இந்திய வெள்ளாட்டு இனங்கள் (Indian Goat Breeds)

தமிழ்நாட்டில் பல வகையான வெள்ளாட்டு இனங்கள் உள்ளன. அவற்றில் சில இங்கே

 • கன்னி ஆடுகள்
 • கொடி ஆடுகள்
 • சேலம் கருப்பு
 • பள்ளை ஆடு
 • மோளை ஆடு

கன்னி ஆடுகள்

 • இவை திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் காணப்படும்.
 • உயரமான ஆடுகள், கருமை நிறம் கொண்டது.
 • முகத்திலும், காதுகளிலும், கழுத்திலும் இரு வெள்ளை கோடுகள் இருக்கும்.
 • அடி வயிற்றுப் பகுதி மற்றும் கால்களின் உட்புறத்தில் வெள்ளைநிறம் காணப்படும்.
 • இத்தகைய நிறம் அமையப்பெற்ற ஆடுகளை ‘பால்கன்னி’ என்றும், வெண்மை நிறத்திற்குப் பதிலாக செம்பழுப்பு நிறம் கொண்டவைகளை ‘செங்கன்னி’ என்றும் அழைக்கப்பர்.

கொடி ஆடுகள்

 • இவை தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, எட்டயபுரம் மற்றும் விளாத்திக்குளம் வட்டங்களில் பெரும்பாலும் காணப்படுகிறது.
 • மிக உயரமான இவ்வகை ஆடுகள் நீண்ட கழுத்தும், உடலும் கொண்டவை.
 • வெள்ளையில் கருமை நிறம் சிதறியது போன்ற நிறம் கொண்ட ஆடுகளை ‘கரும்போரை’ என்றும், வெள்ளையில் செம்பழுப்பு நிறம் கொண்டவைகளை ‘செம்போரை’ என்றும் அழைப்பர்.

சேலம் கருப்பு

 • இந்த வகையான ஆடுகள் சேலம் மாவட்டத்தில் குறிப்பாக ஓமலூர், மேச்சேரிப் பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன.
 • மேலும் தர்மபுரி, ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது.
 • இவை பெயருக்கேற்றபடி முற்றிலும் கருமை நிறம் கொண்டவை. உயரமானவை மற்றும் மெலிந்த உடலமைப்பு கொண்டவை.
 • இவை பொதுவாக இறைச்சி மற்றும் தோலுக்காகவே பெரும்பாலும் வளர்க்கப்படுகிறது.

இந்திய வெள்ளாட்டு இனங்கள்

இந்தியாவில் மட்டும் 19 அறியப்பட்ட இனங்கள் நாடு முழுவதும் பரவிக் காண்ப்படுகின்றன. இவை காணப்படும் இடங்களைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகின்றன.

ஜமுனாபாரி

 • உத்திரப்பிரதேசத்தின் “எட்டாவா” மாவட்டத்தைச் சேர்ந்த இவ்வினம் மிகப்பெரிய தொங்கும் காதுகளையும், நல்ல உயரமும் உடையவை. இது ரோமன் மூக்குடன் நீளமான அடர்ந்த முடியை உடையது. கொம்புகள் சிறியவையாக தட்டையாக இருக்கும்.
 • கிடா ஆடுகள் 65-86 கிலோ எடையும், பெட்டை ஆடுகள் 45-61 கிலோ எடையும் கொண்டிருக்கும்.
 • தினமும் 25 – 2.7 கி.கி பால் தரக்கூடியது.
 • இதன் பால் உற்பத்தி 250 நாட்களில் 250-300 கி.கி வரை 5 சதவிகிதம் கொழுப்புச் சத்துடன் இருக்கும்.
 • இந்த இனங்கள் இங்கிலாந்தின் ‘ஆங்கிலோ நுபியன்’ என்னும் இனத்தை உருவாக்க கலப்பின ஆடாகப் பயன்படுத்தப்படுகிறது.

