You Are Browsing ‘சித்த மருத்துவம்’ Category

நிலவேம்பு என்பதே இந்தியா, இலங்கை மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கிராமப் பகுதிகள் மற்றும் இயற்கை வளம் நிறைந்த காடுகளில் விளைகின்ற ஒரு அற்புத மூலிகை செடியாகும். பன்னெடுங்காலமாகவே நிலவேம்பு சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், சமீப வருடங்களில் டெங்கு சுரத்திற்கு எதிராக நிலவேம்பு கஷாயம் மருந்தாக பயன்படுத்தப்பட்ட பிறகே இந்த மூலிகை பற்றி பலரும் அறிந்து கொண்டுள்ளனர். தற்போது பல இடங்களில் பல்வேறு தரப்பினராலும்...

காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் உண்டால் கோலை ஊன்றி குறுகி நடக்கும் கிழவனும், கோலை வீசி குலாவி நடப்பானே’ – இது சித்தர்கள் வாக்கு. உடலை அழியாத் தன்மைக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்றால், 60-க்கும் மேற்பட்ட காயகல்ப முறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக உடல், மனம், ஆன்மாவைத் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உள்ளது’ என்று கூறும் திருமூலர் அதை `அமுதம்’ என்று குறிப்பிடுகிறார். அதாவது, `தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது...

இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எளிமையாக மிக குறைந்த செலவில் திருப்ப பெற்ற ஒரு விஞ்ஞானயின் உண்மை சம்பவம் என்பதாலும், தேதி வாரியாக செயல்பாடுகள் (ஆங்கில வலைப்பூவில் அவரது மகன் ) பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், மற்றவர…்களுக்கு நிச்சயம் பயனளிக்குமென்பதாலும் இதனை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த சில வருடங்களாக நமது ஊரில், குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிறுநீரக செயலிழப்பு (Kidney failure) அதிகம் நடைபெறுகிறது....

திரிபலா பொடி நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகள் சேர்ந்த ஒரு பாரம்பர்ய மருந்து திரிபலா. அனைத்து வயதினரும் சாப்பிடக்கூடிய இது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். செய்முறை கடுக்காய்த்தோல் – 100கிராம் நெல்லிவற்றல் – 100கிராம் தான்றிக்காய்த்தோல் – 100கிராம் மூன்றையும் தனித்தனியாகப் பொடித்து சலித்து,சம அளவு கலந்து கொண்டால், திரிபலா சூரணம் தயார்! அளவு: ஒன்று முதல் மூன்று கிராம் வரை  திரிபலா தரும் நன்மைகள் வறட்டு...

சளி சளி, காய்ச்சல் போன்ற அனைத்தும் நம் உடலில் உள்ள தேவையற்ற குப்பைகளை விரட்ட உதவும் சிகிச்சை ஆகும். அவற்றை விரட்ட சில குறிப்புகளை காணலாம். நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். கற்பூரவள்ளி (3 அல்லது 4)இலையின் சாற்றை சிறிதளவு தேன் கலந்து கொடுத்தால், குழந்தைகளின் இருமல் நீங்கும். தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட...

கடுக்காயின் மருத்துவ குணங்கள் பற்றி அறியும் முன், கடுக்காயை பற்றிய எங்கள் முந்தைய பதிவை படித்து விட்டு இந்த பதிவை வாசிப்பது மிகவும் உகந்தது. கடுக்காயை பயன்படுத்தும் முன் சுத்தி செய்வது மிகவும் அவசியம், கடுக்காயை அப்படியே பயன்படுத்தினால் அது நஞ்சாகும். சுத்தி செய்யும் முறை கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.கொட்டை நஞ்சு எனவே நீக்கிவிடவும். சதைப் பகுதியை இடித்து தூள் செய்து, சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவ...