ஜீவாமிர்தம் (Jeevamirtham)

ஜீவாமிர்தம் (Jeevamirtham) என்றால் என்ன

ஒரு கிராம் மண்ணில் 5 லட்சம் கோடிக்கும் அதிகமான நுண்ணுயிரிகள் இருக்கின்றன். ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் இந்த நுண்ணுயிரிகள் இரட்டிப்பு அடைகின்றன. இந்த நுண்ணுயிர் கலவைதான் ஜிவாமிர்தம்(Jeevamirtham). ஜீவாமிர்தக் கரைசல் ஓர் பயிர் வளர்ச்சி ஊக்கி ஆகும். அது நுண்ணுயிர்களைப் பெருக்கும் ஓர் ஊடகம். 10 கிலோ பசுஞ்சாணத்தில் 3 லட்சம் கோடி நுண்ணுயிர்கள் உள்ளன. இந்த நுண்ணுயிர்கள் ஜீவாமிர்தக் கரைசலுடன் மண்ணுக்குள் செல்லும், அப்போது அவை மீண்டும் பல்கிப் பெருகும். இதன் மூலம் நிலம் வளம் பெற்று, நல்ல விளைச்சலைக் கொடுக்கும். நுண்ணுயிர்களைப் பொறுத்தவரை பெருக்கம் அடைந்து கொண்டேதான் இருக்கும், ஆனால், மழை பெய்து நிலத்தில் தண்ணீர் தேங்கி இருக்கும் போது அவை பெருக்கம் அடையாது.

ஜீவாமிர்தம் (Jeevamirtham) தயாரிக்க தேவையான பொருட்கள்

 1. நாட்டு பசுஞ்சாணம் = 10 கிலோ
 2. நாட்டு பசுங்கோமியம் = 10 லிட்டர்
 3. வெல்லம் (கருப்பு நிறம்) = 2 கிலோ (அ) கரும்புச்சாறு 4 லிட்டர் (அ) பனம் பழம் = 4 (அ) கரும்பின் சக்கைைள் – 10 கிலோ (அ) இனிப்பு ரசோளம் – 2 கிலோ
 4. பயறு வகை மாவு = 2 கிலோ (தட்டைப்பயறு (அ) துவரை (அ) கொள்ளு (அ) கொண்டைக் கடலை (அ) உளுந்து)
 5. பயன் படுத்தும் நிலத்தின் வரப்பிலிருந்து எடுக்கப் பட்ட ஜீவனுள்ள மண் கையளவு
 6. தண்ணீர் = 200 லிட்டர் (குளோரின் கலக்காதது)

தயாரிப்பு முறை

தொட்டியில் நாட்டு பசுஞ்சாணம், நாட்டு பசுங்கோமியம், பயறு வகை மாவு, வெல்லம் இவற்றை முதலில் நன்கு கட்டி இல்லாதவாறு கரைத்து கொள்ள வேண்டும். இதனுடன் 200 லிட்டர் தண்ணீரை சேர்த்து நிழலான இடத்தில் தொட்டியின் வாய் பகுதியை முடி வைக்க வேண்டும், தினமும் 3 முறை((காலை, மதியம், மாலை) வீதம் 3 நாட்களுக்கு தவறாமல் கடிகார சுற்றில் ஒரு குச்சியின் முலம் நன்றாக ஒரு நிமிடம் கலக்கி விடவேண்டும், ஒவ்வொரு முறையும் குச்சியை சுத்தமாக நீரில் கழுவி விடவேண்டும் இல்லையென்றால் கலக்கிய இடத்தில் கொசுக்கள் முட்டை இட்டுவிடும், அடுத்தமுறை அதை அப்படியே பயன்படுத்தினால் கொசு முட்டைகள் கரைசலை கெடுத்து இரு துர்நாற்றம் வீசும்படி செய்துவிடும் (இதை கண்டீப்பாக பயன்படுத்தகூடாது) மற்றும் நம் உழைப்பும் வீணாகிவிடும்.

தாமிர பாத்திரங்களை உபையோகித்து எவ்விதக் கரைசலையும் தயாரிக்கக் கூடாது.

கரைசலை நிழலில் கவத்திருக்க வேண்டும். இறுக்கமாக மூடி கவத்திருக்கக் கூடாது.