பீட்டல்

 • இது முக்கியமாக பஞ்சாபில் காணப்படுகிறது.
 • ஜமுனாபுரியிலிருந்தே இவ்வினம் உருவாக்கப்படுகிறது.
 • சிவப்பு நிறத்தில் வெள்ளை பொட்டுக்களுடன் கூடியது.
 • கிடாக்கள் 65-85 கிலோவும், பெட்டை ஆடுகள் 45-61 கி.கி எடையும், பால் அளவு நாளொன்றுக்கு 1 கி.கி அளவும் இருக்கும்.
 • கிடாக்கள் தாடியுடன் இருக்கும்.

 பார்பரி

 • இவ்வினம் உத்திரப் பிரதேசத்தின் எட்டாவா, எட்டா, ஆக்ரா, மதுரா மாவட்டங்களிலும் கமல், பானிபட், சோடக் பகுதிகளிலும் (ஹரியானா) காணப்படுகிறது.
 • இது சிவப்பு, வெண்மை நிறங்களில் உள்ளது.
 • கொம்புகள் நீண்டும், உரோமங்கள் குட்டையாகவும் உள்ள இவ்வாடுகள் அளவில் சிறியவை.
 • கிடா ஆடுகள் 36-45 கிலோவும், பெட்டை ஆடுகள் 27-36 கிலோ எடையும் கொண்டவை.
 • இவைக் கொட்டில் முறையில் பொதுவாக வளர்க்கப்படும்.
 • பால் உற்பத்தி 90 -1.25 கி.கிமும் கொழுப்புச்சத்து 50 சதவிகிதம் அளவும் பால் தரும் காலம் 108 நாட்களாகவும் இருக்கும்.
 • இவை 12-15 மாதங்களுக்கு இரு முறை மட்டுமே குட்டி போடுபவை.

மேலும் படிக்க : வெள்ளாடுகளுக்கும் செம்மறியாடுகளுக்கும் உள்ள வேறுபாடுகள்

தென் மாநிலங்களில் காணப்படுபவை

மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் காணப்படும் இனங்கள் இவ்வகையாகும்.

சுர்தி

 • இவ்வின ஆடுகள் பெராரி போன்று குட்டையான கால்களையும் வெள்ளை நிறத்தையும் உடையவை.
 • இவை பாம்பே நாசிக், சூரத்தில் அதிகமாக உள்ளன.
 • பால் உற்பத்தி நாளொன்றுக்கு 25 கி.கி.

மலபார் (அ) தலச்சேரி

 • வெள்ளை மற்றும் பழுப்பு, கறுப்பு நிறங்களில் காணப்படும்.
 • 2-3 குட்டிகள் போடவல்லது கிடாக்கள் 40 / 50 கிலோ எடையும், பெட்டை ஆடுகள் 30 கிலோ எடையும் கொண்டவை.
 • நன்றாகப் பால் கொடுக்கக்கூடிய இனம்.

டெக்கானியா / ஒஸ்மனாபாடி

 • இவைகளை ஒஸ்மனாபாத் என்றும் அழைப்பர்.
 • சமவெளிகளில் காணப்படும் ஆடுகளின் கலவை இது.
 • இவை கருப்பு, கருப்பு வெள்ளை கலந்தோ, சிவப்பு நிறத்திலோ காணப்படும்.
 • பால் அளவு 9 – 2.8 கிகி.

அயல்நாட்டு இனங்கள்

 • பல்வேறு அயல்நாட்டு இனங்கள் பால் உற்பத்தி மற்றும் துரித வளர்சிக்காக நம் நாட்டிற்குத் தருவிக்கப்பட்டுள்ளன.
 • ஏனெனில் இவ்வின ஆடுகளின் பால் உற்பத்தி மிக அதிகம்.
 • டோகன் ஸ்பெர்க், சேனன், போயர், டமகேஸ், ஆல்பைன், நுபியன் மற்றும் அங்கோரா போன்றவை அவற்றில் சில.

ஆதாரம்: டாக்டர். பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், வேளாண் கல்லூரி, மதுரை.

Print Friendly, PDF & Email
About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.