கருஞ்சீரகம் (Nigella Sativa)

பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்ட நறுமண உணவுப் பொருளான கருஞ்சீரகம் (Nigella sativa) தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவினைத் தாயகமாகக் கொண்ட தாவரம். நீண்ட காம்புகளுடன் வெளிர் நீல நிறத்தில் மலர்கள் கொண்ட இத் தாவரம் 20 முதல் 30 செ.மீ. உயரம் வரை வளரும். கனியின் மேற்பகுதி பிளவுற்று விதைகள் வெளியாகும். ஒரு காயில் பல விதைகள் அடங்கியிருக்கும். இவை கறுப்பாகவும், உறுதியாகவும் இருக்கும். இதை சாப்பிட்ட உடன் தொண்டையில் ஒரு விதமான அரிப்புணர்வை சில நிமிடங்களுக்கு ஏற்படுத்துகிறது.

சத்துக்கள்

 • கருஞ்சீரகத்தில் உள்ள ‘தைமோகியோனின்’ என்ற வேதிப்பொருள், சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
 • அமினோ அமிலங்கள்
 • அவசியமான கொழுப்பு அமிலங்கள்
 • வைட்டமின் பீடா-கரோடின்
 • கால்சியம்
 • இரும்புச் சத்து
 • பொட்டாசியம்

மருத்துவ குணங்கள்

 • புற்றுநோய், இருதயநோய் மற்றும் ஆஸ்துமா ஆகியவற்றை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் இதன் விதைகளுக்கு உண்டு.
 • கருஞ்சீரகம் நோய் எதிர்பாற்றல் முறைமையை வலுப்படுத்துகின்றது.
 • கருஞ்சீரகம் சக்தி வாய்ந்த ஆண்டிஆக்ஸிடண்ட்(antioxidant) ஆகும்.
 • மற்றும் வீக்கம் தணிக்கும் (anti-inflammatory) குணத்தையும் கொண்டுள்ளது.
 • இதனால் ஆஸ்துமா மற்றும் சுவாச ஒவ்வாமை நோய்களுக்கான தகுந்த எதிர்ப்பு சக்தியினைத் தருகிறது.

குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு

ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை தூள் செய்து, 50 மி.லி., தேங்காய் எண்ணெய்யில் சூடு செய்து, வடிகட்டி, இரண்டு துளி மூக்கில் விட்டால் மூக்கடைப்பு நீங்கும்.

தொடர் இருமலால் பாதிக்கப்படுவோர், 1 தேக்கரண்டி கருஞ்சீரக பொடியை தேன், அரை தேக்கரண்டி அரைத்த பூண்டு விழுதுடன் கலந்து சாப்பிட்டால் குணமாகும்; நுரையீரலில் உருவாகும் சளியை அகற்றும்.

சிறுநீரக கற்கள்

கருஞ்சீரக பொடியை, ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, சுடுநீரில் தேன் கலந்து பருகினால், சிறுநீரக கற்களும், பித்தப்பை கற்களும் கரையும். இதை காலை, மாலை இருவேளை சாப்பிடலாம்.

தோல் நோய்களுக்கு.

இதை பொடி செய்து கரப்பான் மற்றும் சொரியாஸிஸ் நோய் இருப்பவர்கள் தேய்த்து குளித்து வரலாம். புண்களால் ஏற்படும் தழும்புகளும் மறையும்.

குளியலுக்கு பயன்படுத்தும் பொடிகளில் கருஞ்சீரகத்தை அரைத்து சேர்த்து பயன்படுத்துவது சிறந்தது.

புற்றுநோய் கட்டிகள்

கணையப் புற்று நோயை கட்டுப்படுத்துவதில், இது பெரும் பங்கு வகிக்கிறது. கருஞ்சீரகத்தில் ‘இன்டெர்பிதான்’ என்ற இயற்கை வேதிப்பொருள் உள்ளது. அது எலும்பு மஜ்ஜை உற்பத்தியை சீராக்கி, புற்றுநோய் கட்டிகள் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கிறது.

பெண்களுக்கு

 • சில பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் இருக்கும். அந்த நாட்களில் அடிவயிறு கனமாகி, சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் ஏற்படும். இதற்கு கருஞ்சீரகம் மருந்தாக பயன்படுகிறது. அதை வறுத்து லேசாக வெடிக்க விட்டு தூள் செய்து வைத்துக்கொண்டு மாதவிடாய் ஏற்படும் தேதிக்கு, பத்து நாட்கள் முன்பிருந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, தினமும், இருவேளை தேன் அல்லது கருப்பட்டி கலந்து சாப்பிட வேண்டும். இது மாதவிடாய் சிக்கலை போக்கும். வயிறு கனம் குறைந்து, சிறுநீர் நன்றாக பிரியும்.
 • பிரசவத்துக்கு பின்பு கருப்பையில் உள்ள அழுக்கை நீக்க, குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து, ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக பொடியுடன் பனைவெல்லம் கலந்து உருண்டை செய்து காலை, மாலை ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

ரத்தம் சுத்திகரிக்க

 • கருஞ்சீரகம் பல முக்கியமான சித்த மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.
  வெந்தயம் கால் கிலோ, ஓமம் 100 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம் இதை தனித்தனியாக சுத்தம் செய்து, ஒரு வாணலியில் இட்டு கருகாமல் வறுத்து தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். இதை ஒரு ஸ்பூன் அளவுக்கு, இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வர வேண்டும். இதை சாப்பிட்ட பின், எந்த உணவும் உட்கொள்ளக் கூடாது.
  தினமும் இப்படி செய்து வந்தால், உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும், மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேறி விடும்.
 • இதனால் தேவையற்ற கொழுப்பு நீங்குகிறது. ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.

சிறந்த நோய் நிவாரணி

கர்ப்பப்பை வலி, சிரங்கு, கண்வலி, போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். கருஞ்சீரகம், சிறந்த நோய் நிவாரணி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, வாரத்தில் சில நாட்கள் எடுத்துக் கொண்டால், உடல் நலனுக்கு சிறந்தது.

 

Print Friendly, PDF & Email
About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.