சதக்குப்பையின் மருத்துவ குணங்கள் (Medicinal Properties of Sathakuppai)

சோயிக்கீரை, மதுரிகை என்று பல பெயர்களை கொண்ட சதகுப்பை ஒரு மருத்துவ செடி ஆகும். பார்ப்பதற்கு சீரக செடியை போல் தோற்றமளிக்கும் இது நாலைந்து அடி உயரம் வளரக் கூடியது. மலைகளிலும் நிலத்திலும் பயிரிடப்படும் குறுஞ்செடி. குடை விரித்தாற்போல் நரம்புகள் தோன்றும். அவற்றின் இடையே சிவப்பு மலர்கள் பூக்கும். விதைகள் பழுத்ததும்  தனியாகப் பிரிக்கப்படும். சோயிக் கீரையின் இலைகள் இனிப்பும் கார்ப்பும் கலந்த சுவையுடன் இருக்கும். உணவுக்கு ஏற்றது, கீரைக்கடைகளில்  கிடைக்கும். ஒவ்வொரு காம்பிலும் நூற்றுக்கணக்கான மலர்கள் தோன்றும். அதனால் இது “சதபுஷ்பா” என்று பெயர் பெற்றது.

சதகுப்பை எல்லா வகை நிலத்திலும் வளரக்கூடியது. நாட்டு மருந்து கடைகளில் எளிதில் கிடைக்கக் கூடியது. நாள் முழுவதும் கடும் வேலை செய்பவர்கள் இரவு சாப்பாட்டில் மருந்து பொருட்கள் என இதை அரைத்து  குழம்புடன் கலந்து சாப்பிடுவது இன்றும் வழக்கில் உள்ளது. கீழ் வாய்கடுப்பு, வலி நோய், தலை வலி, காது வலி, மூக்கில் நீர் பாய்தல், வாதம், முதலியவற்றை போக்கும் மருத்துவக் குணம் உடையது. நல்ல  பசியை ஏற்படுத்தும். ஈரல், நுரையீரல், இரைப்பை இவைகளிலுள்ள சிக்கலை நீக்கி உடலுக்கு நன்மை தரும். அளவுக்கு அதிகமானால் விக்கல், வாந்தி, தலை சுற்றல் ஆகியவற்றை உண்டாக்கும்.

பெண்களுக்கு

சில பெண்களுக்கு மாதவிடாய் தோன்றும் காலங்களில் ரத்தபோக்கு அதிகமாக இருக்கும். இவர்கள் சதகுப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் வகைக்கு சம அளவாக  எடுத்து இடித்துப் பொடியாக்கி சம அளவு பனைவெல்லம் சேர்த்து அரைத்து 5 கிராம் காலை, மாலை இரு வேளை சாப்பிட்டு சிறிது நேரம் கழித்து சோம்புக் குடிநீர் குடித்து வர மாதவிடாய் கோளாறு, அதிகமான ரத்தபோக்கு நீங்கி கருப்பை பலப்படும்.

மாதவிடாய் சுழற்சி சரியாக அமையாமல் அவதிப்படுகிறவர்கள், மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்னரே சத குப்பை, எள், கருஞ் சீரகம் போன்றவற்றை சம அளவு எடுத்து லேசாக வறுத்து பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தேவையான அளவு பனை வெல்லத்துடன் கலந்து எலுமிச்சைக்காய் அளவு உருண்டை செய்து நாள்தோறும் இரு வேளை சாப்பிட மாதவிடாய் பிரச்னை தீரும்.  இதன் மூலம் மாதவிடாய் சுழற்சி சீராகும். அந்த கால கட்டத்தில் ஏற்படும் வலியும், சோர்வும் நீங்கும்.

குழந்தைகளுக்கு

குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தத்திற்கு சத குப்பை இலையைக்  கைப்பிடியளவு அரைத்து எடுத்து 500 மி.லி விளக்கெண்ணையுடன் கலந்து காய்ச்சி வடிகட்டி 5 சொட்டு வீதம் 3 வேளை கொடுத்தால் தீரும்.

வலிப்பு நோய்

வலிப்பு நோய்களில்  மிக கொடுமையானது காக்கை வலிப்பு. எத்தனை வலிமையுள்ளவர்களாக இருந்தாலும், உடல் வனப்புடன் விளங்கினாலும், இந்த காக்கை வலிப்பு ஏற்பட்டால்  அவர்கள் படும் மனத்துன்பம், உடல் துன்பம் அளவிட முடியாது.  இவர்கள் சதகுப்பை இலையைக் கைப்பிடியளவு அரைத்து எடுத்து 500 மி.லி விளக்கெண்ணையுடன் கலந்து காய்ச்சி வடிகட்டி மூன்று வேளையும் 5 சொட்டு  வீதம் தொடர்ந்து 12 நாட்கள் கொடுத்து வர வேண்டும். அடுத்த 12 நாட்கள் கொடுக்க கூடாது.

அதன் பிறகு மீண்டும் 123 நாட்கள் கொடுக்க வேண்டும். நோயின்  வீரியத்தை பொறுத்து கொடுக்கும் காலத்தை முடிவு செய்ய வேண்டும். உடல் அதிகளவில் சூடாகிவிட்டதாக தெரிந்தால், நிறுத்தி விட வேண்டும். மூன்று நாட்களுக்கு பிறகு மீண்டும் கொடுக்க வேண்டும்.  மேலும் தலை நோய், காது வலி, பசி மந்தம், மூக்கு நீர்ப்பாய்தல் உள்ளவர்கள் இதே முறையில் எடுத்துக் கொண்டால் அவை குணமாகும்.

சத குப்பை இலையை மைய அரைத்து 15 கிராம் எடுத்து ஒரு 200மிலி தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டி 30 மில்லியளவு 3 வேளையாகக்  குடித்து வர பசி மந்தம், மூக்கு நீர்ப்பாய்தல் குணமாகும்.

Print Friendly, PDF & Email
About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.