மோர் கரைசல் (Butter Milk Solution)

1. அரப்பு மோர் கரைசல்

இதுவும் ஒரு வகை வளர்ச்சி ஊக்கியே. அரப்பு இலை என்று அழைக்கப்படும் உசிலை மர இலைகளை 2 கிலோ பறித்து வந்து தேவையான நீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.

தேவையான பொருட்கள்

  1. அரப்பு இலைத்தூள் – 1 லிட்டர்
  2. இளநீர் -1 லிட்டர்
  3. புளித்த மோர் -5 லிட்டர்

செய்முறை

  • அரப்பு இலைத்தூள் ஒரு லிட்டர் படியில் அளந்து எடுத்துக்கொள்ளவும்.
  • இதனுடன் 1 லிட்டர் இளநீர், 5 லிட்டர் புளித்த மோர் ஊற்றி கலக்கவேண்டும்.
  • பின்னர் இந்த கரைசலை பானையில் ஒரு வாரம் வைத்திருக்க வேண்டும்.
  • பிறகு 10 லிட்டர் நீரில் 200 மில்லி அரப்பு மோர் கரைசலை கலந்து வயலில் தெளிக்கலாம்.

பயன்கள்

  • இது பயிர்களை வளர்க்கிறது.
  • பூச்சிகளை விரட்டுகிறது.
  • பூசண நோயைத் தாங்கி வளர்கிறது.
  • இதில் ஜிப்பர்லிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கியின் திறன் உள்ளது.
  • ஜிப்ராலிக் ஆசிட் மற்றும் பிராந்தி செலவு ஆயிரம் என்றால் இந்த கரைசலை தயாரிக்க ஐம்பது ரூபாய் போதும்.
  • குறைந்த செலவில் பயிரை எளிதாக பாதுகாக்க முடியும்.
  • அரப்பு மோர் கரைசலை பூப் பிடிக்கும் பருவத்தில் தெளிப்பதால் பயிர் வளர்ச்சி வேகமாக காணப்படும். நிறையப்பூக்கள் பூக்கும்.

2. தேமோர் கரைசல்

தேவையான பொருட்கள்

  1. புளித்த மோர் -5 லிட்டர்
  2. இளநீர் -1 லிட்டர்
  3. 10 தேங்காய்களின் துருவல்
  4. அழுகிய பழங்கள் 10 கிலோ
  5. ஒரு கலன்

செய்முறை

  • முதலில் புளித்த மோர் மற்றும் இளநீரை ஒரு கலனில் ஊற்றி கொல்லவும்.
  • பின்னர் தேங்காய்களின் துருவல், அழுகிய பழங்கள் இவற்றை ஒரு சாக்கு பையில் பொட்டலம் போல் கட்டி கலனில் போடவும்.
  • 7-ம் நாளில் ஊறல் கரைசல் தயாராகிவிடும்.
  • 1 ஏக்கருக்கு 10 லிட்டர் தண்ணீரில் ½ லிட்டர் தேமோர் கரைசல் சேர்த்து தெளிக்கவும்.
Print Friendly, PDF & Email
Please follow and like us:
About the Author
Arulkumar

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

2 Comments so far. Feel free to join this conversation.

  1. Kumar March 8, 2016 at 2:21 pm -

    Hi Arul..
    Very good Information on Organic Farming. I am very happy to see you on this blog..

    • Arulkumar
      Arulkumar March 8, 2016 at 2:23 pm -

      Hi Kumar,
      Thanks for you support.

Leave A Response

You must be logged in to post a comment.