கரைசல் வகைகள்(Natural Pesticide for Plants)

பயிர் வளர்வதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வளங்கி பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பவை பயிர் வளர்ச்சி ஊக்கி ஆகும்.

புகையிலை கரைசல், மண்புழு உரம், இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல், மோர் கரைசல், வேம்பு கரைசல், பஞ்சகவ்யம், பீஜாமிர்தம், அமிர்த கரைசல், ஜீவாமிர்தம், அக்னி அஸ்திரம் போன்றவை இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் சில பயிர் வளர்ச்சி ஊக்கிகள் ஆகும்.

புகையிலை கரைசல் தயாரித்தல்

 • 150 கிராம் நீட்டு புகையிலையை எடுத்துக்கொண்டு சிறு சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும்.
 • பிறகு 1 லிட்டர் தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
 • தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது புகையிலையை தண்ணீரில் போட்டு பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி ஓர் இரவு அல்லது 10 மணி நேரம் மூடி வைத்துவிட வேண்டும்.
 • பிறகு நன்கு கலக்கி வடிகட்ட வேண்டும்.
 • கிடைக்கக்கூடிய கரைசலுடன் 10 மடங்கு தண்ணீர் சேர்த்து ஒரு ஏக்கர் எல்லாவகை பயிகளுக்கும் தெளிக்க வேண்டும்.

கட்டுப்படுத்தும் பூச்சிகள்

 • அசுவுணி, பச்சைதத்துப்பூச்சி, இலைப்பேன், மாவுப்பூச்சி.

செரிவூட்டம் செய்யப்பட்ட மண்புழு உரம்

 • செரிவூட்டம் செய்யப்பட்ட மண்புழு உரம் என்பது பல நுண்ணுயிரிக் கரைசல்களை சாணத்துடன் கலந்து செரிவூட்டி மண்புழு உரமாக மாற்றுவது.
 • ஒருடன் சாணத்தை மண்புழு பெட்டியில் பரப்பி அதன் மீது தலா 200 கிராம் அசோஸ்பைரில்லம், 200கிராம் சூடோமோனஸ், பாஸ்போபாக்டீரியா மற்றும் பேசிலஸ் ஆகியவற்றை கலந்து தெளிக்க வேண்டும்.
 • இதனால் பெட்டில் பல மடங்கு நுண்ணுயிரிகள் பெருகுவதால் மண்புழுக்களிலிருந்து நுண்ணுயிரிகளுக்கும், நுண்ணுயயயிரிகளில் இருந்து மண்புழுக்களுக்கும் ஊட்டம் மாறி மாறிச் செல்லும்.
 • இதனால் கிடைக்கும் மண்புழு உரம் நுண்ணுயிரிகளின் செறிவூட்டப்பட்ட கலவையாக மாறிவிடுகிறது.
 • இதைப் பயன்படுத்தும்போது ஆரோக்கியமான விளைச்சல் கிடைக்கும்.

இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல்

 • பூண்டு ஒரு கிலோ எடுத்து 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
 • பின்பு நல்ல விழுதாக வருமாறு அரைத்துக் கொள்ள வேண்டும்.
 • அரை கிலோ பச்சை மிளகாய் மற்றும் அரை கிலோ இஞ்சி எடுத்து தனித்தனியாக விழுது பதத்தில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
 • பின் இவ்வாறு தனித்தனியாக அரைத்த விழுதுகளை நன்றாக கலந்து ஒரு காடா துணியில் வைத்துக்கொள்ள வேண்டும்.
 • இவ்வாறு தயார் செய்த காடா துணியில் வைக்கப்பட்ட கலவையை 6 லிட்டர் தண்ணீரில் முக்கி ரசத்தை வடிக்கவும். இப்போது நமக்கு 6 லிட்டர் கரைசல் தயார்.
 • இந்த கரைசலை பூச்சி தாக்குதல் குறைவாக இருந்தால் 500 மில்லியும் தாக்குதல் அதிகமாக இருந்தால் 1 லிட்டரும் எடுத்து முறையே 9.5 மற்றும் 9 லிட்டர் தண்ணீரில் கலந்து பூச்சிகள்/செடிகள் மீது தெளித்தால் புழு வகை பூச்சிகள் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும்.
 • காதி சோப்பை தண்ணீரில் கரைத்து அடித்தால் அது நாம் அடிக்கும் இயற்கை பூச்சிமருந்து கரைசலை செடியின் மீது ஈர்த்து வைத்துக்கொள்ள உதவும்.
 • இதன்மூலம் இக்கரைசலின் வீரியமும் அதிக நேரம் செடியில் இருக்கும்.
 • இதை தயார் செய்யும்போது கைக்கு கையுறை தேவை. இல்லையெனில் கை எரிச்சல் அதிகமாக இருக்கும். கவனம் தேவை.

