ஜாதிக்காயின் மருத்துவ குணங்கள் (Medicinal Properties of Nutmeg)

துவர்ப்பு மற்றும் காரச் சுவைகள் கொண்ட ஜாதிக்காய் மனமகிழ்ச்சியை அளிக்கும், உடல் வெப்பத்தை அகற்றும், ஆண்மைத் தன்மையைப் பெருக்கும், இரைப்பை, ஈரல் ஆகியவை பலமாகும், நடுக்கம், பக்கவாதம் ஆகியவை தீரும். வெப்பத் தன்மையான ஜாதிக்காய் செரிமானத்திறன் மிகுந்து உடல் சுறுசுறுப்பாக இருக்கும். அதிகமாகச் சாப்பிட்டால் மயக்கத்தை ஏற்படுத்தும்.

http://www.pasumaiputhinam.com/properties-of-kadukkai/

ஜாதிக்காய் மலேசியா போன்ற நாடுகளில் இயற்கையாக வளர்கின்ற மரம். இலங்கையிலும், இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் பயிர் செய்யப்படுகின்றது. அடர் தொகுப்பில் இலைகள் கொண்ட பசுமையான சோலைகளில் காணப்படக்கூடியது.

ஜாதிக்காய் இலைகள் மாற்றடுக்கில் அமைந்தவை, பெரியவை. ஆண், பெண் பூக்கள் தனித்தனியானவை. காய், சதைப்பற்றுள்ளது. மெல்லிய ஓட்டால் மூடப்பட்டிருக்கும் ஜாதிக்காய் பழங்கள், மிகவும் மணமுள்ளவை. மேலே பழுப்பு நிறமாகவும், உட்புறம் சதைப்பகுதி நிறைந்ததாகவும் இருக்கும்.

ஜாதிக்காய் தோலை நீக்கி உபயோகிக்கப்படுகின்றது. மேல் தோல் புளிப்பும், துவர்ப்பும் கொண்டது. ஊறுகாய் போடப் பயன்படுகின்றது. சாதிக்காய், குலக்காய் என்கிற பெயர்களும் உண்டு. உலர்ந்த பழங்கள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

