பயிர் வளர்ச்சியை தூண்டும் கரைசல் வகைகள்(Growth Hormones)

டி.ஏ.பி கரைசல் – சிறந்த இலைவழி ஊட்டம்

பயிர்கள் பூக்கும் தருணத்தில் மணிச்சத்தின் தேவை அதிகம். பயிர்கள் நிறைய பூக்கவும், காய்க்கவும், காய்களில் மணி நிறைய பிடிக்கவும், மணிச்சத்து நிறைய தேவைப்படுகிறது. மணிச்சத்தை இலை மூலமாக வழங்கிட ஏற்ற உரம் டி.ஏ.பி. அதில் 46 சதம் மணிச்சத்து நீரில் கரையும் வடிவில் உள்ளது. இதனைச் செடிகள் எளிதில் உறிஞ்சிக் கொள்ள வாய்ப்பாக 18 சதம் தழைச்சத்தும் இணைந்திருக்கிறது. மற்ற சத்துக்களை விட தழைச்சத்தையே பயிர்கள் விரும்பி எடுத்துகொள்ளும் டி.ஏ.பியில் தழை 10 மணிச்சத்துக்கள் இணைந்திருக்கின்றன. தழைச்சத்தை பயிர்கள் எடுத்துக் கொள்ளும்போது தானாகவும் மணிச்சத்தானது இலைகள் பயிருக்குள் போய் விடுகிறது.

டி.ஏ.பியினை உடனடியாக நீரில் கலந்து தெளிக்க முடியாது. நீரில் ஊறவைத்து மறுநாள் வடிகட்டி தெளிந்த நீரை மட்டுமே தெளிக்க வேண்டும். சரியாக வடிகட்டாமல் கலங்கலாக தெளித்தால் கலங்கள் பட்ட தளிர்கள் கருகிடும். பயிர் வளர்ச்சி பாதிக்கும்.

டி.ஏ.பியை 2% கரைலாக்கி தெளிப்பது அதிகப்பலன் அளிக்கிறது. அளவு குறைந்தால் பலன் குறையும். அளவு கூடினால் பயிர் கருகும். சரியான விகிதத்தில் இருக்க வேண்டும்.

 • 100 லிட்டர் தண்ணீருக்கு 2 கிலோ டி.ஏ.பி.
 • 10 லிட்டர் தண்ணீருக்கு 200 கிராம் டி.ஏ.பி. (பவர் ஸ்பிரேயர் டேங்க் 1க்கு)
 • 13 லிட்டருக்கு 260 கிராம் டி.ஏ.பி ( 13 லிட்டர் கைத் தெளிப்பான் டேங்க் 1 க்கு)
 • 16 லிட்டருக்கு 320 கிராம் டி.ஏ.பி ( 16 லிட்டர் கைத்தெளிப்பான் டேங்க் 1 க்கு)

எத்தனை லிட்டர் டேங்கில் தெளிக்கப்போகிறோமோ அதற்கு தகுந்த அளவுக்கு டி.ஏ.பியை கணக்கிட்டு முதல் நாளே நீரில் ஊற வைத்து மறுநாள் மெல்லிய துணியில் வடிகட்டி தெளிக்க வேண்டும்.

பயன்கள்

டி.ஏ.பி யில் தழை மணி சத்துக்களுடன் நுண்ணூட்டச்சத்துக்களும் உள்ளன. இவைகளை இலைகளின் மூலம் எடுத்துக் கொண்ட பயிர் உடனே பூக்கிறது. தொடர்ந்து பூ பூத்துக் கொண்டே இருக்கிறது. காய்களும் காய்க்கிறது காய்களில் மணி நிறைய பிடிக்கிறது.

பழகரைசல் 

இது பயிர்களுக்கு நல்ல ஊட்டசத்து மருந்தாக செயல்படுகிறது.

தயாரிக்கும் முறை

 1. பப்பாளி – 2 கிலோ
 2. நெல்லி – 2 கிலோ ,
 3. கொய்யா – 2 கிலோ
 4. வாழை – 2 கிலோ
 5. பனம் – 2 கிலோ
 6. கோமையம் – 1 லிட்டர்

செய்முறை

 • பழத்தை தட்டி சுமார் 15 லிட்டர் கொள்ளவுள்ள பாத்திரத்தில் போட்டு இறுக்கமாக மூடிவிடவும்.
 • 2 நாள் கழித்து கோமையம் 1 லிட்டர் ஊற்றி நன்கு கலக்கி விடவும்.தினமும் கலக்கி விடவும். 
 • 30 நாட்களில் கரைசல் தயார்.

பயன்பாடு

 • 1 லிட்டர் பழக்கரைசல் 10 லிட்டர் தண்ணீருடன் கலந்து பயிர்களுக்கு கொடுக்கலாம்.
 • பயிர்களின் நோயெதிர்ப்பு மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கும் மிகச்சிறந்த பயிர் ஊக்கியாகும்.

வெங்காய கரைசல் தயாரிப்பு

 • நன்றாக நறுக்கிய ஒரு கிலோ வெங்காயத்தை,  50 மில்லி மண்ணெண்ணெயில் 24 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
 • அதனுடன் 450 மில்லி தண்ணீரையும் 10 மில்லி காதி சோப்பு கரைசலையும் சேர்த்து நன்றாக கலக்கி ஒரு மெல்லிய துணி கொண்டு வடிகட்டி ஒரு பாத்திரத்தில் சேமித்து வைத்து கொள்ளவேண்டும்.
 • தேவையான பொழுது ஒரு பங்கு கரைசலுடன் 20 பங்கு தண்ணீர் சேர்த்து பயன்படுத்தலாம்.
 • இவற்றை அதிகாலையில் பயிர்களுக்கு தெளித்தால் சிறந்த பலன் அளிக்கும் அடிப்பதற்கு முன் இந்த கரைசலை நன்றாக கலக்க வேண்டும்.

நச்சுயிரி நோய்

செடிகள் வளர்ச்சி குன்றி வெளிர் மஞ்சள் நிறத்தில் இருபவற்றையும் கட்டுப்படுகிறது.
வெள்ளை ஈ எறும்பு தொல்லை உள்ள இடத்தில் இவற்றை தெளித்தாலும் இவை கட்டுப்படும்.

தட்டப்பறு சேமிக்கும் இடத்தில் வெங்காயத்தினுடைய தாள்களை கலந்து வைத்தால் பயறுகளைத் தாக்கும் வண்டுகள் வராமல் தடுக்கலாம்.

வெங்காயதாள் வளர்ச்சி சுமாராக இருந்தால் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற அளவில் 19 : 19 : 19 கரையும் உரம் தெளித்து செடி வளர்ச்சியை அதிகப்படுத்தலாம்.

செடியின் வளர்ச்சி அதிகமாக இருந்தால் மல்டிகே ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் தெளித்து செடியின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி மகசூலை அதிகப்படுத்தலாம்.

Print Friendly, PDF & Email
About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

1 Comment so far. Feel free to join this conversation.

 1. MR Ramanathan November 7, 2016 at 12:16 pm -

  A very useful and a simpleapplicAtions. Forformers

Leave A Response

You must be logged in to post a comment.