கால்நடைகளுக்கு மாற்றுத் தீவனம் அசோலா (Azolla for Cattle)

உயிர் உரமாக பயன்படும் அசோலாவை கோழிகள் மற்றும் கால்நடைகளுக்கு மாற்றுத் தீவனமாக பயன்படுத்தி தீவனத்தட்டுப்பாட்டையும் மற்றும் தீவனச் செலவையும் குறைக்கலாம்.

முக்கியத்துவம்

கால்நடைத் தீவனத்தில் உள்ள மக்காச்சோளம், கம்பு, சோளம் போன்ற பயிர்களின் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வால் கால்நடைத் தீவனச் செலவு அதிகரிக்கிறது. ஆதலால் புரதச் சத்து நிறைந்த அசோலாவை கால்நடைகளுக்கு மாற்றுத் தீவனமாக பயன்படுத்தி உற்பத்தி செலவை கணிசமாக குறைக்கலாம்.

உற்பத்தி முறைகள்

வயலில் மற்றம் நீர் தேங்கம் குட்டைகளில் அல்லது சிமெண்ட் தொட்டிகளில் அலோசாவை ஒரு செண்ட் நிலத்திற்கு ஒரு கிலோ என்ற அளவில் இட்டு 4 – 5 செமீ  நீரை நிறுவனத்தினால், இரண்டு வார காலத்திற்குள் அந்த இடம் முழுவதும் வளர்ந்து விடும்.

கால்நடைகளுக்கு அசோலாவை தீவனமாக கொடுத்தல்

அசோலாவை கால்நடைகளுக்க தீவனமாக பயன்படுத்தும்போது அடர் தீவனம் ஒரு பங்கு, அசோலா 1 பங்கு என்ற அளவில் கலந்து கொடுக்க வேண்டும். கால்நடைகள் பழகிய பிண் அசோலாவை தனியாகவே எடுத்துக்கொள்ளும்.

நன்மைகள்

1) கறவை மாடுகளில் பால் உற்பத்தி அதிகரிக்கிறது.
2) கொழுப்பு மற்றும் கொழுப்பு அல்லாத திடப்பொருளின் அளவும் அதிகரிப்பதால் பாலின் தரமும் அதிகரிக்கிறது.
3) கோழியின் எடை அதிகமாகிறது. முட்டையின் எடையும் அதிகரிக்கிறது,
4) மேலும் அசோலாவை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Leave A Response

You must be logged in to post a comment.