திறன்மிகு நுண்ணுயிரி ஈ எம் (E M Solution)

ஈ எம் 1 (EM 1) கரைசலை விவசாயிகளே தயார் செய்ய முடியும்.

தயார் செய்த கரைசலை மாதங்கள் வரை சேமித்து வைத்து கொள்ளலாம். தயாரித்த இரண்டு மாதத்திற்குள் உபயோகப்படுத்தும்பொழுது இதன் வீரியம் நன்றாக இருக்கும். நாட்கள் செல்ல செல்ல இதன் வீரியம் குறைய தொடங்கும்.

 தேவையான பொருள்கள்

  • நன்கு கனிவான வாழைபழம் ஒரு கிலோ.
  • பப்பாளி பழம் ஒருகிலோ.
  • பரங்கி பழம் ஒருகிலோ.
  • அச்சுவெல்லம் ஒருகிலோ.
  • நாட்டு கோழி முட்டை ஒன்று.

செய்முறை

எல்லா பழங்களையும் சிறு சிறு துண்டுகளாக வெட்டி, ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போடவும். பின்னர் முட்டையை உடைத்து போடவும், இறுதியாக வெல்லம் பொடியாக்கி போடவும், இந்த பொருள்கள் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு காற்று உள்ளே புகாதவாறு இறுக்கமாக மூடவும். 15 நாட்கள் கழித்து டப்பாவை திறந்து பார்க்கவும் உள்ளே பாலாடை போல படிந்து இருக்கும் (பாலாடை படிவம் வரவில்லை என்றால் ஒரு கைப்பிடி வெல்லம் பொடி உள்ளே போடவும்) 30- ம் நாள் எடுத்து பயன்படுத்தலாம். கரைசலை கலக்க கூடாது. சூரிய ஒளி படக்கூடாது. ஆறு மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம்.

பயன்கள்

  • நம்முடைய மண்ணில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
  • மகசூல் 20 சதம் முதல் 30 சதவீதம் வரை கூடுதலாக கிடைக்கும்.
    மண்வளம் பாதுகாக்கப்படும்.
  • பயிர்களுக்கு நோய்த் தாக்குதல் இருக்காது.
  • பூக்கள் அதிகமாக பூக்கும் மற்றும் காய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
  • வேர்வளர்ச்சி நன்றாக இருக்கும் .
குறிப்பு
இந்த கரைசலுடன் மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசலை கலந்து கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்தால் நல்ல பயன் கிடைக்கும். இதனுடன் மீன் அமிலத்தை கலந்து கொடுப்பதால் பூக்கள் உதிர்வது முற்றிலும் தடுக்கப்படுகிறது.

உபயோகிக்கும் முறை

தயாரிக்க தேவையான பொருட்கள்

  • 20 லிட்டர் கொள்ளளவு உள்ள கேன் – 1
  • வெல்லம் — 1 கிலோ
  • ஈயம் கரைசல் — 1 லிட்டர்
  • தண்ணீர் — 18 லிட்டர்

தயாரிக்கும் முறை

முதல் படி

முதலில் வெல்லம் 1 கிலோவை தட்டி துகள்களாக கேனின் உள்ளே கொட்டவும். 9 லிட்டர் தண்ணீரை ஊற்ற வேண்டும் பிறகு ஈயம் கரைசல் ஒரு லிட்டரை ஊற்ற வேண்டும் அதன்பிறகு திரும்பவும் 9 லிட்டர் தண்ணீரை ஊற்றி மூடிவிட வேண்டும்.

இரண்டாம் படி

5 நாட்கள் ஆனதும் அவற்றை தினமும் ஒருமுறை திறந்து விட்டு பிறகு மூடி வைக்கனும் இவ்வாறு 7 நாட்களில் ஈயம் கரைசல் அதிக அளவில் உற்பத்தியாகி விடும் அவற்றை பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் பயிர்கள்

  • அனைத்துவகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
  • ஒரு லிட்டர் கரைசலுடன் 400 லிட்டர் தண்ணீர் கலந்து தண்ணீர் பாயும் பொழுது ஊற்றி விடலாம் அல்லது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி கரைசல் என்ற விகிதத்தில் கலந்து மாலை வேளையில் பயிருக்கு தெளிக்க வேண்டும்.

( இதுபோன்ற கரைசல்கள் தயாரிக்கும்போது, எல்லா கரைசல்களிலும் வாழைப்பழம் உபயோகிக்கும்போது வாசனை (பஞ்சாமிர்த வாசனை ) நன்றாக இருக்கும்.)

ஈ.எம் 1 கரைசலை வேர்களின் மூலம் கொடுப்பதால் இதன் முழு பயன்களும் பயிர்களை சென்றடையும். இதனால் மண்ணில் நுண்ணுயிர்களின் பெருக்கம் அதிகமிருக்கும். இந்த கரைசலில் அணைத்து வகையான பாக்டீரியாக்களும் அடங்கியுள்ளது. இந்த கரைசலை பயிருக்கு கொடுப்பதால், பயிர்கள் நன்றாக வறட்சியை தாங்கி வளரும். இதனை தொடர்ந்து கொடுப்பதால் நிலத்தில் மண்புழுக்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

குறிப்பு
இயற்கை கரைசல்கள் அனைத்தையும் வேர்கள் மூலமாக கொடுப்பது நல்ல பலன்களை கொடுக்கும். இலைகளின் வாயிலாகவும் கொடுக்கலாம். அனால் வேர்களின் மூலம் பயிர்களுக்கு கொடுப்பதே சிறந்தது.

ஈயம் கரைசல் செய்முறை காணொளி விளக்கம்

Print Friendly, PDF & Email
About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.