வாழையிலை சாப்பாடு (Eating in Banana Leaf)

வாழையிலையில் சாப்பிடுவது என்பது, தமிழர்களுக்கே உள்ள தனிப்பெருமை.

வாழையிலையில் எல்லாரும் பரிமாறி விட முடியாது. அதற்கான அனுபவம் வேண்டும் -சிஸ்டம் தெரிய வேண்டும். எதை முதலில் பரிமாற வேண்டும் – பிறகு எதையெதை, எந்தெந்த வரிசையில் என்பது பற்றி தெரிந்திருக்க வேண்டும். இதற்குப் பின் தான் இது என்று கண்டிஷன்கள் உண்டு. முதலில் பாயசம் / இனிப்பு, பருப்பு, நெய், காய்கறி வகைகள், அன்னம் என்று இலையில் எந்த பண்டத்தை எங்கே பரிமாற வேண்டும் என்பதும் அதி முக்கியம். நாம் பாட்டிற்கு காலியாக உள்ள இடத்தில் கையில் இருப்பதை வைத்து விட்டுப் போய் விட முடியாது.

அதே போல் பரிமாறப்படும் சாதம், காய்கறி மற்ற பண்டங்களிலும் சரி, இதற்கு அப்புறம் இது என்று, பரிமாறும் வரிசையிலும் சரி, அதற்கான அறிவியல் பூர்வமான காரணங்கள் உண்டு.  இவற்றை எல்லாம் சுவையாக விளக்கி இதன் கூடவே சேர்த்தால் இந்த வீடியோ இன்னும் பயனுள்ளதாகவும், சாப்பாட்டில் கூட தமிழருக்குள்ள விசேஷ ரசனையை, பெருமையை விளக்குவதாகவும் இருக்கும்.

வாழையிலையின் பயன்கள்

வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

முதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் ஆகும். அதாவது நல்ல கிரிமிநாசினி என்றும் சொல்லலாம். தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான்  படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.

வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.  வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற  பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.

சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும். தளிரான வாழை இலையை நெருப்பினால் ஏற்பட்ட புண், வெந்நீர் பட்டதால் உண்டான புண் ஆகியவற்றில் வைத்துக் கட்ட அந்த புண்கள் உலர்ந்து விடும். அப்போது, முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு  வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்.

புண்களுக்கு துணியில் எண்ணெய் நனைத்து வைத்து கட்டும்போது, அதன் மேல் வாழை இலையையும் வைத்து கட்டி வர, அந்த துணி எண்ணெய்  தன்மையுடனேயே இருக்கும். அதனால் புண் விரைவில் ஆறிவிடும்.

வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற  பாதிப்புகள் நீங்கும்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Leave A Response

You must be logged in to post a comment.