நாட்டுக்கோழி வளர்ப்பில் நஷ்டத்தைத் தவிர்க்க ஆலோசனைகள் ( Avoid Loss in Nattu Kozhi Valarpu)

நாட்டுக்கோழிகள் வளர்ப்பில் பலர் நல்ல லாபம் பார்த்து வந்தாலும், ஒரு சிலர் பண்ணை ஆரம்பித்த சில மாதங்களிலேயே இழப்பு ஏற்பட்டு கோழி வளர்ப்பைக் கைவிட்டு விடுகிறார்கள். இதைத் தவிர்த்து, லாபகரமாக நாட்டுக்கோழிகளை வளர்க்கும் முறைகள் குறித்துத் திண்டுக்கல் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் டாக்டர் சிவசீலன் சொன்ன ஆலோசனைகள் இங்கே…

முறையான பயிற்சி

“நாட்டுக்கோழி வளர்ப்பு அருமையான வருமானம் தரக்கூடிய தொழில்தான். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அதை நாம் முறையாக செய்யவேண்டும்.

கோழி வளர்க்கறது என்ன பெரிய சூத்திரமாகிராமத்துல தானா அலையுற நாட்டுக்கோழிங்களை நாங்கள் சின்ன வயதிலிருந்தே பார்த்திருக்கின்றோம் என்று நினைத்துக் கொண்டு இந்த தொழிலில் இறங்கக்கூடாது. இதற்க்கு முறையாக பயிற்ச்சி எடுக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கின்ற தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையங்கள் இதுக்கான பயிற்ச்சி இலவசமாவே கிடைக்குது.

மேய்ச்சல் முறையில் வளர்க்க வேண்டும்

நாட்டுக்கோழிகளைக் கூண்டுல் அடைத்து வெத்து வளர்த்தால் பெரிதாக லாபம் கிடைக்காது.  கோழிகளை மேய்ச்சல் முறையில் வளர்க்கும் போதுதான், நாட்டுக்கோழிக்கான நல்ல குணங்களோட கோழிகள் இருக்கும். அப்பொழுதுதான் இயற்கை முறையில் செலவுகளைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கமுடியும்.

நாட்டுக்கோழிகளை வாங்கும்போது, தரமான தூய ரக நாட்டுக்கோழிகளா என்று பார்த்து வாங்கவேண்டும். நிரைய பேர் இந்த இடத்தில் ஏமாந்துவிடுவார்கள். முதல் கோணல் முற்றும் கோணல் என்று சொல்கின்ற மாதிரி, இதில் தப்பு ஏதாவது நடந்தால், தொடர்ந்து எல்லாமே தவறாகிடும். அதுனால் தரம், ரகம் பார்த்து வாங்குறதுல கவனமா இருக்கணும்.

வருமுன் காப்போம்

எப்பவுமே ‘வருமுன் காப்போம்’தான் சிறந்த வழி. அதனால், நோய் வருதோ இல்லையோ அந்தந்த காலகட்டத்துல தடுப்பூசிகளைப் போட்டுடணும். நாட்டுக்கோழிகளுக்குப் பெருசா நோய்கள் தாக்காது என்றாலும், தடுப்பு மருந்துகளைத் தவறாமல் கொடுக்கவேண்டும். இதை முறையாக கடைப்பிடித்தாலே, நோய்த் தாக்குதலிலிருந்து கோழிகளைக் காப்பாற்றி விடலாம். பெரும்பாலான பண்ணைகளில் நோய்த்தடுப்பு முறைகளைக் கையாளாததால்தான் கோழிகள் இறப்பு அதிகமாகி இழப்பு வந்துவிடுகிறது.

தீவன மேலாண்மை

அடுத்து தீவன மேலாண்மையைச் சரியாகக் கடைப்பிடிக்கவில்லை என்றாலும் அதிக இழப்பு வரும். நாட்டுக்கோழிகளைப் பிராய்லர் கோழி மாதிரி கூண்டில் அடைத்து வெத்து தீவனம் போட்டு வளர்த்தா இழப்புதான் வரும். நாட்டுக்கோழிளை மேய்ச்சல் முறையில் விட்டுட்டா, அதுங்களே தங்களுக்கான தேவையான தீவனத்தைத் தேடி எடுத்து கொள்ளும். குறைந்த அளவு தீவனம் நாம் கொடுத்தாலே போதுமானது. அதுவும் மனிதர்களுக்குத் தேவையில்லாத கழிவுகளைத்தான் கோழிகளுக்குக் கொடுக்கவேண்டும். அழுகிய காய்கறிகள், முட்டைகோஸ், காலிஃபிளவர் இலைகள்னு நருக்கி சிறியதாக கொடுத்தாலே போதுமானது.

எவ்வளவு விலை அதிகமான, சத்தான கம்பெனி தீவனம் கொடுத்தாலும் 120 நாட்களிள் நாட்டுக்கோழி ஒண்ணே கால் கிலோவுல இருந்து ஒன்றரை கிலோ எடைதான் வரும். இதுதான் நாட்டுக்கோழிவுடைய இயல்பு. அதனால், நாட்டுக்கோழிகளுக்கு விலை அதிகமான கம்பெனி தீவனம் தேவையே இல்லை. கடைகளில் வாங்கினால் ஒரு கிலோ தீவனம் 25 ரூபாய் வரை இருக்கும். அதனால், தீவனத்தைக் குறைவான செலவில் நாமே தயாரித்துவிடலாம்.

தீவனம்

  • மக்காச்சோளம் 50%
  • தவிடு 40%, பிண்ணாக்கு
  • கருவாடு
  • சோயா 8%
  • தாது உப்புக்கலவை 2%
  • உப்பு 1%

இத எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அரைத்தால் தீவனம் தயார். விலை மலிவான, தரம் குறைந்த தானியங்களை அதாவது, உடைந்த தானியங்களைக் குறைவான விலையில் வாங்கிப் பயன்படுத்தினாலே போதுமானது. நாம் தயார் செய்கின்ற தீவனம் ஒரு கிலோ பத்து ரூபாயைத் தாண்டக்கூடாது. அப்பத்தான் லாபகரமானதாயிருக்கும்.

கோழிகளைப் பொறுத்தவரைக்கும் தீவனம் வைத்தால், காலி பண்ணிக்கிட்டே இருக்கும். தட்டு காலியா இருக்கேன்னு நாமும் கொட்டிக்கிட்டே இருக்கக்கூடாது. ஒரு வார வயதுடைய ஒரு கோழிக்கு 10 கிராம் தீவனம் கொடுத்தால் போதுமானது. இதை ஒவ்வொரு வாரமும் பத்துப்பத்து கிராமா அதிகரித்துகொண்டே போகணும். இந்தத் தீவனத்தையும், ஒரு நாளைக்கு மூன்று வேளையா பிரித்து கொடுக்கணும். மீதித் தீவனத் தேவையை ‘மார்க்கெட் வேஸ்ட்’ கொடுக்குறது, மேய்ச்சலுக்கு விடுறது மூலமா சரிக்கட்டணும். அசோலாவையும் தீவனத்தோட கொடுக்கலாம். இந்த முறைகளைக் கடைப்பிடித்தால் நாட்டுக்கோழி வளர்ப்பு கண்டிப்பா லாபகரமாத்தான் இருக்கும்”.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Leave A Response