You Are Browsing ‘தென்னை’ Category

தென்னை மரங்கள் பெற்ற பிள்ளையை போல் காப்பாற்றும் என்பார்கள். பிள்ளைகளை போல வளர்த்த தென்னை மரங்கள் கஜா புயலில் சாய்ந்து கிடப்பதை பார்த்து கத்தி கலங்கி நிற்கிறார்கள் நம் விவசாயிகள். சமூக ஊடகங்கள், வலைதளங்களில், “சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்கலாம்” என்று வரும் தகவல்களால் விவசாயிகள் குழப்பத்தில் உள்ளனர். இது பற்றி துறைசார் வல்லுநர்கள் கூறியது, தென்னை மரங்கள் மறுநடவு “சாய்ந்த தென்னை மரங்களை மறுநடவு செய்வது என்பது சாத்தியமே இல்லாத...

இயற்கை உரம் பயன் படுத்துவதால், மகசூல் 15 சதவீதம் அதிகரித்து வருகிறது. தென்னையில் நல்ல மகசூல் கிடைப்பதற்காக, விவசாயிகள் பெரும் பாலானோர், காம்ப்ளக்ஸ் யூரியா, பொட்டாஷ், போன்ற ரசாயன உரங்களையும், சிறிது இயற்கை உரங்களையுமே சேர்த்து உரமாக இட்டனர். காளான் விதை, காயர் வேஸ்ட்,  கோழிஎரு, கற்றாழை, மாட்டுச் சாணம், எருக்கு இலை, சப்பாத்திக்கள்ளி, சணப்பை, கடலை புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு, மஞ்சள் தூள், பூண்டு,  கோமியம், பசுந்தழையை பயன்படுத்தி சில விவசாயிகள், இயற்கை...

சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக தண்ணீர்ப் பற்றாக்குறையால் எங்கள் பகுதியில் தென்னை விவசாயம் பாதிக்கப்பட்டது. ஆனால், குறைந்த தண்ணீரிலும் எங்கள் தென்னை சிறப்பான மகசூலைக் கொடுத்து வருகிறது. அதற்குக் காரணம் ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பம்தான். மழை நீர் சேகரிக்கும் மண்புழுக்கள் மூடாக்கு, ஜீவாமிர்தம் இவை இரண்டும்தான் தென்னையைச் செழிக்க வைக்கின்றன. மரத்திலிருந்து விழும் தென்னை மட்டைகளில், அடிமட்டையை மட்டும் வெளியே எடுத்துவிட்டு,...

தென்னை பணப்பயிர்களில் ௐன்று. செரியான உரநிர்வாகத்தை மேற்கொள்வதன் மூலம் விவசாயிகள் தென்னையில் அதிக மகசூலை பெற்றிட முடியும். உரங்களில் உள்ள சத்துக்கள் இயற்கை உரங்கள் விளைச்சலை உறுதி செய்ய இயற்கை உரங்களான தொழுஉரம், வேப்பம் புண்ணாக்கு மற்றும் இலுப்பை புண்ணாக்கு போன்றவற்றை கலந்து ஆண்டுக்கு ஓரிரு முறைகள் இட வேண்டும். ரசாயன உரங்கள் தென்னையில் வளர்ச்சிக்கு அவசியமாக ஒரு சில சத்துக்கள் ரசாயன உரங்களிலும் உள்ளன. மணிச்சத்து அவற்றில் மிக முக்கியமானது....