தொல்லுயிர் கரைசல்

 • 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரம் எடுத்து 5 கிலோ சாணத்துடன் 3/4 கிலோ நாட்டு சர்க்கரை, 26 கிராம் கடுக்காய் தூள், 2.5 கிராம் அதி மதுரப்பொடி சேர்த்து பிசைந்து காற்றுப்புகாமல் 10 நாட்கள் வைத்து இருக்க வேண்டும்.
 • இதனை இலைவழி ஊட்டமாக 1க்கு 10 பங்கு நீர் கலந்து தெளிக்கலாம். இது ஓர் சிறந்த வளர்ச்சி ஊக்கியாகும்.
 • பயறுவகை பயிர்களில் சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய
 • பயறு வகை பயிர்கள் நடவு செய்த 15 நாட்களுக்குள் பயறுவகை நுண்ணூட்டம் ஒரு ஏக்கருக்கு 5 கிலோ எடுத்து 20 கிலோ மணலுடன் கலந்து போடவும்.
 • 2 கிலோ ரைசோபியம், 2 கிலோ பாஸ்போ பாக்டீரியாவை 50 கிலோ தொழுவரம் அல்லது 50 கிலோ மண்புழு உரத்துடன் கலந்து போடவும்.
 • பூ எடுக்கும் சமையமாக இருந்தால் 3 நாட்கள் புளித்த தயிரை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி அளவு கலந்து காலை அல்லது மாலை வேளையில் தெளிக்க வேண்டும்.
 • தழைச்சத்து பற்றாக்குறை முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறமாகி உதிர்ந்துவிடும். செடியில் இலைகளின் எண்ணிக்கை குறைத்து, சிறுத்து தண்டுப்பகுதி மெலிந்து, கிளைகள் அதிகம் இன்றி காணப்படும்.
 • வளர்ந்த பயிரில் அறிகுறிகள் தென்பட்டவுடன் பஞ்சகவ்யா அல்லது அமிர்தக்கரைசல் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி காலை அல்லது மாலை வேளையில் இரண்டு முறை 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
 • இரசாயன முறையில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5கிராம் யூரியா கரைசலை இரண்டு முறை 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
 • மணிச்சத்து பற்றாக்குறை செடியின் வளர்ச்சி குறைந்து, இலைகள் சிறிதாக மேல் நோக்கிக் காணப்படும்.
 • அடிப்பகுதியில் உள்ள இலைகள் கரும்பச்சை நிறத்துடன் காணப்படும். பயிர் முதிர்ச்சியடைய அதிக நாட்கள் எடுக்கும்.
 • வளர்ந்த பயிரில் அறிகுறிகள் தென்பட்டவுடன் பஞ்சகவ்யா அல்லது அமிர்தக்கரைசல் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி காலை அல்லது மாலை வேளையில் இரண்டு முறை 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
 • இரசாயன முறையில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம் டி.ஏ.பி கரைசலை காலை நேரத்தில் தெளிக்க வேண்டும் இரண்டு முறை 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

பூ உதிர்வதை தடுக்க

 • 20 கிராம் பெருங்காயத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும்.
 • இந்த கரைசலை செடிகளுக்கு தெளிப்பதன் மூலம் சுரைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், காய்கறிபயிர்களில்பூஉதிர்வதைதடுக்கலாம்.
 • மிளகாயில் பூசண நோய்த்தாக்குவதால் பூக்கள் பூத்தவுடன் கீழே கொட்டிப் போய் விடும்; மாலை வேளைகளில் வீட்டுத் தோட்டங்களில் சாம்பிராணி புகை போடுவதால் பூஞ்சாண நோய்கள் பரவுவதைத் தடுக்கலாம்.
 • காற்று வீசும் திசைக்கு நேர்எதிர்திசையில் நின்று பயிர்களின் அடிப்பகுதியில் புகைபடுமாறு புகைமூட்டம் போட வேண்டும்.
 • ஒரு மண்சட்டியில் பற்றவைத்தகரியைப் போட்டு சாம்பிராணி பொடியை அதில்தூவி புகைமூட்டம் போட வேண்டும்.

விதை, நாற்று நேர்த்தி செய்தல்

 • விதை, நாற்று நடுவதற்கு முன், ஒரு கிலோ சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் பூஞ்சாண கொல்லியை கலந்து, நாற்று நேர்த்தி செய்வதால், விதை மூலம் பரவக்கூடிய நோய்களான குலைநோய், இலைக்கருகல்ஆகியவற்றைதடுக்கலாம்.
 • ஒரு ஏக்கருக்குதேவையான விதையுடன், 400 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா (400 கிராம்), உயிர்உரத்தை விதையுடன் நன்கு கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
 • அசோஸ்பைரில்லம் காற்றில் இருக்கும் தழைச்சத்தை உறிஞ்சி பயிருக்கு அளிக்கும். அதேசமயம், பாஸ்போபாக்டீரியா மண்ணில் கிடைக்காத மணிச்சத்தை கரைத்து பயிருக்கு வழங்குகிறது.
Print Friendly, PDF & Email
About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.