பயன்படுத்தும் முறை

 • ஜிவாமிர்தம் (Jeevamirtham) எல்லா வகை பயிர்களுக்கும் நீரில் கலந்து பயன்படுத்தலாம். எந்த வகையான கட்டுப்பாடும் இல்லை.
 • ஜீவாமிர்தக்  கரைசலினை நேரடியாக பயிர்களுக்குப் பயன்படுத்த கூடாது. கெட்டியான திரவ நிலையிலிருக்கும் ஜீவார்மிதக் கரைசலை தண்ணீர் கலக்காமல் அப்படியே தெளித்தால் இலை, தழைகளில் உள்ள துளைகள் மூடப்பட்டுவிடும். இதன் மூலம் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மூச்சை நிறுத்திவிட்டு எப்படி நம்மால் உயிர் வாழ முடியாதோ அதுபோலத்தான் பயிர்களும். தாவரங்கள் இலையில் உள்ள துளைகள் மூலமாகத்தான் சுவாசிக்கும். எனவே எக்காரணத்தைக் கொண்டும் ஜீவார்மிதக் கரைசலை பயிர்களுக்கு நேரடியாக தெளிக்க கூடாது. ஜீவார்மிதக் கரைசல் 20 லிட்டர், தண்ணீர் 200 லிட்டர் என்ற விகிதத்தில்(1:10) கலந்து தெளியுங்கள். இப்படி செய்வதுதான் சரியான முறை.
 • ஜீவாமிர்தக் கரைசலைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், நிலத்தில் மண்புழுக்களின் எண்ணிக்கை பெருகும் மற்றும் நிலத்தின் மண் மிகவும் மென்மையாக இருக்கும். இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் நிலத்தில் நுண்ணுயிரிகள் பல்கிப் பெருகி வேலை செய்து கொண்டுள்ளன என்று பொருள்.
 • ஜீவாமிர்தக் கரைசலை வயலில் விடும்பொழுது 15 அடி ஆழத்தில் சமாதி நிலையிலிருக்கும் மண்புழுக்கள் துள்ளி எழுந்து மண்ணைக்கிளறிக் கொண்டு மேலே வந்து விடும், இதனால் மண் வளம் பண் மடங்கு பெருகும்.

ஒரு ஏக்கருக்குத் தெளிப்பதற்குத் தேவையான அளவுகள்

4 மாதப் பயிர்கள் (120 நாட்கள் )

 • 15 -ம் நாளில் 5 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 100 லிட்டர் தண்ணீர்.
 • 30 -ம் நாளில் 10 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 150  லிட்டர் தண்ணீர்.
 • 60 -ம் நாளுக்கு மேல்,20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200  லிட்டர் தண்ணீர்.
 • 90 -ம் நாள் அல்லது வதை பால் பிடிக்கும் தருணத்தில் 5 லிட்டர் புளித்த மொருடன் 200  லிட்டர் தண்ணீர்.

6 மாதப் பயிர்கள் (180 நாட்கள் )

 • 30 -ம் நாளில் 5 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 100  லிட்டர் தண்ணீர்.
 • 60 -ம் நாளில் 10 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 150  லிட்டர் தண்ணீர்.
 • 90 -ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200  லிட்டர் தண்ணீர்.
 • 120-ம் நாளில்  5 லிட்டர் புளித்த மொருடன் 200  லிட்டர் தண்ணீர்.
 • 150 -ம் நாளில்,10 லிட்டர் முளைகட்டிய தானியக் கரைசலை 30 லிட்டர்   ஜீவாமிர்தத்துடன் 200  லிட்டர் தண்ணீர்.

ஓர் ஆண்டு  பயிர்களுக்கு

 • 30 -ம்   நாளில் 5 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 100  லிட்டர் தண்ணீர்.
 • 60 -ம்   நாளில் 10 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 150  லிட்டர் தண்ணீர்.
 • 90 -ம்   நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200  லிட்டர் தண்ணீர்.
 • 120-ம்  நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200  லிட்டர் தண்ணீர்.
 • 150 -ம் நாளில் 5 லிட்டர் புளித்த மொருடன் 200  லிட்டர் தண்ணீர்.
 • 180 -ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200  லிட்டர் தண்ணீர்.
 • 210 -ம் நாளில் 2 லிட்டர் தேங்காய்த் தண்ணீருடன் 200  லிட்டர் தண்ணீர்.
 • 240 -ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200  லிட்டர் தண்ணீர்.
 • 270 -ம் நாளில் 10 லிட்டர் முளைகட்டிய தானியக் கரைசலை 30 லிட்டர்  ஜீவாமிர்தத்துடன் 200  லிட்டர் தண்ணீர்.
 • அதன் பிறகு மாதந்தோறும் 30 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200  லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும் .
 • பழ மரங்களாக இருப்பின் காய்கள் முதிர்ச்சி பெறுவதற்கு  2 மாதங்களுக்கு முன்பு 2 லிட்டர் தேங்காய்த் தண்ணீருடன் 200 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவும்.
தகவல்
ஜீவாமிர்தக்  கரைசல் 7 நாட்கள் வரை கெடாது. பின்பு கெட ஆரம்பித்து விடும். மூன்று நாட்களுக்குள் பயன்படுத்துவது மிக சிறந்தது. 

இயற்கை முறைகளினை பயன்படுத்துவோம். நம் மண் வளம் காப்போம்.


Print Friendly, PDF & Email
Please follow and like us:

6 Comments so far. Feel free to join this conversation.

 1. Rachele July 8, 2016 at 2:47 am -

  I see you don’t monetize your blog, i know how to make good passive income
  using one simple method, just search in gogle for: Coisin’s tricks

 2. Bobbye Thalacker July 2, 2016 at 7:54 am -

  I appreciate, cause I found exactly what I was looking for. You have ended my 4 day long hunt! God Bless you man. Have a great day. Bye

 3. venkatesh February 14, 2016 at 10:34 pm -

  Its very useful

 4. Murugesan.G Ganesan February 11, 2016 at 11:04 pm -

  மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி.

  • Arulkumar
   Arulkumar February 12, 2016 at 10:33 pm -

   நன்றி.

 5. vignesh January 24, 2016 at 12:33 pm -

  I’ll send u some information as soon as possible could u send me ur number then I’ll what’s up u this is my num8508589944

Leave A Response

You must be logged in to post a comment.