ஈயம் கரைசல் (EM 1)

 ஈயம் கரைசலை அதிக அளவிற்கு உற்பத்தி செய்யக் கூடிய  தொழில்நுட்பம்

தேவையான பொருள்கள்

 • நன்கு கனிவான வாழைபழம் ஒரு கிலோ.
 • பப்பாளி பழம் ஒருகிலோ.
 • பரங்கி பழம் ஒருகிலோ.
 • அச்சுவெல்லம் ஒருகிலோ.
 • நாட்டு கோழி முட்டை ஒன்று.

செய்முறை விபரம்

எல்லா பழங்களையும் சிறு சிறு துண்டுகளாக வெட்டி, ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போடவும். பின்னர் முட்டையை உடைத்து போடவும். இறுதியாக வெல்லம் பொடியாக்கி போடவும், இந்த பொருள்கள் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு காற்று உள்ளே புகாதவாறு இறுக்கமாக மூடவும். 15 நாட்கள் கழித்து டப்பாவை திறந்து பார்க்கவும். உள்ளே பாலாடை போல படிந்து இருக்கும் (பாலாடை படிவம் வரவில்லைஎன்றால் ஒரு கைப்பிடி வெல்லம் பொடி உள்ளே போடவும்). 30- ம் நாள் எடுத்து பயன்படுத்தலாம். கரைசலை கலக்க கூடாது. சூரிய ஒளி படக்கூடாது. ஆறு மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம் .

பயன்கள்

 • நம்முடைய மண்ணில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
 • மகசூல் 20 சதம் முதல் 30 சதவீதம் வரை கூடுதலாக கிடைக்கும்
 • மண்வளம் பாதுகாக்கப்படும்
 • பயிர்களுக்கு நோய்த் தாக்குதல் இருக்காது
 • பூக்கள் அதிகமாக பூக்கும்
 • காய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்
 • வேர்வளர்ச்சி நன்றா ஓடும்

தயாரிக்க தேவையான பொருட்கள்

 • 20 லிட்டர் கொள்ளளவு உள்ள கேன் – 1
 • வெல்லம் – 1 கிலோ
 • ஈயம் கரைசல் – 1 லிட்டர்
 • தண்ணீர் – 18 லிட்டர்

தயாரிக்கும் முறை

முதல் படி

முதலில் வெல்லம் 1 கிலோவை தட்டி துகள்களாக கேனின் உள்ளே கொட்டவும். 9 லிட்டர் தண்ணீரை ஊற்ற வேண்டும். பிறகு ஈயம் கரைசல் ஒரு லிட்டரை ஊற்ற வேண்டும். அதன்பிறகு திரும்பவும் 9 லிட்டர் தண்ணீரை ஊற்றி மூடிவிட வேண்டும்.

இரண்டாம் படி

5 நாட்கள் ஆனதும் அவற்றை தினமும் ஒருமுறை திறந்து விட்டு பிறகு மூடி வைக்கனும். இவ்வாறு 7 நாட்களில் ஈயம் கரைசல் அதிக அளவில் உற்பத்தியாகி விடும். அவற்றை அனைத்துவகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.

அளவு

ஒரு லிட்டர் கரைசலுடன் 400 லிட்டர் தண்ணீர் கலந்து தண்ணீர் பாயும் பொழுது ஊற்றி விடலாம் அல்லது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி கரைசல் என்ற விகிதத்தில் கலந்து மாலை வேளையில் பயிருக்கு தெளிக்க வேண்டும்.

இவ்வாறு EM கரைசல் பயன்படுத்துவதால் பயிர் ஓரே சீராக முளைத்து ஆரம்பத்திலேயே தட்டை தடிமனாவதையும், பூ விடுவதற்கு முன்னாலும்; கதிர் வரும் சமையத்திலும் அனைத்தும் ஓன்றாகவே ஓரே சமையத்தில் கதிர் வாங்குதல், சொட்டைக் கருதுகள் இல்லாமல் இருத்தல், எடை அதிகரித்தல் ஏற்படுகிறது.

மக்காச்சோளத்திற்கு மட்டும் இல்லாமல், அனைத்துவகை பயிர்களுக்கும் பயன்படுத்தி வந்தால் அனைத்தும் ஒன்றாக பலன் கொடுக்கும். விளைச்சல் அதிகரித்து நமக்கு மகசூல் கூடும்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Leave A Response