பஞ்சகவ்யத்தை தெளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்(Advantages of Spraying Panchagavya on Plants)

பஞ்சகவ்யா தயாரிப்பு முறை மற்றும் அதன் பயன்களை நாம் பஞ்சகவ்யா என்ற தலைப்பில் பார்த்தோம். பஞ்சகவ்யத்தில் உபயோகப்படுத்தும் பொருட்களின் பயன்கள் பற்றி இப்பொழுது பார்ப்போம்.

பஞ்சகவ்யத்தில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. பயிர்களுக்கு மட்டுமல்லாது கால்நடைகளுக்கும் மிகவும் பயன் தருவது பஞ்சகவ்யம்.

 பஞ்சகவ்யத்தின் பயன்கள்

  1. பசுமாட்டு சாணம்: பாக்டீரியா, பூஞ்சாணம், நுண்ணுயிர் சத்துக்கள்
  2. பசுமாட்டு சிறுநீர்: பயிர் வளர்ச்சிக்கு தேவையான தழைச்சத்து
  3. பால்: புரதம், கொழுப்பு, மாவுப்பொருள்கள், அமினோ அமிலங்கள், கால்சியம் மற்றும் நைட்ரஜன் சத்துக்கள்
  4. தயிர்: லேக்டோ பேசில்லஸ் ஜீரணிக்கத்தக்க செரிமானத்தன்மை தரவல்ல நுண்ணுயிர்
  5. நெய்: வைட்டமின்-ஏ, வைட்டமின் – பி, கால்சியம் மற்றும் கொழுப்புச்சத்து.
  6. இளநீர்: சைட்டோகைனின் என்னும் வளர்ச்சி ஊக்கி மற்றும் அனைத்துவகை தாதுக்கள் (மினரல்ஸ்)
  7. கரும்புச்சாறு: இனிப்பு (குளுக்கோஸ்) வழங்கி நுண்ணுயிர் வளர்ச்சியினை அதிகரிக்கும்.
  8. வாழைப்பழம் மற்றும் பதனீர்: மினரல் ஆகவும் நொதிப்புநிலையை அதிகப்படுத்தவும், நுண்ணூட்டச்சத்து அதிகப்படுத்தவும்.

பஞ்சகவ்யத்தை தெளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

மா

பூ பூக்கும் காலத்தில் மரத்தில் உள்ள எல்லா இலைகளையும் மறைக்கிற மாதிரி பூ பூக்கும். எவ்வளவு காற்று அடித்தாலும் பூ கொட்டாது. பூ பூத்து, நிறைய பிஞ்சுகள் விடும். பிஞ்சுகள் நன்கு காய்த்து, நல்ல விளைச்சலைக் கொடுக்கும். மாவைப் பொருத்தவரை ஒரு ஆண்டு அதிக விளைச்சல் தந்தால், அடுத்த ஆண்டு விளைச்சல் சரியாக இருக்காது என்பார்கள். பஞ்சகவ்யத்தைத் தெளித்தால் இந்தப் பிரச்னைகளுக்கு எளிதில் முடிவு கட்டிவிடலாம்.

எலுமிச்சை

எலுமிச்சை செடிகளுக்கு பஞ்சகவ்யத்தை ஊற்றினால், ஆண்டு முழுக்க பூக்களும் பிஞ்சுகளும் பழங்களும் மரத்தில் தொங்கிக் கொண்டே இருக்கும். விளைச்சல் பெருகுவதோடு பழங்கள் நல்ல நிறத்துடன் அதிக நாட்கள் புத்தம் புதிசாக இருக்கும் பஞ்சகவ்யத்தில் வளரும் எலுமிச்சையில் சாறு அதிகம். ஊறுகாய்க்கு பிரமாதமாக இருக்கும்.

முருங்கை

முருங்கை மரத்துக்கு பஞ்சகவ்யத்தைத் தெளித்தால் நிறைய பூ பூத்துக் குலுங்கும். இதில் யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் செஞ்சிக்குப் பக்கத்தில் உள்ள மல்லாண்டி கலைமணியின் தோட்டத்திற்குப் போய் பார்க்கலாம்.

கொய்யா, சப்போட்டா, நெல்லி, புளி, வாழை, கரும்பு, மஞ்சள், வெற்றிலை, மல்லிகை, கத்தரி, தென்னை, நிலக்கடலை, எள், நெற்பயிர் என்று பலவற்றிலும் அற்புதமான மகசூல் கிடைக்கும்.

Print Friendly, PDF & Email
About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.