மடிவீக்க நோய் (Diseases in Cows)

மடிவீக்க நோய் நுண்கிருமிகள் கால்நடையின் மடியை தாக்குவதால் நோய் ஏற்படுகிறது. மாடுகள் நன்கு பராமரிக்காமல் அசுத்தமாகவும் மற்றும் சேறான தரையில் வைத்திருப்பதாலும் இந்நோய் உண்டாகிறது. மடியில் ஏற்படும் காயங்கள் அல்லது பாலுட்டும்போது கன்றுகளால் ஏற்பட்ட காயங்கள் அல்லது தவறான பால் கறக்கும் முறைகளினால் ஏற்பட்ட காயங்கள் ஆகியவை இந் நோய் கிருமித் தொற்று ஏற்படக் காரணமாகின்றன. அதிகப் பால் கறக்கும் மாடுகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

மடிவீக்க நோய் தாக்குதலின் அறிகுறிக்கள்

 • மடிசுற்று வீக்கத்துடன் காணப்படும்
 • பாதிக்கப்பட்ட மடி சூடாகவும், வலியையும் கொடுக்கும். இந்த மடியை தொட்டுபார்த்து தெரிந்து கொள்ளலாம்.
 • நோயுற்ற மடியிலிருந்து கறக்கப்படும் பால் திரிந்து, தண்ணீராயும் நிறம் மாறியும் காணப்படும்
 • ஆதிகமாய்ப் பாதிக்கப்பட்ட மடியிலிருந்து வரும் பால் துர்நாற்றத்துடன் சலம் கலந்து காணப்படும்

மடிவீக்க நோயினால் ஏற்படும் பாதிப்புகள்

 • பால் உற்பத்தி குறையும்
 • மற்ற மாடுகளுக்கு இந்நோய் பரவுவதால் வருவாய் இழப்பு
 • மடிவீக்க நோயை குணப்படுத்த மிகுந்த சிரத்தை, மருந்து மற்றும் பணவிரையம் ஏற்படுகின்றது
 • சரியாகக் குணமாகாத மாடுகள் உபயோகமில்லாமல் போய்விடுகின்றன. இதனால் பண்ணையாளர்கள் நல்ல மாடுகளை இழக்க நேரிடுவதால் சரிவர பயன்படுத்த முடியாமல் நாட்டிற்கும் பொருளாதார நஷ்டம் உண்டாகிறது.

மடிவீக்க நோயை தடுக்கும் முறைகள்

மடிவீக்க நோய் வந்தபின் சிகிச்சை அளித்து குணப்படுத்துவதைவிட சுகாதாரமான முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் இந்த நோய் கிருமிகளின் எண்ணிக்கையையும், தாக்கத்தையும் குறைத்து நோய் வராமல் தடுக்க முடியும். மாட்டுத் தொழுவத்தில் சாணம், சிறுநீர் தேங்க விடாமல் கவனிப்பதுடன், கிருமி நாசினி மருந்தைக் கொண்டு தொழுவத்தை சுத்தம் செய்ய வேண்டும். பால் கறப்பதற்கு முன்னும், பின்னும் பொட்டாசியம் பெர்மாக்கனேட், அயோடோபோர் ஆகிய கிருமி நாசினிகளைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

மேலும் படிக்ககால்நடைகளின் இனப்பெருக்கத்துக்கு தாது உப்புக் கலவை

மடிவீக்க நோய் வராமல் தடுக்க

 • மடியில் காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது
 • தரையை சுத்தமாக இருக்கும்படி வைத்துக் கொள்வது
 • ஈக்கள் வராமல் தடுக்க சுண்ணாம்புத் தூளை தூவுவது
 • பால் கறக்கும்போது சுத்தமான இடத்திற்கு கொண்டு சென்று கறப்பது
 • பால் கறப்போர் கைகளை சோப்புப் போட்டுக் கழுவுவது
 • மடியை பால் கறக்கும் முன் சுத்தமாக கழுவிவிடுவது
 • பால் கறப்பது விரைவாகவும் முழுமையாக செய்யவும்
 • நோய் பாதித்த மடியிலிருந்து பாலைக் கடைசியாகத் தனிப் பாத்திரத்தில் கறப்பது, அதனை உபயோகப்படுத்தாமல் இருப்பது
 • நல்ல மாடுகளை முதலில் கறந்தபின்னர் நோயுற்ற மாடுகளை கறப்பது,
 • வருமுன் காக்கும் வழிமுறைகள்
 • பால் கறந்த பின் மடிக்காம்பு துவாரமம் பால் வரும்பாதையும் திறந்திருப்பதால் மாடுகள் படுத்தால் நோய்கிருமிகள் மடியில் நுழைய ஏதுவாகும்
 • பால் கறந்தவுடன் தீவனமளிப்பதால் 30- 40 நிமிடங்கள் வரை மாடுகள் படுப்பதைத் தவிர்க்கலாம்.
 • பால் வற்றிய மாடுகளில் மடியினை ஆரோக்கியமாகப் பராமரிக்க கால்நடை மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

கொசு, , எறும்பு தொல்லை தீர

 • சாம்பிராணி – 50 கிராம்
 • டீதூள் வடித்த சக்கை – 50 கிராம்
 • மஞ்சள் – 50 கிராம்
 • புதினா பொடித்தது – 50 கிராம்
 • வேப்பிலை – 50 கிராம்
  எல்லாவற்றையும் கலந்து புகை மூட்டம் போடவும்
Print Friendly, PDF & Email
Please follow and like us:

Leave A Response

You must be logged in to post a comment.