You Are Browsing ‘இயற்கை விவசாயம்’ Category

மூக்குத்தி மற்றும் கம்மல் செடி என அழைக்கப்படும் அசோலா மிகச்சிறிய இலைகளையும், துல்லியமான வேர்களை கொண்ட தண்ணீரில் மிதக்ககூடிய பெரணி வைகையைச் சேர்ந்த தாவரம். இது கால்நடைகளுக்கு சிறந்த மாற்று தீவனமாக விளங்குகிறது.  35-36 டிகிரி செல்சியஸ் வெப்பம் அசோலாவின் வளர்ச்சிக்கு தேவைப்படுகிறது. அசோலாவை உற்பத்தி செய்யும் முறை நிழற்பாங்கான இடத்தில் 10 அடி நீளம், 2 அடி அகலம், ஒரு அடி ஆழம் கொண்ட பாத்தி அமைக்கவும். பாத்தியின் அடித்தளத்தில் சில்பாலின் ஷீட்டை சீராக...

தென்னை மரங்கள் பெற்ற பிள்ளையை போல் காப்பாற்றும் என்பார்கள். பிள்ளைகளை போல வளர்த்த தென்னை மரங்கள் கஜா புயலில் சாய்ந்து கிடப்பதை பார்த்து கத்தி கலங்கி நிற்கிறார்கள் நம் விவசாயிகள். சமூக ஊடகங்கள், வலைதளங்களில், “சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்கலாம்” என்று வரும் தகவல்களால் விவசாயிகள் குழப்பத்தில் உள்ளனர். இது பற்றி துறைசார் வல்லுநர்கள் கூறியது, தென்னை மரங்கள் மறுநடவு “சாய்ந்த தென்னை மரங்களை மறுநடவு செய்வது என்பது சாத்தியமே இல்லாத...

இயற்கை உரம் பயன் படுத்துவதால், மகசூல் 15 சதவீதம் அதிகரித்து வருகிறது. தென்னையில் நல்ல மகசூல் கிடைப்பதற்காக, விவசாயிகள் பெரும் பாலானோர், காம்ப்ளக்ஸ் யூரியா, பொட்டாஷ், போன்ற ரசாயன உரங்களையும், சிறிது இயற்கை உரங்களையுமே சேர்த்து உரமாக இட்டனர். காளான் விதை, காயர் வேஸ்ட்,  கோழிஎரு, கற்றாழை, மாட்டுச் சாணம், எருக்கு இலை, சப்பாத்திக்கள்ளி, சணப்பை, கடலை புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு, மஞ்சள் தூள், பூண்டு,  கோமியம், பசுந்தழையை பயன்படுத்தி சில விவசாயிகள், இயற்கை...

மண்புழுதான் விவசாயிகளுக்காக இரவு பகல் என 24 மணி நேரமும் உழைக்கும் உயிரினம். அதனை நாம் பக்குவமாகப் பயன்படுத்தினால் பலமடங்கு பயன் அடையலாம். மண்புழு உரம் தயாரிக்கும் முறை உரம் தயாரிப்பதற்கு ஏற்ற அளவு தொட்டி கட்டி அதில் ஒரு அடி உயரம் வரைக்கும் தேங்காய் மட்டைகள் அடுக்கப்படுகிறது. ஒரு அடி வரைக்கும் பண்ணைக்கழிவுகள், காய்கறிக் கழிவுகள், தென்னை நார்க் கழிவுகளில் ஏதாவது மக்கும் கழிவுகளை ஒன்றும், பின்பு அரையடி அளவுக்கு மாட்டுச் சாணமும் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு...

தண்டு மற்றும் காய் துளைப்பான் செடி சிறிதாக இருக்கும் போது, மென்மையான தண்டுகளில் இதன் புழுவானது துளையிட்டு, பின்னர் கீழ் நோக்கி குடைந்துக் கொண்டு செல்லும். இதனால் வளரும் முனைகள் காய்ந்தும், தண்டானது வாடி கீழே தொங்கியும் காணப்படும். காய்களில் புழுக்கள் துளைத்து, உட்பகுதியை தின்பதனால், காய் உருமாறி, சந்தை விலையை இழந்துவிடும். தீர்வு : தண்டு மற்றும் காய் துளைப்பானின் பொறி பயிராக சோளம்/மக்காசோளத்தை, வெண்டையை சுற்றி வளர்க்க வேண்டும். இலைதத்து பூச்சி இளம்...

இயற்கை வேளாண்மையில் நம் முன்னோர்கள் அதிகளவு ஜீவாமிர்தம் பயன்படுத்திக்கின்றனர். ஜீவாமிர்தம் மண்ணீலுள்ள நுண்ணுயிரிகளை பெருக்கும் ஊடகம், இது ஊட்டச்சத்துகளை செடிகள் எடுத்துகொல்லும் வேலையைச் செய்கிறது. இயற்கை வேளாண்மையில் ஜீவாமிர்த்தம் பயன்படுத்தி நல்ல பயன்களை விவசாயிகள் அடைந்து நல்லதொரு பசுமையான மாற்றத்தை அடையலாம். ஜீவாமிர்தம்  தயாரிக்கும் முறை ஜீவாமிர்தம் எனப்படுவது நாட்டு பசுஞ்சாணம், நாட்டு பசுமூத்திரம், கருப்புநிற வெல்லம், தானிய மாவு,...