You Are Browsing ‘கீரைகள்’ Category

சோயிக்கீரை, மதுரிகை என்று பல பெயர்களை கொண்ட சதகுப்பை ஒரு மருத்துவ செடி ஆகும். பார்ப்பதற்கு சீரக செடியை போல் தோற்றமளிக்கும் இது நாலைந்து அடி உயரம் வளரக் கூடியது. மலைகளிலும் நிலத்திலும் பயிரிடப்படும் குறுஞ்செடி. குடை விரித்தாற்போல் நரம்புகள் தோன்றும். அவற்றின் இடையே சிவப்பு மலர்கள் பூக்கும். விதைகள் பழுத்ததும்  தனியாகப் பிரிக்கப்படும். சோயிக் கீரையின் இலைகள் இனிப்பும் கார்ப்பும் கலந்த சுவையுடன் இருக்கும். உணவுக்கு ஏற்றது, கீரைக்கடைகளில் ...

முடக்கத்தான் என்றால் என்ன முடக்கத்தான் என்பது கீரை கொடி வகையைச் சேர்ந்தது. இது ஒரு ஏறு கொடி. வேலிகளில் தானாக படர்ந்து வளரக் கூடியது. இதன் தண்டுகள் கம்பி போன்று மெல்லியதாகவும், வலிமையாகவும் இருக்கும். இலைக் காம்பு நீண்டு இருக்கும். இதன் இலை துவர்ப்புச் சுவையுடையது. ஒவ்வொரு இலைக் காம்பும் மூன்று பிரிவாகப் பிரிந்து, ஒவ்வொரு பிரிவுக்கும் மூன்று இலைகள் வீதம் மொத்தம் ஒன்பது இலைகள் இருக்கும். அதாவது ஒவ்வொரு இலைக் காம்பும் ஒன்பது கூட்டிலைகளைக் கொண்டிருக்கும். கம்பி...