You Are Browsing ‘கால்நடைகள்’ Category

கால்நடைகளின் உடல் வளர்ச்சி, கருத்தரிப்பு, பராமரிப்பு மற்றும் உற்பத்தி இவற்றில் தாது உப்புகள் பெரும் பங்கு வகிக்கின்றன. தாது உப்புகள் எனப்படும் அங்ககப் பொருட்கள் கால்நடைகளின் தீவனத்தில் குறைந்த அளவே தேவைப்படுபவை என்றாலும் இவை அறவே இல்லாவிட்டாலோ அல்லது அலவு குறைந்து காணப்பட்டாலோ உடலில் குறைப்பாட்டு அறிகுறிகள் உண்டாகும். இத்தகைய குறைபாடுகளைத் தக்க தருணத்தில் தாது உப்புகளைத் தீவனத்தில் சேர்ப்பதன் மூலம் நீக்கலாம். இக்குறைப்பாட்டினை விரைவில்...

தரமான பால் உற்பத்திக்கு பால் கறக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இடத்தை சுத்தம் செய்த பிறகு ஆங்காங்கே தண்ணீர் தெளித்து விட வேண்டும், இதனால் தூசிகள் பறக்காது. உலர் தீவனம், அடர் தீவனம், பச்சை தீவனம் போன்ற ஆரோக்கிய தீவனங்களை அளிக்க வேண்டும். மாட்டு கொட்டகையில் போதிய வெளிச்சம், இட வசதி, காற்றோட்டம் அமைந்திருக்க வேண்டும். கொட்டகையில் மழை நீர், கழிவு நீர், சாக்கடை தேங்காத வாறு நீர் செல்வதற்கான வழி அமைந்திருக்க வேண்டும்.   பால் கேன் எப்பொழுதும்...

சைலேஜ் என்பது பதப்படுத்தி சேமிக்கப்படும் கால்நடைத் தீவனமாகும். இதனை ஊறுகாய்ப் புல் என்று தமிழ்ப்படுத்தியுள்ளனர். நமது உணவு வகைகளில் ஊறுகாய் என்பது குறிப்பிட்ட பக்குவத்தில், பதத்தில் சேமித்து நீண்ட காலம் வைக்கப்படும் உப உணவு. புதிய ஊறுகாயைவிட, சேமித்து வைக்கப்படும் ஊறுகாய்க்கு சற்றே கூடுதல் சுவை என்பது அனைவரும் அறிந்ததே. ஜாடியை எப்போது திறந்தாலும் நாக்கின் சுவை முடிச்சுகளை உமிழ்நீரால் மிதக்கவைக்கும் ஊறுகாயைப் போலவே, ‘சைலேஜ்’ என ஆங்கிலத்தில்...

இன்னைக்கு இருக்குற அவசர உலகத்துல மாடு சினை நிக்கலைனா உடனே விற்க போயிடுறோம். அது என்ன பண்ணும் பாவம், எல்லாமே இரசாயனம் தெளிச்ச தீணி தான் போடுறோம், தீவணம்ன்னு வெளிய பெருக்கான் கழிவு மாறி எதையோ வாங்கி போடுறோம், அதெல்லாம் எதுல செய்யுறாங்க என்னென்னா கூட சேர்க்குறாங்கன்னு நிஜமா நமக்கு தெரியுமா? பண்றதெல்லாம் தப்பு நாம தான், இதனால தான் மாட்டுக்கு தற்காலிக மலட்டுத்தன்மை வருது. இன்னைக்கு இருக்குற நிலைல தீணி பெரும் பாடு தான். இருந்தாலும் புதுசா கறவை மாடு...

தீவனப்பயிர்களின் இராணி என அழைக்கப்படும் குதிரை மசால் புரதச்சத்திற்காகவும், அதிக சுவைக்காகவும் கால்நடைகளால் பெரிதும் விரும்பி உண்ணப்படுகின்றது. பயறு வகையைச் சார்ந்த தீவனப்பயிர்களில் மிகவும் முக்கியமான ஒன்று குதிரைமசால். மத்திய, மேற்கு ஆசியாவை தாயகமாகக் கொண்ட குதிரைமசால் ஒரு பல்லாண்டு காலப்பயிராகும். தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் பரவலாக பயிரிடப்பட்டு வருகின்றது. இயற்கை புரத வங்கி...

கோடைக்காலங்களில் கால்நடைகளுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி மூலிகை மருத்துவம் குறித்து விளக்குகிறார், தஞ்சாவூரில் உள்ள கால்நடை மூலிகை மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர். புண்ணியமூர்த்தி. வெப்பத்தின் தாக்கம் “கோடைக்காலங்களில் வெப்பம் அதிகமாகத் தாக்கினால், மாடுகளுக்கு மூச்சு வாங்குதல், பால் உற்பத்தி குறைதல், கருவுறத் தடைபடுதல், உடல் எடை குறைதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள்...