You Are Browsing ‘இயற்கை பூச்சிக்கொல்லி, கரைசல்கள்’ Category

கத்தரி, தக்காளி, வெண்டை, அவரை உள்ளிட்ட காய்கறிச் செடிகளில் நோய்த் தாக்குதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இதை நோய் வருவதற்கு முன்பே கட்டுப்படுத்தி விட வேண்டும். இதற்கு மூலிகைப் பூச்சிவிரட்டி அதிமுக்கியம். புகையிலை, பூண்டு, பச்சை மிளகாய், வேப்பிலை, நொச்சி இலை இவை ஐந்தையும் சம அளவில் எடுத்து உரலில் போட்டு இடித்து, மூழ்கும் அளவு மாட்டுச் சிறுநீரில் ஊறவைத்து, நன்றாக கொதிக்க வைத்து, பிறகு ஆறவைக்க வேண்டும். 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி வீதம் கலந்து...

பல்வேறு பூஞ்சாண நோய்கள் அதிகப்படியான ஈரம் மற்றும் குறைந்த காற்றோட்டம் ஆகிய காரணங்களால் பரவுகின்றது. செடிகளை மிக நெருக்கமாக நட்டால் தண்ணீர் மிகவும் மெதுவாக ஆவியாகிறது. இதனால் அதிகப்படியான ஈரம் எப்பொழுதும் இருக்கும். எனவே செடிகளை நெருக்கமாக வளர்க்கக் கூடாது. நன்றாக வளர்ந்த செடிகளுக்குத் தேவையான இடத்தைக் கொடுக்க வேண்டும். ஏற்கெனவே விட்ட தண்ணீர் காய்ந்த பிறகே மீண்டும் செடிகளுக்கு தண்ணீர் விட வேண்டும். பாதிக்கப்பட்ட செடிகள் அல்லது இலைகளை உடனுக்குடன்...

ஆமணக்கை பூச்சிகளின் பதிவேடு என்று கூறலாம், எந்த பூச்சி வந்தாலும் முதலில் ஆமணக்குச் செடியைதான் நாடும். இதை ஆங்கிலத்தில் TRAP CROP என்று கூறுவார்கள். ஆமணக்குச் செடிகளை வயலின் ஓரத்தில் நடலாம், எண்ணிக்கை குறைவாகவே நடவேண்டும். ஆமணக்குச் செடியை அடிக்கடி பரிசோதித்து, தீமைசெய்யும் பூச்சிகளைக் கண்டால் அப்பூச்சிகளை சேகரித்து அழித்து விட வேண்டும். அதிகமாக ஆமணக்கு நடக்கூடாது, நெருக்கமாகவும் இருக்கக்கூடாது, வயலின் நடுவிலும் நடக்கூடாது. கட்டுப்படும் பூச்சிகள் வெள்ளைக்...

மாவுப்பூச்சி மேலாண்மை உலகில் பல வகையான மாவுப் பூச்சிகள் உள்ளன. அவற்றில் ஒரு வகையான மாவுப்பூச்சிகள்தான் பாராகாக்கஸ் மார்ஜினேட்டஸ் (Para Coccus marginatus) எனும் பப்பாளி மாவுப்பூச்சி. இப்பூச்சியின் தாக்குதல் தமிழ்நாட்டில் முதன் முதலாக ஜுலை 2008 ஆம் ஆண்டு கோயமுத்தூர் பகுதியில் பப்பாளியில் கண்டறியப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்திலும் இப்பூச்சியின் தாக்குதல் காணப்படுகிறது. இப்பூச்சிகள் பப்பாளியை மட்டும் அல்லாது மல்பரி, மரவள்ளி, பருத்தி, கொய்யா, கத்தரி, தக்காளி,...

பயிர் வளர்வதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வளங்கி பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பவை பயிர் வளர்ச்சி ஊக்கி ஆகும். புகையிலை கரைசல், மண்புழு உரம், இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல், மோர் கரைசல், வேம்பு கரைசல், பஞ்சகவ்யம், பீஜாமிர்தம், அமிர்த கரைசல், ஜீவாமிர்தம், அக்னி அஸ்திரம் போன்றவை இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் சில பயிர் வளர்ச்சி ஊக்கிகள் ஆகும். புகையிலை கரைசல் தயாரித்தல் 150 கிராம் நீட்டு புகையிலையை எடுத்துக்கொண்டு சிறு சிறு துண்டுகளாக வெட்ட...

டி.ஏ.பி கரைசல் – சிறந்த இலைவழி ஊட்டம் பயிர்கள் பூக்கும் தருணத்தில் மணிச்சத்தின் தேவை அதிகம். பயிர்கள் நிறைய பூக்கவும், காய்க்கவும், காய்களில் மணி நிறைய பிடிக்கவும், மணிச்சத்து நிறைய தேவைப்படுகிறது. மணிச்சத்தை இலை மூலமாக வழங்கிட ஏற்ற உரம் டி.ஏ.பி. அதில் 46 சதம் மணிச்சத்து நீரில் கரையும் வடிவில் உள்ளது. இதனைச் செடிகள் எளிதில் உறிஞ்சிக் கொள்ள வாய்ப்பாக 18 சதம் தழைச்சத்தும் இணைந்திருக்கிறது. மற்ற சத்துக்களை விட தழைச்சத்தையே பயிர்கள் விரும்பி எடுத்துகொள்ளும்...