அமிர்த கரைசல் (Amirtha Karaisal)

அமிர்த கரைசலை பொதுவாக நிலவள ஊக்கி என்று அழைப்பார்கள். அமிர்தகரைசலை நிலத்தில் தெளித்த 24 மணி நேரத்தில் நுண்ணுயிர்கள் பெருகும். பயிர்கள் நோய் நொடி இல்லாமல் வளர உதவும்.

அமிர்த கரைசலை பொதுவாக 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த கரைசலைத் தெளிக்கலாம்.

தயாரிக்கும் முறை

 1. நாட்டுப்பசு சாணம் = 10 கிலோ
 2. நாட்டுப்பசு கோமையம் = 10 லிட்டர்
 3. வெல்லம் = 250 கிராம்
 4. தண்ணீர் = 200 லிட்டர்

முதலில் நாட்டுப்பசுஞ் சாணம்  மற்றும் நாட்டுப்பசு கோமையம்  (பசும் சாணம் புதியதாக இருந்தல் அவசியம், கோமையம் பழையதாக இருந்தால் வீரியம் அதிகமாக இருக்கும்) இவற்றை ஒரு வாளியில் (அ) ஏதாவது ஒரு கலனில் எடுத்துக் கொண்டு அதில்  வெல்லம் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இந்த கலவையை 24 மணி நேரம் நிழலான இடத்தில் வைக்க வேண்டும். இப்பொழுது அமிர்த கரைசல் தயார்.

பயன் படுத்தும் முறை

 • ஒரு பங்கு கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்து பயிர்களுக்கு தெளிக்கலாம்.
 • ஒரு ஏக்கருக்கு பத்து தெளிப்பான் (டேங்க்) அளவுக்கு தெளிக்கலாம்.
 • வாய்க்கால் மற்றும் சொட்டு நீரிலும் கலந்து விடலாம்.
 • அமிர்த கரைசலை நிலத்தில் தெளித்த 24 மணி நேரத்தில் நுண்ணுயிர்கள் பெருகும்.
 • பயிர்கள் நோய் நொடி இல்லாமல் வளர உதவும்.
 • பொதுவாக 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த கரைசலைத் தெளிக்கலாம்.
 • பயிர்கள் மிகவும் வளமாகக் காணப்பட்டால் வாரம் ஒருமுறை கூடத் தெளிக்கலாம்.
 • வசதி இருந்தால் தண்ணீர் பாய்ச்சும்போதெல்லாம் அதனுடன் கலந்துவிடலாம்.

இயற்கை முறைகளினை பயன்படுத்துவோம். நஞ்சில்லாத மண் வளம் காப்போம்.


[stextbox id=”Note” caption=”தகவல்” collapsing=”false” collapsed=”false” ]இயற்கை வேளாண் விஞ்ஞானி தெய்வத்திரு நம்மாழ்வார் அவர்களின் அமிர்த கரைசல் செய்முறை விளக்கும் ஒரு காணொளி இங்கே  [/stextbox]

About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

4 Comments so far. Feel free to join this conversation.

 1. selventhiran September 9, 2016 at 5:44 pm -

  i will try in my farm tomorrow

 2. Mani July 3, 2016 at 9:50 pm -

  Very informative….Thanks for sharing

 3. Bhavanisree G December 17, 2014 at 8:54 pm -

  Hi,

  I m interested in organic terrace gardening and I do have a few plants in my terrace.
  I have prepared jeevamirutham and used for my plants, would like to about amirtha karaisal and panchakavyam, like how long can we keep this mixture? And is ghee mandatory for panchakavyam?
  Bhavani.

Leave A Response

You must be logged in to post a comment.