You Are Browsing ‘மூலிகைகள்’ Category

தற்போது நிலவி வரும் தட்பவெப்ப நிலை காரணமாக,எலுமிச்சையில் அதிக மகசூல் கிடைக்கிறது. அதே நேரத்தில், 15 வகையான பூச்சிகளின் தாக்குதலால், எலும்ச்சையில் பெரும் சேதமும் ஏற்பட்டு வருகிறது. இலையைக் குடையும் புழு, சில்லிட் ஒட்டுப் பூச்சி, அசுவிணி, கறுப்பு ஈ மற்றும் தாவர நூல் புழுக்களின் தாக்குதலால், எலும்ச்சை செடிகள் சேதமடைந்துள்ளன. இலையைக் குடையும் புழுவானது, இளம் இலைகளைக் குடைந்து புறத் தோல்களுக்கு இடையிலான திசுக்களை உள்கொண்டு சேதத்தை விளைவிக்கிறது....

முருங்கை குச்சியை நட்டுவைத்தால் வளரும் என்பது அனைவருக்கும் தெரியும்; இதேபோல வேப்பம் குச்சியையும் நட்டு வளர்க்கலாம். பட்டுப்போன மரங்களையும் துளிர்க்கச் செய்யும் வைக்கோல் தொழில்நுட்பம் நாம் வசிக்கும் வீடாக இருந்தாலும், விவசாயம் செய்யும் இடமாக இருந்தாலும் அங்கு மரங்கள் இருப்பதைப் பெரும்பாலானோர் விரும்புவதுண்டு. ஆனால், அதைப் பாதுகாத்து வளர்ப்பது கொஞ்சம் சவாலான விஷயம்தான். அந்த சவாலான விஷயங்கள்தாம் மரம் வளர்க்கும் ஆசையையே போக்கிவிடுகிறது....

சோயிக்கீரை, மதுரிகை என்று பல பெயர்களை கொண்ட சதகுப்பை ஒரு மருத்துவ செடி ஆகும். பார்ப்பதற்கு சீரக செடியை போல் தோற்றமளிக்கும் இது நாலைந்து அடி உயரம் வளரக் கூடியது. மலைகளிலும் நிலத்திலும் பயிரிடப்படும் குறுஞ்செடி. குடை விரித்தாற்போல் நரம்புகள் தோன்றும். அவற்றின் இடையே சிவப்பு மலர்கள் பூக்கும். விதைகள் பழுத்ததும்  தனியாகப் பிரிக்கப்படும். சோயிக் கீரையின் இலைகள் இனிப்பும் கார்ப்பும் கலந்த சுவையுடன் இருக்கும். உணவுக்கு ஏற்றது, கீரைக்கடைகளில் ...

கிணற்றுப்பாசான் சூரியகாந்தி குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரமாகும். இது வெட்டுக்காயப் பூண்டு என்று அழைக்கப்படும் இது பரவலாக களைச் செடியாக அறியப்படுகிறது. மூக்குத்ததிப்பூண்டு, வெட்டுக்காயபச்சிலை, காயப்பச்சில்லை, செருப்படித்தழை மற்றும் தென்தமிழகத்தில் பேச்சு வழக்கில் தாத்தாப்பூச்செடி என்று பல பெரியர்களில் இது அழைக்கப்படுகின்றது. டிரிடாக்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றது. இதன் தாயகம் மத்திய அமெரிக்கா. இந்த செடி சிறியதாகவும்,...

தமிழகத்தில், சேலம் அருகே உள்ள சேர்வராயன் மலைப்பகுதிகளிலும், மேற்குத் தொடர்ச்சி மலையில் சில இடங்களிலும், விளையக்கூடிய ஒரு மரம் தான் சாம்பிராணி மரம் எனப்படுகிறது. வட இந்தியாவில், இராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் காணப்படும் சாம்பிராணி மரங்கள் இன்று, உலகில் மிகவும் குறைந்துவரும் மரங்களில் ஒன்றாக இருக்கின்றன. சாம்பிராணி மரங்களிலிருந்து இரப்பர் பால் போல வடியும் ஒரு பிசினே, வீடுகளில் நாம் உபயோகிக்கும் சாம்பிராணி. இறை வழிபாடுகளில் மத...

எலுமிச்சை பிளவை நோய்: சாந்தோமோனாஸ் சிட்ரை நோய் அறிகுறிகள் இந்நோயானது சொரிநோய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நோய் இலைகள், கிளைகள், முதிர்ந்த கிளைகள், பழங்கள், முட்கள் போன்ற எல்லா பாகங்களையும் தாக்கக்கூடியது. இலைகளில் முதலில் சிறிய வட்ட வடிவ நீர்க்கசிவுடன் கூடிய புள்ளிகள் தோன்றும். நோய் முற்றிய நிலையில் புள்ளிகள் நிறமாக மாறி, நடுப்பகுதி சொரசொரப்பான தக்கை போல குழிவுடனும் காணப்படும். பழங்களிலும் இதேபோன்று நீர்க்கசிவுடன் கூடிய புள்ளிகள் தோன்றி...