அசோலாவை உற்பத்தி செய்யும் முறை(How to Cultivate Azolla)

மூக்குத்தி மற்றும் கம்மல் செடி என அழைக்கப்படும் அசோலா மிகச்சிறிய இலைகளையும், துல்லியமான வேர்களை கொண்ட தண்ணீரில் மிதக்ககூடிய பெரணி வைகையைச் சேர்ந்த தாவரம். இது கால்நடைகளுக்கு சிறந்த மாற்று தீவனமாக விளங்குகிறது.  35-36 டிகிரி செல்சியஸ் வெப்பம் அசோலாவின் வளர்ச்சிக்கு தேவைப்படுகிறது.

அசோலாவை உற்பத்தி செய்யும் முறை

நிழற்பாங்கான இடத்தில் 10 அடி நீளம், 2 அடி அகலம், ஒரு அடி ஆழம் கொண்ட பாத்தி அமைக்கவும். பாத்தியின் அடித்தளத்தில் சில்பாலின் ஷீட்டை சீராக விரிக்க வேண்டும். இதன்மேல் 2 செ.மீ. அளவிற்கு தண்ணீர் ஊற்றியும் பின் பாத்தி ஒன்றுக்கு 100 கிராம் சூப்பர் பாஸ்பேட், 5 கிலோ பசுஞ்சாணம் கரைத்து இடவேண்டும். பின்னர் இப்பாத்தியில் உள்ள மண்ணை நன்கு கலக்குவதால் மண்ணின் சத்துக்கள் தண்ணீரில் கரைந்து அசோலாவிற்கு எளிதாக கிடைக்கச் செய்கிறது. 15 நாட்களில் ஒரு பாத்தியில் (10 x 2 x 1 அடி) 30 முதல் 50 கிலோ அசோலா தயாராகிறது. மூன்றில் ஒரு பங்கு அசோலாவை பாத்தியிலேயே விட்டுவிட்டு எஞ்சிய இரண்டாவது பகுதியை அறுவடை செய்யலாம். 10 நாட்களுக்கு ஒர முறை 5 கிலோ பசுஞ்சாணம் கரைப்பது நல்லது. அசோலாவை அறுவடை செய்து கால்நடை கோழிகளுக்கு சத்து நிறைந்த, சுவை மிகுந்த உணவாகப் பயன்படுத்தலாம்.

அசோலா பூச்சி நோய் கட்டுப்பாடு 

 பொதுவாக அசோலாவை பூச்சி, நோய்கள் தாக்குவதில்லை. பாத்திகளில் அசோலாவின் அடர்த்தி அதிகமானால் பூச்சி, நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதிலிருந்து அசோலாவை பாதுகாக்க பாத்தியின் இருபுறமும் காற்று அதிகமாக புகாதவாறு தடுப்புகள் (அ) வலைகள் அமைக்க வேண்டும். பொதுவாக பூச்சித் தொல்லை வந்தால் 5 மிலி வேப்பெண்ணெயை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து அசோலா பாத்தியில் தெளிக்க வேண்டும்

அசோலாவை வளர்க்க தேவையான பொருட்கள்

20 சதுர அடியில் அசோலா வளர்க்க

  • அசோலா தாய்வித்து – 5 கிலோ
  • வளமான மண் 2 செ.மீ. சமமான அளவு
  • பசுஞ்சாணம் 5 கிலோ
  • சூப்பர் பாஸ்பேட் 100 கிராம்
  • சில்பாலின் ஷீட் 20 சதுர அடி
  • தண்ணீர் 100 லிட்டர்

கழிவு நீரில் வளர்க்கப்பட்ட அசோலா பசும் உரமாகவும், கால்நடை தீவனமாகவும், உயிர் எரிபொருளாகவும் பயன்படுகிறது. உலர்ந்த அசோலாவில் உள்ள புரதங்களையும், அமினோ அமிலங்களையும் ஆய்வு மேற்கொண்டபொழுது கழிவு நீரில் வளர்க்கப்பட்ட அசோலா சற்று அளவுக்கதிகமான கச்சாப் புரதங்களை கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மித்யோனைன், ஹிஸ்டிடின் போன்ற அமினோ அமிலங்கள் அதிகமாக உள்ளது. எனவே, அசோலா சிறந்த கால்நடை தீவனமாக பயன்படுத்தப்படுத்துவதுடன், கழிவு நீரை தூய்மையாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

