ஆடுகளுக்கு அடர்தீவன தயாரிப்பு (Concentrated Fodder)

அடர்தீவன தயாரிப்பு

 • மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய தானியங்கள் 40 சதவிகிதம்
 • கடலை, எள், தேங்காய், சூரியகாந்தி, பருத்தி மற்றும் சோயா ஆகிய புண்ணாக்குகள் 25 சதவிகிதம்.
 • அரிசி மற்றும் கோதுமை தவிடு 30 சதவிகிதம்.
 • தாது உப்பு 2 சதவிகிதம்.
 • உப்பு 2 சதவிகிதம். ஊட்டச்சத்து கலவை 1 சதவிகிதம்
  இந்த அளவில் எடுத்துக் கொண்டு மாவாக அரைத்து, தண்ணீரில் பிசைந்து தினமும் குறிப்பிட்ட விகிதத்தில் கொடுக்கவேண்டும்.கர்ப்பிணி ஆடுகளுக்கு கொஞ்சம் அதிகப்படியாகக் கொடுக்கலாம்

  மேற்சொன்ன பொருட்களில் விலைக் குறைவாக கிடைப்பவற்றை கொஞ்சம் கூடுதலாகச் சேர்த்துக் கொண்டு, மற்றவற்றை குறைத்து சதவிகித அளவைப் பராமரிக்கலாம். அடர் தீவனம் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. கொடுத்தால் ஆடுகளின் எடை சீக்கிரமே அதிகரித்து கூடுதல் லாபத்துக்கு வழிவகுக்கும்.

அடர்தீவன தயாரிப்பு

வெள்ளாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு அதன் வயதிற்கேற்ப அடர்தீவனம் அளிக்க வேண்டும்.

 • 3மாதம் முதல் 6 மாத குட்டிகளுக்கு 25 கிராம் முதல் 35 கிராம் தீவனமும்,
 • 6 மாதம் முதல் 12மாதம் வரையில் 50 கிராம் முதல் 100 கிராம் வரையிலும்,
 • சினைப்பருவத்தில் 175 கிராம்,
 • ஈன்ற ஆடுகளுக்கு 200 முதல் 250 கிராம்,
 • கிடாக்களுக்கு 300 கிராம் என்ற அளவிலும் அளிக்க வேண்டும்.

அடர்தீவனம் என்ற தீவனத்தின் கலவை (100 கிலோவிற்கு) விகிதம் கீழ்கண்ட அளவில் இருக்க வேண்டும்.

 • மக்காச்சோளம் மற்றும் கம்பு 35 முதல் 40 கிலோ,
 • ராகி மற்றும் இதர தானியங்கள் 10 கிலோ,
 • கடலைப்புண்ணாக்கு 20 கிலோ,
 • கோதுமை தவிடு மற்றும் அரிசி தவிடு 10 கிலோ,
 • துவரம் பொட்டு மற்றும் பாசிப் பொட்டு 17 கிலோ,
 • தாதுஉப்பு 2 கிலோ,
 • சாதாரண உப்பு 1கிலோஎன்ற அளவில் 100 கிலோ அடர்தீவனத்தின் பகுதிகளாக இருக்க வேண்டும்.

குட்டிகள் பிறந்து மூணாவது மாசத்துல, தாய்ப்பால் குடிக்குற காலத்துலயே அரை கிலோ பசுந்தீவனம் கொடுக்க அரம்பிச்சுடணும். நாலாவது மாசம் தினம் ஒன்றரைக் கிலோவும், அஞ்சாவது மாசத்தல 3 கிலோவும் கொடுக்கணும். அதுக்கப்பறம் வளர்ச்சியைப் பொறுத்து அளவைக் கூட்டிக்கலாம். எட்டு மாச வயசுல ஒவ்வொரு ஆட்டுக்கும் தினம் 5 கிலோ தீவனமும், அதுக்கப்பறம் 7 கிலோவும் கிடைக்குற மாதிரி பாத்துக்கணும். ரெண்டு வகையான ஆடுகளுமே, உயிர் எடைக்கு ஒரு கிலோ 150 ரூபாய்னு விலை போகுது.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Leave A Response

You must be logged in to post a comment.