வீடு தோட்டத்தில் வளர்க்கக்கூடிய காய்கறிகள் (Vegetables to be Grown in Terrace Gardening)

இப்பொழுது எல்லாம் நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களிலிருந்து விளைய வைக்கும் காய்கறிகள் வரை நச்சுக்களை தான் கலப்படம் செய்கின்றனர். விளைச்சல் என்ற பெயரில் பூச்சிகொல்லி, செயற்கை உரங்கள் போன்றவற்றையும் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் காய்கறிகளின் தரம் மட்டும் கெடுவதில்லை நம்முடைய உடல் நலமும் கெட்டுப் போகிறது. இந்த மாதிரியான காய்கறிகளை சாப்பிடுவதை விட வீட்டிலேயே இயற்கையான முறையில் ருசியான காய்கறிகளை நம்மாலும் அறுவடை செய்ய முடியும்.
வீட்டுத் தோட்டம் இப்படி வீட்டிலேயே காய்கறி தோட்டம் வளர்ப்பது உங்களுக்கு ஒரு நல்ல பொழுதுபோக்காகவும் அமையும். இதோடு உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்காத வகையில் காய்கறிகளை வெறும் 30 நாட்களிலேயே அறுவடை செய்து பலன் பெறலாம். நச்சுக்கள் இல்லாத ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய காய்கறிகளை பரிசாக பெறலாம்.

காரட்

ஒரு தொட்டியில் மண்ணை நிரப்பியோ அல்லது நேரடியாக நிலத்திலோ இதை வளர்க்கலாம். கேரட் விதைகளை மண்ணினுள் வைத்து மூடி விடுங்கள். கேரட் விதைகள் எளிதாக மார்க்கெட்டில் கூட கிடைக்கின்றன. ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக்கு பிறகு நீங்கள் பராமரிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. கேரட் சீக்கிரமாக வளர ஆரம்பித்து விடும். 2-3 நாட்களுக்கு ஒருமுறை என தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அடுத்த 30 நாட்களில் பாருங்கள் உங்கள் வீட்டு தோட்டத்தில் கண்ணை கவரும் கேரட் ரெடியாகி இருக்கும்.

முள்ளங்கி

முள்ளங்கியில் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறையவே உள்ளது. இந்த முள்ளங்கி எந்த சூழ்நிலையிலும் வளரக் கூடியது. எனவே இதை பராமரிப்பது எளிது. எனவே முள்ளங்கி விதைகளை உங்கள் தோட்டத்தில் ஊன்றி 1-2 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சி வந்தால் 30 நாட்களில் உங்கள் அழகான முள்ளங்கி ரெடியாகி விடும். இதன் சுவையும் அதிகமாக இருக்கும்.

வெள்ளரிக்காய்

கோடை காலம் வந்துட்டாலே தாகத்தை தணிப்பதால் சிறந்த ஒன்று இந்த வெள்ளரிக்காய். இது வளர்வதற்கு அதிக நாட்கள் கூட எடுத்துக் கொள்ளாது. எந்த சீசனிலும் வளரக் கூடியது. ஆனால் இது நன்றாக படர்ந்து வளர நிறைய இடங்கள் மட்டும் தேவைப்படும். எனவே வெள்ளரிக்காய் வளர்ப்பதற்கு அதிகமான இடமுள்ள தோட்டங்களை எடுத்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் உங்கள் கம்பி கதவில் கூட படர விடலாம். 3-4 வாரத்தில் உங்கள் தாகத்தை தணிக்க வெள்ளரிக்காய் ரெடியாகி விடும்.

கீரைகள்

நம் அன்றாட உணவில் கண்டிப்பாக சேர்த்து கொள்ளக் கூடிய பொருள் என்றால் அது கீரைகள் தான். இந்த கீரைகள் 4-5 வாரத்தில் வளர ஆரம்பித்து விடும். நல்ல வீரியமான கீரை விதைகளை வாங்கி மண்ணில் புதைத்து வைக்க வேண்டும். கீரைகளுக்கு தினந்தோறும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அப்புறம் பாருங்க கொஞ்சம் நாட்களில் பச்சை பசையென்று கீரைகள் வளர்ந்து நிற்கும்.

பீட்ரூட்

குறைந்த பராமரிப்பில் எளிதாக வளரக் கூடிய இந்த பீட்ரூட் தான். இது ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன ஆனால் இந்த காய்கறி வெப்பம் அதிகமானால் தாங்காது. எனவே ஏப்ரல் – ஜூலை மாதங்கள் பீட்ரூட் வளர்ப்பதற்கு சாதமாக இருக்காது. மற்ற மாதங்களில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வளர்த்து கொள்ளலாம். தினமும் ஒரு வேளை மட்டும் நீர் பாய்ச்சினால் போதும். 30 நாட்களில் எளிதாக அறுவடை செய்து விடலாம்.

கொத்தமல்லி, புதினா

கொத்தமல்லி என்னதான் நாம் பிரிட்ஜில் சேமித்து வைத்தாலும் சமைக்கும்போது ஃபிரஜ்ஜாக போடுவது போல இருக்காது. அதற்கான தினமும் கடையில் சென்று வாங்கி வரவும் முடியாது. அதனால் வீட்டிலேயே சிறியதாய் ஒரு பூந்தொட்டியிலேயே ஓரிரு நாட்களிலேயே வளர்த்து விட முடியும். ஒரு தொட்டியில் மண்ணை சரியான ஈரப்பதத்தில் இருக்கும்படி எடுத்துக் கொண்டு, அதில் இரண்டு டீஸ்பூன் அளவுக்கு காய்ந்த மல்லி விதைகளைத் தூவி விட்டு, அதன் மேல் நீர் தெளித்து விட்டால் போதும். தண்ணீரை ஊற்றக் கூடாது. தெளித்து தான் விட வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்தால் போதும். ஒரே வாரத்தில் தளதளவென வளர்ந்து நிற்கும். இதேபோல தான் புதினாவும். புதினாவை நாம் கடைகளில் வாங்கி வந்து பயன்படுத்திவிட்டு, அந்த தண்டுப்பகுதியை கீழே தூக்கி எறியாமல் அதை சிறிய தொட்டியில் ஊன்றிவிட்டால் போதும். பிரஷ்ஷான புதினா ஓரிரு நாட்களிலேயே நமக்கு கிடைத்துவிடும்.

கத்தரிக்காய், தக்காளி

கத்தரிக்காயைப் பொருத்தவரையில், விதைகளும் கிடைக்கின்றன. நாற்றுகளாகவும் கிடைக்கின்றன. நாற்றுகளாக வாங்கி வந்து தொட்டிகளில், பழைய டயர்கள் ஆகியவற்றில் வைத்து வளர்க்கலாம். விதைகள் மிகச் சிறியதாக இருக்குமென்பதால் நீங்கள் தண்ணீர் அதிகம் விட்டால் விதைகள் அழுகிவிட வாய்ப்புண்டு. அதனால் நாற்றுகளாக வாங்கி நடுவது சிறந்தது.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Leave A Response