கால்நடை தீவனமாக 

கால்நடைகளுக்கு தேவையான அமினோ அமிலங்கள், தாது உப்புகள், விட்டமின்கள், பீட்டாகாரோடின் உட்பட 30 சதவீத புரதச்சத்துகள், இதில் உள்ளன.

15 நாட்களில் 20 சதுர அடி கொண்ட பாத்தியில், 30 முதல் 50 கிலோ அசோலா தயாராகி விடும். மூன்றில் ஒருபங்கு அசோலாவை, பாத்திலேயே விட்டு விட்டு, மீதியை அறுவடை செய்யலாம். பத்து நாட்களுக்கு ஒரு முறை, ஐந்து கிலோ பசுஞ்சாணம் கரைப்பது நல்லது. பூச்சித்தொல்லை வந்தால், ஐந்து மில்லி வேப்பெண்ணையை ஒரு லிட்டர் தண்ணீரில்கலந்து, பாத்தியில் தெளிக்கலாம். அசோலா உற்பத்தி கோடை காலத்தில் குறைவாகவும், மழைக் காலத்தில் அதிகமாகவும் காணப்படும்.

அசோலாவில் லிக்னின் மற்றும் நார்சத்து அதிகம் இருப்பதால், கால்நடைகள், கோழி, பன்றி மற்றும் மீன்களுக்கு உரமாக கொடுக்கலாம். அறுவடை செய்த அசோலாவை, மாட்டுச் சாணத்தின் வாசனை போகும்வரை, தண்ணீரில் கழுவி, தவிடு அல்லது மாட்டு தீவனத்துடன் 1-1 என்ற சதவீதத்தில் கலந்து கொடுக்க வேண்டும்.

அசோலவை ஒரு பசுவிற்கு, இரண்டு கிலோ வரை, தீவனமாக கொடுப்பதால், 15 முதல் 20 சதவீதம் வரை பால் உற்பத்தி அதிகரிக்கும். புண்ணாக்கு செலவு 25 முதல் 40 சதவீதம் வரை குறையும். பாலின் தரம் அதிகரிப்பது மற்றுமின்றி, கால்நடைகளின் ஆரோக்கியம் அதிகரித்து வாழ்நாளும் அதிகரிக்கிறது.

அசோலாவை மாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு, ஒன்று முதல் 15 கிலோவும், இறைச்சிக்கோழி, வான்கோழிகளுக்கு 20 முதல் 30 கிராமும், ஆடுகளுக்கு 300 முதல் 500 கிராமும், வெண்பன்றிக்கு ஒன்றரை முதல் இரண்டு கிலோவும், முயலுக்கு 100 கிராமும் கொடுக்கலாம். இதில், மூன்று சதவீத கொழுப்பு சத்தும், 14 முதல் 15 சதவீத நார்சத்தும், 25 முதல் 30 சதவீத புரதசத்தும், 45 முதல் 50 சதவீதமாவுச் சத்தும் உள்ளது.

ஒரு கிலோ அசோலா உற்பத்தி செய்யும் செலவு, மிகவும் குறைவு என்பதால், தீவனச்செலவு வெகுவாக குறையும். விவசாயிகள் அசோலா உற்பத்தியில் இறங்கினால்,கால்நடை வளர்ப்பை லாபகரமாக செய்ய முடியும். விட்டமின் பி12 உருவாவதற்கு, தேவையான மூலப்பொருளாக, பீட்டாகாரோட்டின்உள்ளது. அசோலா கலந்த தீவனத்தை தின்று வளரும் கோழியின் முட்டைகளை சாப்பிடுவதால், மனிதர்களுக்கும் கண் பார்வை நன்றாக தெரியும்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Leave A Response