அக்னி அஸ்திரம் (Agni Asthiram)

எந்த வகையான பூச்சி தாக்குதலினையும் எளிதான முறையில் கட்டுப்படுத்தும் வழி முறை அக்னி அஸ்திரம் (Agni Asthiram) பயன்படுத்துதல் ஆகும்.
குறிப்பிட்ட இடைவெளியில் அக்னி அஸ்திரம்(Agni Asthiram) தெளித்தால் பூச்சி தாக்குதலில் இருந்து விடுபடும்.

அக்னி அஸ்திரம் (Agni Asthiram) என்றால் என்ன

நாட்டு பசுமாட்டு சிறுநீர், புகையிலை, பச்சை மிளகாய், வேம்பு இலைகளை போட்டு நன்றாக கொதிக்க வைத்த தெளிந்த நீர்தான் அக்னி அஸ்திரம்.

தயாரிக்க தேவையான பொருட்கள்

 1. புகையிலை = 1/2 கிலோ
 2. பச்சை மிளகாய் = 1/2 கிலோ
 3. வேம்பு இலை = 5 கிலோ
 4. பசுமாட்டு சிறுநீர் (கோமியம்) = 15 லிட்டர்
 5. மண்பானை (கலக்க) = 1

தயாரிக்கும் முறை

நாட்டு பசுமாட்டு சிறுநீர் (கோமியம்), புகையிலை , பச்சை மிளகாய் , வேம்பு இலைகளை  மண்பானையில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவேண்டும் நான்கு முறை மிண்டும் மிண்டும் கொதிக்க வைக்கவேண்டும் (வேறு பாத்திரங்கள் பயன்படுத்தக்கூடாது, வேறு பாத்திரங்கள் பயன்படுத்தினால் வேதியியல் மாற்றங்கள் ஏற்ப்பட்டு அக்னி அஸ்திரம் பலமிழக்கக்கூடும்). இறக்கியபிறகு, பானையின் வாயில் துணியைக் கொண்டு கட்டி 48மணி நேரம் அப்படியே வைத்துவிடவேண்டும் நீரின் மேல் ஒரு ஏடு போல் ஆடை படியும், அதை நீக்கி விட்டால் உள்ளே இருக்கும் தெளிந்த நீர்தான் அக்னி அஸ்திரம் (Agni Asthiram) . இக்கரைசலை 3 மாதம்ங்கள் வரை பாட்டிலில் சேமித்து வைத்துகொள்ளலாம்.

அக்னி அஸ்திரம் (Agni Asthiram) எப்படி பயன்படுத்துவது

100 லிட்டர் நீரில், 3 லிட்டர் அக்னி அஸ்திரம், 3 லிட்டர் கோமியம் கலந்து பயிர்கள் மேல் தெளித்தால் போதும் புழு, புச்சிகள் காணாமல் போய்விடும்.

அக்னி அஸ்திர நன்மைகள் என்ன

 • பயிர்களில் காய்ப்புழு, தண்டு துளைப்பான் போன்ற புழுக்களைக் கட்டுப்படுத்த அக்னி அஸ்திரம் தெளிக்கலாம்.
 • எல்லா வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை.

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

2 Comments so far. Feel free to join this conversation.

 1. sampath September 19, 2015 at 7:01 am -

  how many litres of water to be added in the pot for boiling the above qty

  • Arulkumar
   Arulkumar September 19, 2015 at 5:10 pm -

   No need to add any water while preparing this karaisal, only you have to add water when you are going to spray it with ratio of 10(Water):3(cow Urin):3(Agni asthiram).

Leave A Response

You must be logged in to post a comment.