வாத்து வளர்ப்பின் நன்மைகள் (Benefits of Duck Breeding)

கிராமப்புற விவசாயிகள் வாத்து வளர்ப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். வாத்துகள் மொத்த கோழியினங்களின் எண்ணிக்கையில் 10 சதவீதம்  உள்ளன. வாத்துகள் மொத்த முட்டை உற்பத்தியில் 6 முதல் 7 சதவீதம் வரை பங்களிக்கின்றன. நாட்டு வகை வாத்துகள் தற்பொழுது பரவலாக வளர்க்கப்படுகின்றன. இவை ஆண்டுக்கு 100 முதல் 150 முட்டைகள் வரை மட்டுமே உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. அறுவடை நிலங்களில் மேய்த்து வளர்ப்பதால், போதுமான தீவனம் கிடைக்காததும் குறைந்த முட்டை உற்பத்திக்கு காரணம். இது தவிர சில சமயங்களில் வாத்துகளைத் தாக்கக்கூடிய நோய்களுக்கு தடுப்பூசி போடவில்லை என்றாலும் முட்டை உற்பத்தி குறைவதோடு, வாத்துகள் இறப்பும் நேரிடும். ஆகவே, இத்தகைய சூழலில் முறையாக வாத்து வளர்ப்பை அறிந்து, அதை கடைபிடிப்பது அவசியம்.

வாத்து வளர்ப்பின் நன்மைகள்

  • கோழி முட்டை எடையுடன் ஒப்பிடும்போது வாத்து முட்டை 1520 கிராம் கூடுதல் எடை உடையது.
  • மூன்று ஆண்டுகள் வரை முட்டையிடக்கூடுயது.
  • குறைந்த அளவு தீவனம் இருந்தால் கூட வாத்து வளர்க்க இயலும்.
  • வாத்துகளை தாக்கும் நோய்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
  • வாத்து வளர்க்க தேவையான தொடர்செலவுகள் மற்றும் பராமரிப்பு செலவுகள் கோழியினங்களை ஒப்பிடும் போது மிகவும் குறைவு.

வாத்து இனங்கள்

  • காக்கி கேம்பல்
  • இண்டியன் ரன்னர்

இந்த வகையான வாத்துகள் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளிலும், அண்டை மாநிலமான கேரளா மற்றும் ஆந்திராவிலும் பரவலாக முட்டைக்காக வளர்க்கப்படுகின்றன. இவை ஆண்டுக்கு 250 முதல் 300 முட்டைகள் வரை இடும்.
இது தவிர செர்ரி வெல்லி என்னும் வீரிய கலப்பின வாத்துகள் உள்ளன. இவற்றை வளர்க்க மேய்ச்சல் நிலம் மட்டும் போதாது. இவ்வகையான வாத்துகளுக்கு அடர் தீவனமும், போதிய பாதுகாப்பான பண்ணை வீடுகளும் அவசியம். இவ்வகை வாத்துகள் 20 முதல் 22 வாரத்தில் முட்டையிட துவங்கும். இனப்பெருக்கத்திற்காக வளர்க்கும்போது 8 பெண் வாத்திற்கு 1 ஆண் வாத்து சேர்க்கப்பட வேண்டும்.

  • மஸ்கவி
  • வெள்ளை பெக்கின்
  • ரூவன்

இவை இறைச்சிக்காக வளர்க்கப்படுபவை.

முட்டையிடும் வாத்துகளின் பராமரிப்பு

வாத்துகள் பொதுவாக அதிகாலையிலேயே முட்டையிட்டுவிடும். சாதாரணமாக வாத்து முட்டையின் எடை 65-70 கி இருக்கும். 5-6 மாத வயதில் முட்டையிடத் துவங்கும். முட்டையிடத் துவங்கிய 5-6 வாரங்களுக்குப் பிறகுதான் உற்பத்தி அதிகமாக (உச்ச நிலையில்) இருக்கும். குறைந்தது 14 மணிநேர சூரிய ஒளி கிடைக்கச் செய்தால் மட்டுமே நல்ல முட்டை உற்பத்தி இருக்கும். வாத்துகளுக்கு நாளொன்றுக்கு காலை 1 மாலை இரு வேளை தீவனம் அளித்தல் சிறந்தது. நன்கு அரைக்கப்பட்ட தீவனங்களையோ உருளை (குச்சித்) தீவனங்களையோ அளிக்கலாம். எனினும் அரைக்கப்பட்ட ஈரமான தீவனங்களே பெரிதும் உகந்தவை. தீவனமானது 18% புரதம், 2650 கிலோ கலோரி/கி.கி ME ஐப் பெற்றிருக்க வேண்டும். தீவனத் தொட்டி இடைவெளி வாத்து ஒன்றிற்கு 10 செ.மீ தீவிர வளர்ப்பு முறையில் தரை இடஅளவு ஒரு வாத்திற்கு 3710 – 4650 செ.மீ2 அளவு தேவைப்படும். ஆனால் இதுவே கூண்டு வளர்ப்பு முறையில் 1380 செ.மீ2 போதுமானது. மித தீவிர வளர்ப்பு முறையில் தரைஇடஅளவு 2790 செ.மீ2 அளவு இரவிலும் 929-1395 செ.மீ2 அளவு பகலில் உலர்த்தவும் தேவைப்படுகிறது. முட்டையிடும் வாத்துகளுக்கு முட்டைக் கூடுகள் அவசியம். 30 செ.மீ அகலம், 45 செ.மீ ஆழம் 30 செ.மீ உயரம் கொண்ட முட்டைக் கூடுகள் போதுமானவை. ஒரு கூடைப்பெட்டி 3 வாத்துகளுக்கு அளிக்கலாம்.

முட்டையிடும் வாத்துகளுக்கான உணவு அடடவனை

வ.எண் கலவைப்பொருட்கள் (விகிதம்) அளவு
1. மக்காச்சோளம் 42.00
2. பாலிஸ் செய்யப்பட்ட அரிசி 20.00
3. எள்ளுப் பிண்ணாக்கு 7.00
4. சோயாபீன் துகள் 14.00
5. உலர்த்தப்பட்ட மீன் 10.00
6. கடற்சிற்பி ஓடுகள் 5.00
7. தாது உப்புக்கலவை 1.75
8. உப்பு 0.25
                   மொத்தம் 100

ஒவ்வொரு 100 கி.கி தீவனக்கலவையுடன் விட்டமின் ஏ 600 விட்டமின் பி2 600 மி.கி மற்றும் நிக்கோட்டினிக் அமிலம் 5 கி. சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Leave A Response