இயற்கை முறையில் தக்காளியில் பூச்சி கட்டுப்பாடு (Natural Method of Pest Control in Tomato Plant)

• சோற்றுக் கற்றாழை, துளசி மற்றும் ஆடு தின்னா பாளை செடிகளின் சாற்றை தயார் செய்து, தக்காளி செடி மீது தெளித்தால் எல்லாவிதமான பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவதோடு, பூ உதிர்தலையும் குறைக்கலாம்.
• 20மிலி காகித பூ இலைச் சாற்றில் ஒரு லிட்டர் நீர் கலந்து தக்காளி விதைகளை 6 மணி நேரம் ஊறவைத்து விதைத்தால் நாற்றாங்காலில் நாற்று அழுகல் நோய் வராது.
• 25-30 நாட்கள் ஆன நாற்றுக்களை நடவுக்கு பயன்படுத்தவேண்டும்.
• பூ உதிர்தலை குறைக்க, வேப்பம் எண்ணெயை தெளிக்கலாம்.
• பூ உதிர்தலை குறைக்க சூளைச் சாம்பல் தோட்டத்தைச்சுற்றி நட்டால் நூற்புழு தாக்குதல் கட்டுப்படும்.
• செண்டுமல்லி செடியை தக்காளி தோட்டதததைச் சுற்றி நட்டால் நூற்புழு தாக்குதல் கட்டுப்படும்.
• காய் துளைப்பானை தடுக்க, பூண்டு அல்லது வெங்காய செடியை வரப்பு பயிராக நடவு செய்தல் வேண்டும்.
• பென்சோயின் கொண்டு பூக்கும் போது காலை, மாலை வேளைகளில் புகை மூட்டினால் காய் துளைப்பான் மற்றும் அசுவினி தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
வேப்பம் புண்ணாக்கு உடன் ஆட்டுப் புழுக்கையை கலந்து வயலில் இட்டால் இலைப்பேன் தாக்கம் கட்டுப்படும்.
• காலை வேளையில் சாம்பலைத் தக்காளிச் செடிக்குத் தூவினால் இலைப்பேன் மற்றும் அசுவினி தாக்குதல் கட்டுப்படும்.
• அனைத்து வித பூச்சிகளையும் கட்டுப்படுத்த 11/2 கிலோ சாம்பலை சாணியுடன் கலந்து தெளித்தல் வேண்டும்.
• சர்வோதய சோப் கரைசலை இலைகளின் மீது தெளித்தால், மாவுப் பூச்சியின் முட்டை மீது படிந்து இறந்து விடும்.

தக்காளி இலை துளைப்பான் கட்டுபடுத்தும் முறைகள்

• தக்காளி இலைகள் துளைக்கப்பட்டு வெண்ணிற கோடுகள் இலைகளில் காணப்படும்.
• நாளடைவில் இலை வாடிக் காய்ந்து உதிரி விடும்.

பூச்சியின் விபரம்

இலைகளில் வெண்ணிற கோடுகள்
இலைகள் வாடிக் காய்தல்
புழு : பழுப்புநிற 2மிமீ நீளமுள்ள கால்கள் இல்லாத புழுக்கள்.
கூட்டுப்புழு : வளைக்கோடுகளில் மஞ்சள் நிற கூட்டுப்புழு காணப்படும்.
முதிர்பூச்சி : வெளிர் மஞ்சள் நிற ஈக்கள்.

கட்டுப்படுத்தும் முறைகள்

• துளைக்கப்பட்ட இலைகளை சேகரித்து அழிக்கலாம்.
• வேப்பங்கோட்டை வடிநீர் 3 சதம் தெளிக்க வேண்டும்.

 

Print Friendly, PDF & Email
About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.