில் 74,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். `அமேசான் மழைக்காடுகளைக் காப்பாற்ற வேண்டும்’ என்ற குரல் உலகம் முழுவதும் ஓங்கி ஒலித்துவருகிறது. பெயரில்கூட அமேசான் காடுகள் எனக் கூறாமல் `அமேசான் மழைக்காடுகள்’ என்றே கூறப்படுகிறது. அங்கு தொடர்ச்சியாக பெய்யும் மழையும் அங்கு நிலவும் ஈரப்பதம்தான் இந்த பெயருக்கான காரணம். கோடைக்காலங்களில் கூட குளிர்ச்சியுடன் கம்பீரமாக இருக்கும் காடு,...

ஊட்டி கொட்டோ கொட்டென்று கொட்டித்தீர்த்த கனமழையால், ‘ரெக்கார்டு பிரேக்’ செய்திக்கும் நீலகிரி மாவட்டம், அவலாஞ்சி வனப்பகுதி, வானிலை ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.  அதேவேளையில், உண்மையாலுமே இவ்வளவு மழை கொட்டியிருக்குமா அல்லது, மழையை அளவிடும், ‘மழை மானி’யில் ஏதாவது கோளாறு ஏற்பட்டுவிட்டதா என, சோதனையிடும் அளவிற்கு ஒரு வித அதிர்ச்சியையும் தந்திருக்கிறது. நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகேயுள்ள, ‘அவலாஞ்சி’ பகுதி, சர்வதேச அளவில்,...

தென்னந்தோப்புகள் சரிவர பராமரிக்கப்படாத நிலையிலும், மானாவாரி தோப்புகளில் போதிய நீர் பாசன வசதி இல்லாத நிலையிலும் ஒல்லிக்காய்கள் 3 முதல் 10 சதவீதம் தோன்றுகின்றன. பாரம்பரிய குணங்கள், ஊட்டச்சத்து பற்றாக்குறை, போதிய நீர் பற்றாக்குறை, மகரந்த சேர்க்கை சரியின்மை போன்றவையே இதற்கு காரணம். பாரம்பரிய குணங்கள் பெறும் முறைகள் நல்ல குணங்கள் அடங்கிய தாய் மரங்களில் இருந்து 15 முதல் 45 வயதுடைய மரங்களில் அதுவும் 35 மட்டைகளுக்கு குறைவில்லாத ஆண்டுக்கு 100 காய்கள் கொடுக்கக்கூடிய...

குப்பைத் தொட்டி நிரம்பிக் கிடந்தா, மறுநாள் குப்பையைப் போட்டுக்கலாம்னு பெரிய மனசெல்லாம் பண்ண மாட்டோம். குப்பைத் தொட்டிக்குப் பக்கத்துலேயே வீசிட்டு வந்துடுவோம். குப்பை மறுசுழற்சி ‘மக்கும் குப்பை, மக்காத குப்பை இரண்டையும் பிரிச்சு குப்பைத் தொட்டியில போடுங்க’ என்று மாநகராட்சி எத்தனை முறை சொன்னாலும், அவையெல்லாம் வெறும் காதோடு போச்சு. காய்கறித் தோலையும் அழுகின தக்காளியையும் பத்திரமா பிளாஸ்டிக் கவர்ல போட்டுத்தான் குப்பைத் தொட்டியில போடுவோம்....

மானாவாரி விவசாய நிலங்களில் மழை நீரைச் சேமித்து பயிர்களுக்குப் பயன்படுத்துவதற்கு, பூசா ஹைட்ரோஜெல் என்னும் வேளாண்மை வேதிப் பொருளை, இந்திய வேளாண்மை ஆராய்ச்சித் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. வேதிப் பொருள் பாலிமர் வகையைச் சேர்ந்தது. காய்ந்த நிலையில் இருக்கும் பூசா ஹைட்ரோஜெல் பழுப்பு நிறத்தில் உலர்ந்த சவ்வரிசி போல காணப்படும். இதன்மீது தண்ணீர் பட்டவுடன் தனது இயல்பான எடையை விட 400 மடங்கு எடையுள்ள நீரை உறிஞ்சி சேமித்து வைத்து, சிறிது சிறிதாக மண்ணில்...

நீர்ப் பற்றாக்குறை நீர்ப் பற்றாக்குறை ஏற்படும்போது, பயிர்களின் முக்கிய சத்துகளான பொட்டாட்சியம், மக்னீசியம் பற்றாக்குறை அதிகம் காணப்படும். இதுமட்டுமின்றி கரும்பில் துத்தநாகம், போரான் நுண்ணூட்டச் சத்துகளின் பற்றாக்குறையும் ஏற்படும். இந்தக் குறைபாட்டை நீக்க 20 சதவீதம் அம்மோனியம் பாஸ்பேட், 0.5-1 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு, 0.5 சதவீதம் துத்தநாக சல்பேட், 0.5-1 சதவீதம் இரும்பு சல்பேட் அத்துடன் 1 சதவீதம் யூரியா, 0.3 சதவீதம் போரிக் அமிலம் ஆகியவற்றை பயிர்களுக்கு...