கடுக்காய் லேகியம் (Kadukkai Lekiyam)

கடுக்காய்க்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் உண்டு. கடுக்காயை பொடியாகவும் மற்றும் லேகியமாகவும் உண்ணும் பழக்கம் நம் முன்னோர்களிடையே உண்டு. கடுக்காயின் விதையை நீக்கி நன்கு காயவைத்து போடி செய்து தினமும் நீரில் கலந்து பருகி வர உடலின் கழிவுகள் அனைத்தும் நீங்கும்.

கடுக்காய் லேகியம் செய்தும் உண்ணலாம். கடுக்காய் லேகியம் செய்யும் முறை பற்றி கீழே காண்போம்.

கடுக்காயின் வகைகள்

பிஞ்சுக் கடுக்காய் மலச்சிக்கலைப் போக்கும். மலத்தை இளக்கும்; உடலுக்கு அழகூட்டி, மெருகூட்டும்.

செங்கடுக்காய் காசநோயைப் (டி.பி) போக்கி மெலிந்த உடலைத் தேற்றி அழகாக்கும்.

வரிக்கடுக்காய் பல்வேறு நோய்களை விரட்டும்; விந்தணுக்களை அதிகரிக்கச் செய்யும்.

இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர் ஐந்து கிராம் கடுக்காய்த் தூளை எடுத்து, வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும். இஞ்சி, சுக்கு, கடுக்காயை ஒரு மண்டலம் (48 நாள்கள்) சாப்பிட்டுவந்தால் செரிமானக் கோளாறுகள் விலகும்; மலச்சிக்கல் குணமாகும்.
கடுக்காய்த்தூளுடன் சிறிதளவு சோம்பு (பெருஞ்சீரகம்) சேர்த்து மண் சட்டியில் தண்ணீர்விட்டு நன்றாகக் காய்ச்சி, வடிகட்ட வேண்டும். அதனுடன் சுத்தமான தேன் கலந்து தினமும் இரண்டு வேளை குடித்துவந்தால் உடல் எடை குறையும்.

மேலும் படிக்ககடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai)

மூன்று கடுக்காய்த் தோல்களுடன் தேவையான அளவு இஞ்சி, மிளகாய், புளி, உளுந்து சேர்த்து நெய்யில் வதக்கி உப்பு சேர்த்து துவையலாக அரைக்கவும். இதைச் சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டுவந்தால் செரிமான சக்தி அதிகரிக்கும்; மலச்சிக்கல் விலகும்; உடல் பலம் பெறும்.
இப்படிப் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் கடுக்காய், உடல் பலவீனத்தைப் போக்கும்; ஆண்களின் உயிரணு குறைபாடுகளை நீக்கி என்றும் இளமையான தோற்றத்தைத் தரும்.

பொதுவாக, மலச்சிக்கல் இல்லாமல் இருந்தாலே மனிதனின் அத்தனை செயல்பாடுகளும் சரியாக இருக்கும். தாம்பத்யக் குறைபாடு இல்லாமல் இருந்தாலே போதும். தம்பதியரின் வாழ்வு சிறப்பாக இருக்கும். இந்த அற்புதமானப் பணிகளை மிகச் சிறப்பாகச் செய்யக்கூடியது கடுக்காய்!

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Leave A Response