மருத்துவ குணங்கள்

 • குழந்தை பிறந்து முப்பது நாட்கள் ஆனவுடன், தவறாமல் குழந்தைக்கு உரை மருந்து புகட்டப்படும். உரை கல் மீது உரசித் தரப்படுவதால் அது உரைமருந்து என்றானது. ஜாதிக்காய், மாசிக்காய், கடுக்காய், வசம்பு, சுக்கு, பெருங்காயம், பூண்டு ஆகியவற்றை ஒவ்வொன்றாக உரைக் கல்லில் உரசி அதுவும் இலேசாக ஒரே உரசி உரசி தண்ணீர் தொட்டு ஒரு மாதக் குழந்தையின் வாயில் வைத்துப் புகட்ட வேண்டும். குழந்தை குடிக்கின்ற தாய்ப்பால் செரிமானத்துக்கு, இந்த உரை மருந்துதான் திறவுகோல்.
 • ஜாதிக்காயின் மருத்துவ குணங்கள்1
 • வயிற்றுப்போக்கு, சீதபேதி குணமாக குழந்தைகளுக்கு ½ தேக்கரண்டி அளவு தேனில், ஜாதிக்காய் 20 சுற்றுகள் இழைத்து, தினமும் இருவேளைகள், நாக்கில் தடவ வேண்டும். பெரியவர்களுக்கு ஜாதிக்காய் பொடியை ½ கிராம், அளவாக பாலில் கலந்து, ஒரு நாளைக்கு 3 வேளைகள் வீதம் சாப்பிட்டுவர வேண்டும்.
 • ஜாதிக்காய் எண்ணெயை மேல் பூச்சாகத் தடவ, புண்கள், காயங்கள், பாரிசவாயு முதலியவற்றைக் கட்டுப்படுத்தும். மேலும், 2 சொட்டு அளவில் உள்ளுக்குள்; கொடுக்க, சீதபேதி, கழிச்சல் போன்றவையும் கட்டுப்படும்.
 • 2 சொட்டு ஜாதிக்காய் எண்ணெயை வலியுள்ள இடத்தில் பூச பல்வலி குணமாகும்.
 • ஜாதிக்காய் 100 கிராம், சுக்கு 100 கிராம், சீரகம் 300 கிராம், இவற்றை நன்றாகத் தூள் செய்து, பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, உணவுக்கு முன்னர், 2 கிராம் அளவு சாப்பிட்டுவர அஜீரணம் குணமாகும்.
 • ஜாதிக்காய், சுக்கு ஒவ்வொன்றும் 20 கிராம், சீரகம் 50 கிராம், நன்கு தூளாக்கி வைத்துக்கொண்டு, ½ கிராம் தூளுடன், ¼ தேக்கரண்டி சர்க்கரை கலந்து, உணவுக்கு முன்னர் சாப்பிட குடல்வாயு குணமாகும்.
 • ஜாதிக்காயை தூளாக அரைத்து அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால், உடல் சூடு குறைவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
 • வழக்கமாக, தூக்கமின்மை பிரச்னைகள் என்றாலே, ஆயுர்வேதத்தில் ஜாதிக்காயை பரிந்துரைப்பதுண்டு. ஜாதிக்காய் பொடியை பாலில் கலந்து குடித்தால், நன்றாக உறங்கலாம். மூளையின் செயல்பாட்டை தூண்டுகிறது.
 • முகத்தில் ஏற்படும், பருக்கள், கிருமிகளை அறவே போக்கும் தன்மை இதற்கு உண்டு. ஜாதிக்காய் பொடியுடன் தயிர் சேர்த்து முகத்தில் தடவினால், கிருமிகளை முழுமையாக நீக்கிவிடும்.
  முகத்தை பொலிவு பெற செய்வதற்கு, இப்பொடியை, தேன் அல்லது நீரில் குழைத்து முகத்தில் பயன்படுத்தினால், முகம் பொலிவு பெறுவதோடு, வெயிலினால் ஏற்படும் கருமையையும் அகற்றும்.
 • ஜாதிக்காய் பொடியை, அன்றாடம் தலைக்கு பயன்படுத்தும் எண்ணெயில் கலந்து தேய்த்து வந்தால், பொடுகு, வெள்ளை பூச்சுகள் குறையும். பலவீனமான பற்கள் மற்றும் கிருமிகளால் சொத்தை ஏற்படுவது போன்ற பிரச்னைகளை போக்கவும் ஜாதிக்காய் பயன்படுகிறது.
 • ஜாதிக்காயின் மருத்துவ குணங்கள்1
 • கடுக்காயின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ள
 • துளசியின் மருத்துவ குணங்கள்
 • நரம்பு மண்டலத்தில் நற்பணி ஆற்றுவதால், மனநோய்க்கும், மனதை உற்சாகப்படுத்தவும், நினைவாற்றலைப் பெருக்கவும், மனதை பரபரப்பிலிருந்து விடுவிக்கவும், ஜாதிக்காயைப் பயன்படுத்தலாம்’ என்கிறது இன்றைய அறிவியல்.
 • ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதிலும், வெள்ளை அணுக்களில் ஏற்படும் ரத்தப் புற்றுநோயைத் தடுப்பதிலும்கூட ஜாதிக்காய் செயலாற்றுகிறது’ என்கிறது தாய்லாந்தில் நடைபெற்ற ஆய்வு முடிவுகள்.
 • இனிப்புச் சுவையுடன் கூடிய தனித்துவ மணம் ஜாதிக்காயில் இருப்பதற்கு அதன் மைரிஸ்டிசின் (Myristicin) எனும் சத்துதான் காரணம். தோல் சுருக்கம் ஏற்படாமல் இளமையான தோலை முதுமையிலும் பெற்றிருக்க, ஜாதிக்காயின் மைரிஸ்டிசின் சத்தை ஆன்டி-ஏஜிங் க்ரீம்களில் சேர்க்கிறார்கள்.
 • குழந்தைப்பேறு இன்மை, ஆண்களின் விந்து எண்ணிக்கை குறைந்து வருவது, உடலுறவில் நாட்டமின்மை போன்ற பிரச்னைகளுக்கு ஜாதிக்காயும் ஜாதிபத்திரியும் மிகச் சிறந்த மருந்துகள்.
 • ஜாதிக்காய், சணல் விதை, ஏலம், கிராம்பு, பச்சைக் கற்பூரம், வெண்கொடிவேலி வேர் (அத்தனையையும் முறையாகச் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்) சம அளவு எடுத்துக்கொள்ளவும். இவற்றை நன்கு நுண்ணியமாகப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இதை வயிற்றுவலி, மாதவிடாய் தீவிர வலி, மைக்ரேன் தலைவலி ஆகியவற்றுக்குக் கொடுக்கலாம். இவற்றுக்கு இந்த மருந்து உடனடி வலி நிவாரணி!
Print Friendly, PDF & Email
Please follow and like us:

Leave A Response

You must be logged in to post a comment.