ஆடுகளை தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்(Goat Diseases and control measures)

கோமாரி நோய்

மாடுகளைத் தாக்குவதைப் போல் ஆடுகளை இந்நோய் பெரிய அளவில் பாதிப்பது இல்லை. பொதுவாக கால்புண்ணும், அரிதாக வாய்ப்புண்ணும் தோன்றும். நோய் தாக்கிய ஆடுகள் மேயாமல் இருக்கும்.
கட்டுப்பாடு: சோடியம் கார்பனேட் கரைசல் கொண்டு புண்களைக் கழுவலாம்.போரிக் அமில பொடியை வேப்பெண்ணையுடன் கலந்து புண்களில் தடவலாம். ஆட்டுப்பட்டியின் தரைகளில் சுண்ணாம்புத்தூள் தூவவேண்டும்.

ஆட்டு அம்மை

காலின் அடிபாகத்தில் அம்மைக் கொப்புளங்கள் தோன்றி பின்னர் தலை, காது, அடிவயிறு என அனைத்து பாகங்களிலும் தோன்றும். காய்ச்சல் ஏற்பட்டு ஆடுகள் இறக்கவும் வாய்ப்பு உண்டு.

கட்டுப்பாடு: போரிக் அமிலத்துடன் கிளிசரின் கலந்து கொப்புளங்களின் மீது பூச வேண்டும் அல்லது வேப்பிலை மற்றும் மஞ்சளை அரைத்துப்பூசலாம்.

வெக்கை சார்பு நோய் (ஆட்டு பிளேக்)

காய்ச்சல், கழிச்சல், சளி மற்றும் இருமல் ஏற்படும். சினை ஆடுகளில் கருச்சிதைவு ஏற்படும்.

கட்டுப்பாடு: PPR தடுப்பூசி போட வேண்டும்.

துள்ளுமாரி நோய்

நோய்க்கிருமிகள் அதிகமுள்ள புற்களை உண்பதால் இந்நோய் ஏற்படுகிறது. நோய்க்கிருமிகளில் உள்ள நச்சுப்பொருள்கள் ஆட்டின் நரம்பு மண்டலத்தை பாதித்து, இறக்க செய்கின்றன. மிதமான பாதிப்பு கழிச்சலையும், தீவர நிலை வலிப்பு நோயையும் ஏற்படுத்தி இறப்பை உண்டாக்கும்.

கட்டுப்பாடு: தாக்கப்பட்ட ஆடுகளை மேய விடாமல் பட்டினி போட வேண்டும்.குட்டிகளுக்கு நோய் தடுப்பு ஊசி போட வேண்டும்.

அடைப்பான்(ஆந்த்ராக்ஸ்)

இந்நுண்ணுயிரி பல வருடம் வரை நிலைத்திருக்கும். தோல் பதனிடும் பகுதிகளில் இந்நோய் தோன்ற வாய்ப்புகள் அதிகம். அதிக காய்ச்சல் ஏற்பட்டு ஆடுகள் இறக்கும். மேலும் இயற்கை துவாரங்களில் இருந்து இரத்தம் வடியும்.

கட்டுப்பாடு: பாதிக்கப்பட்ட ஆடுகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும்.

பெனிசிலின் ஊசி மருந்தை பயன்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும்.

அப்ளோநச்சு

மாடுகளில் ஏற்படும் பாதிப்பைப் போன்றே ஆடுகளும் பாதிக்கப்படும்.

தோல்நோய்கள்

ஆட்டுப்பட்டிகளைச் சரியாகப் பராமரிக்கவில்லை என்றால் பூஞ்சைகளால் ஆடுகளுக்கு உடல் அரிப்பு மற்றும் கொப்புளங்கள் ஏற்படும்.

கட்டுப்பாடு: பட்டிகளை சுகாதாரமாக வைத்தல், கிருமி நீக்கம் செய்தல் மற்றும் சுண்ணாம்புத்தூளைத் தூவுதல் மூலம் கட்டுப்படுத்தலாம்.

நீலநாக்கு நோய்

காய்ச்சல் ஏற்படும்; கால் நொண்டும்; உதடுகளில் புண்கள் ஏற்பட்டு நுரை தள்ளும்; மூக்கிலிருந்து சளி வெளியேறும்.

கட்டுப்பாடு: உதடு பகுதிகளில் கிளிசரின் தடவ வேண்டும். நச்சுயிரியைப் பரப்பும் ஈக்களை புகை மூட்டம் போட்டு விரட்ட வேண்டும். ஆடுகளின் உடல் பகுதியில் வேப்பெண்ணெயை பூசுவதால் ஈ தாக்காது.

பால்காய்ச்சல், மடிநோய், கழிச்சல் ஆகிய நோய்கள் மாடுகளில் உள்ளதைப்போலவே பாதிப்பு ஏற்படுத்தும்.

மேலும் படிக்க : ஆடு வளர்ப்பில் விருது வென்ற பட்டதாரி(Goat Rearing)

ஆட்டுக் கொட்டில் பராமரிப்பு(SheepCote Care)

 

Print Friendly, PDF & Email
About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.