பயிர் வளர்ச்சிக்கு வித்திடும் மீன் அமினோ அமிலம்(Fish Amino Acid for Effective Plant Growth)

இயற்கை விவசாயத்தில் மிகமுக்கியமான இடுபொருட்களில் ஒன்று மீன் அமிலோ அமிலம். பயிர் வளர்வதற்கும்; பூக்கும் திறனை அதிகப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு வளர்ச்சி ஊக்கிதான் மீன் அமினோ அமிலம். சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கியான இது, மகசூல் அதிகரிப்புக்குப் பெரிதும் உதவி புரிகிறது. குறைந்த செலவில் மீன் கழிவுகளைக் கொண்டே இதை தயாரித்துவிட முடியும் என்பதால், இயற்கை விவசாயிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம்” ஆகும்.

மீன் அமினோ அமிலம் தயாரிப்பு முறை

தேவைப்படும் பொருட்கள்

 • மீன் கழிவுகள் – 1 கிலோ
 • நாட்டு வெல்லம் (அ) சர்க்கரை – 1 கிலோ
 • பிளாஸ்டிக் வாளி – ஒன்று

தயாரிக்கும் முறை

 • ஒரு கிலோ நாட்டு சர்க்கரை,​​ ஒரு கிலோ மீன் கழிவுகள் இரண்டையும் நன்றாக கலந்து, ஒரு பிளாஸ்டிக் வாளியில்  போட்டு காற்று புகாமல் மூடி வைக்க வேண்டும்.
 • நாற்பது நாள்கள் கழித்து தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் வாளிக்குள் இருக்கும்.​ மீன் கழிவுகள் அடியிலேயே தங்கியிருக்கும்.
 • இந்த திரவத்திலிருந்து துளி கூட கெட்டை வாடை வீசாது.​ பழவாடை வீசும். இப்படி பழவாடை வீசினால் மீன் அமினோ அமிலம் தயார் என்பதை விவசாயிகள் தெரிந்து கொள்ள முடியும்.

பயன்படுத்தும் முறை

 • மீன் அமினோ அமிலத்தை 20 மில்லி எடுத்து 1 லிட்டர் தண்ணிரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம்.
 • பயிர்கள் புத்துணர்ச்சி அடைந்தது போல் 3 நாள்களில் செழித்து காணத் துவங்கும்.
 • ஒரு முறை தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 6 மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
 • தேவைப்படும் போது மீன் அமினோ அமிலத்தை எடுத்துக் கொண்டு பிளாஸ்டிக் வாளியை காற்று புகாமல் மூடி வைத்து பாதுகாக்க வேண்டியது அவசியம்.
 • நாய்,​​ பூனை போன்ற வீட்டு விலங்குகளிடமிருந்து இந்த திரவத்தை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
 • மீன் அமினோ அமிலம் என்பது ஒரு முக்கிய வளர்ச்சி ஊக்கியாக செயல்படும் தன்மை கொண்டது.
 • விவசாயிகள் தழைச்சத்துக்கு யூரியாவை பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த அமிலத்தை பயன்படுத்தலாம்.
 • இந்த அமிலம் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்புகளையோ,​​ பக்கவிளைவுகளையோ ஏற்படுத்துவது கிடையாது.
குறிப்பு
மீன் அமினோ அமிலத்தை பூக்கும் மற்றும் காய்க்கும் தருணத்தில் தெளிக்கும் போது நன்றாக பூக்கும் மறறும் காய்க்கும் திறன் அதிகரிக்கும். அல்லது தண்ணீர் பாயும் பொழுது தண்ணீருடன் கலந்து விடலாம்.

பயன்படுத்தும் பயிர்கள்

காய்கறிகள், கொடிவகைகள், பணப்பயிர்கள், பயறுவகை பயிர்கள், எண்ணெய்வித்துபயிர்கள், மரப்பயிர்கள், மலர்சாகுபடி, தானியப்பயிர் போன்ற அனைத்து வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்

மீன் அமினோ அமிலத்தின் பயன்கள்

 • 75 சதவீதம் பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், 25 சதவீதம் பூச்சி விரட்டியாகவும் பயன்படுகிறது.
 • பயிர்களுக்கு 90 சதவீதம் தழைச்சத்து தரக்கூடியது.
 • பயிர்களுக்கு பூக்கும் திறனை அதிகரிக்கச் செய்யும்.
 • தரமான காய்கறிகளை தருகிறது.
 • பயிர்கள் ஓரே சீராக வளர்கிறது.
 • நுண்ணூயிர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
 • பயிர்கள் நன்கு செழித்து வளரும்.
 • சில நேரங்களில் எலி போன்ற விலங்குகளின் தாக்குதலை குறைக்கிறது.
குறிப்பு
இதனை பயிர்களுக்கு அதிகமாக பயன்படுத்தாமல் பரிந்துரை செய்த அளவு பயன்படுத்த வேண்டும். இதனை மற்ற இயற்கை இடுபொருட்களுடன் சேர்த்து பயன்படுத்தலாம். இதனை தயாரிக்கும் பொழுது தயாரிக்க பயன்படும் கலனை மண்ணில் 75 சதம் புதைத்து வைத்து தயாரித்தல் தரம் நன்றாக இருக்கும்.

 

Print Friendly, PDF & Email
About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.