காற்றை சுத்தப்படுத்தும் செடிகள் (Indoor Plants that Purifies Air)

தற்போது மாசடைந்து வரும் சூழலில் சுத்தமான காற்றை சுவாசிப்பது என்பதே கடினம் ஆகிவிட்டது. எங்கு பார்த்தாலும் மாசு, எதிலும் மாசு என்று சொல்லிக்கொன்டே போகலாம். எதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நாம் நமது வீட்டை சுற்றி மரங்கள் மற்றும் செடிகளை வைக்க வேண்டும். செடிகள் வீட்டில் உள்ள காற்றை தூய்மை ஆக்குவதுடன் நமக்கு புத்துணர்ச்சியையும் கொடுக்கிறது. வீட்டில் வளர்க்கக்கூடிய செடி வகைகளை நாம் இப்போதும் பார்க்கலாம்.

தமிழ்நாட்டுச் சீதோஷ்ண நிலையில் வாழும் தன்மையையும், அதிக நன்மைகளையும் கொடுக்கும் இந்தச் செடிகளைப் பற்றிய அறிமுகம் இதோ…

கற்றாழை (AloeVera)

காற்றை சுத்தப்படுத்தும் செடிகள்

மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள கற்றாழை, காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைட் என்னும் வேதிப் பொருளை நீக்கும். சருமத் தீப்புண்களுக்கும் மருந்தாகப் பயன்படும்!

சீமை ஆல் (Rubber plant)

Rubber plant

வெயில் படாத இடங்களில்கூட வாழும் தன்மைகொண்டவை. அதிகமாக அசுத்தக் காற்றை உள்ளிழுத்து அதிகப்படியான ஆக்சிஜனை வெளியிடும்.

வெள்ளால் (Weeping Fig)

Weeping Fig

காற்றின் நச்சுக்களை நீக்கி சுற்றுப்புறத்தின் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தும்.

மலைப் பனை (Bamboo Palm) 

Bamboo Palm

காற்றில் கலந்துள்ள ஃபார்மால்டிஹைட் நச்சுக்களை நீக்குவதோடு இயற்கையான ஈரப்பதனியாகச் செயல்படும்.

ஸ்னேக் பிளான்ட் (snake-plant)

snake-plant

நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் ஃபார்மால்டிஹைடைக் கிரகித்து ஆக்சிஜனை வெளிப்படுத்தும். வறண்ட சூழ்நிலைகளில்கூட வாழும் தன்மைகொண்டவை.

கோல்டன் போட்டோஸ் (golden pothos)

golden pothos

நாசா விஞ்ஞானிகளின் அறிக்கைப்படி காற்றைச் சுத்தப்படுத்தும் தாவரங்களின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்திருக்கும் இந்தச் செடி, கார்பன் மோனாக்சைடு வாயுவை உறிஞ்சிக்கொண்டு காற்றின் அளவை அதிகரிக்கச் செய்யும். இந்த செடியை டெவில் ஐவி என்றும் சொல்வார்கள். இந்த செடியானது வீட்டில் உள்ள ஃபார்மால்டிஹைடு, பென்சைன் மற்றும் சைலின் போன்ற தூசிகளை முற்றிலும் வெளியேற்றி, வீட்டை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.

ஸ்பைடர் பிளாண்ட் (Spider Plant)

Spider Plant

வீட்டில் உள்ள மாசுக்களை சுத்தமாக வெளியேற்றும் செடிகளில் முக்கியமானது ஸ்பைடர் பிளாண்ட் ஆகும். இந்த செடி தூசிகளை மட்டும் போக்குவதோடு, வீட்டிற்கு அழகையும் கொடுக்கு ம்.

ஃபேர்ன்ஸ் (Ferns)

Ferns

இந்த செடியின் இலைகள் மிகவும் அழகாக ப்ரில் போன்று காணப்படும். அதிலும் பாஸ்ட ன் ஃபேர்ன் செடி, வீட்டில் ஈரப்பதத்தை வெளியேற்றி, தூசிகளை நீக்கும். மேலும் இது பார்ப்பதற்கு ப்ளாஸ்டிக் இலை போன்று க்யூட்டாக இருக்கும்.

ஐவி (Ivy)

ivy

இது ஒருவகையான படர்க்கொடி. இந்த கொடியு ம் வீட்டில் வளர்க்கக்கூடிய உள் அலங்கார செடி களில் மிகவும் பிரபலமானது. அதிலும் ஆஸ் துமா மற்றும் அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள், வீட்டில் இதனை வளர்ப் பது நல்லது

கமுகு மரம் (Areca Palm)

Areca Palm

இந்த செடியின் இலைகள் பார்ப்பதற்கு தென்னை மரத்தின் இலைகளைப் போன்று காணப்படும். ஆனால் இந்த செடியை வீட்டின் உள் ளே வளர்த்தால், வீட்டில் நல்ல குளிர்ச்சியான காற்று வீசுவதோடு, தூசிகளும் வீட்டில் இருந்து வெளியேற்றப்படும்.

சைனீஸ் எவர்க்ரீன் (Chinese Evergreen)

Chinese Evergreen

இந்த செடியானது வீட்டினுள் வரும் காற்றை சுத்தப்படுத்துவதில் சிறந்தது. மேலும் தற்போது நிறைய பேர், இந்த செடியைத் தான் வீட்டில் வள ர்க்கின்றனர்.

மார்ஜினட்டா (Marginata)

Marginata

செடி வளர்க்க விரும்புவோர், இந்த செடியின் அழகை விரும்பாமல் இருக்கமாட்டார்கள். இந்த செடியானது அந்த அளவில் அழகாக இருப்பதோடு, அசுத்தக் காற்றினை சுத்தப்படுத்தி வீட்டினுள் நுழையவிடுகிறது. மேலும் வீட்டில் இருக்கும் தூசிகளையும் நீக்குகிறது.

பீஸ் லில்லி (Peace lilly)

Peace lilly

வீட்டில் அழகான செடி வளர்க்க ஆசைப்பட்டால், பீஸ் லில்லியை வளர் த்து வாருங்கள். இது அழகுடன், வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொ ள்ள உதவும்.

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம். முடியாதபட்சத்தில், இப்படிப்பட்ட செடிகளையேனும் வளர்ப்போமே!

Print Friendly, PDF & Email
About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.