கால்நடைகளின் இனப்பெருக்கத்துக்கு தாது உப்புக் கலவை(Mineral Salt Mixture For Cattle)

கறவை மாடுகளில் தாது உப்புகளின் பயன்பாடு

 • கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், குளோரின், கந்தகம் போன்றவைகள் அதிக அளவிலும் தாமிரம், துத்தநாகம், கோபால்ட், மாங்கனீசு, அயோடின், மாலிப்டினம், இரும்பு, செலினியம் போன்றவைகள் குறைந்த அளவிலும் தேவைப்படும் தாது உப்புக்கள் ஆகும்.
 • தாது உப்புக்களின் குறைவினால் ஏற்படும் பிரச்னைகள்: கன்றுகள் மட்டும் கிடேரிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். பசுக்கள் சீரான இடைவெளியில் சினைப்பருவத்திற்கு வராததோடு மட்டுமல்லாமல் கருத்தரிப்பும் தடைபடும்.
 • கருத்தரித்து இருந்தாலும் சினைக்காலம் முடியும் வரை குட்டிகளைத் தாங்கும் சக்தி குறைந்து கருச்சிதைவு ஏற்பட்டு கன்று வீச்சுகளும் ஏற்படக்கூடும். சில சமயங்களில் தாது உப்புகளின் பற்றாக் குறையினால் இறந்த குட்டிகளை ஈணுதல் மற்றும் குறைமாத, வலிமை குன்றி எலும்பும் தோலுமாக குட்டிகள் பிறக்க நேரிடலாம். ஈன்ற கால்நடைகளின் பால் உற்பத்தி குறையும்.
 • தாது உப்புக்கலவைகள் மினல் மிக்ஸ், மின்கம், புரோமின், அயுமின் எனப் பல பெயர்களில் சந்தைகளில் கிடைக்கப் பெற்றாலும் தனுவாசு தாது உப்புக் கலவை என்ற பெயரில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால் அறிமுகப் படுத்தப்பட்டு இப்பல்கலைக் கழகத்தின்கீழ் செயல்படும் அனைத்து பயிற்சி நிலையங்கள் மற்றும் வேளாண் அறிவியல் நிலையங்களிலும் 1 கிலோ 55 ரூபாய் வீதத்தில் கிடைக்கப் பெறுகிறது.
தாது உப்புக் கலவையின் அளவீடுகள்
 • கால்சியம் 23%
 • பாஸ்பரஸ் 12%
 • மெக்னீசியம் 6.5%
 • இரும்பு 0.5%
 • அயோடின் 0.026%
 • தாமிரம் 0.077%
 • மாங்கனீசு 0.12%
 • கோபால்ட் 0.012%
 • துத்தநாகம் 0.38%
 • ப்ளோரின் 0.07% (அதிக பட்சம்)
 • செலீனியம் 0.3%
 • கந்தகம் 0.5%
தாது உப்புக்களின் பயன்கள் மற்றும் குறை நோய்கள்
வ.எண் பெயர் பயன்கள் குறைபாடு
1 கால்சியம்/பாஸ்பரஸ் எலும்பு வளர்ச்சி பால்சுரம், ரிக்கட்ஸ் எலும்புருக்கி நோய், சினைப்பிரச்னை
2 சோடியம் குளோரைடு உடல்வளர்ச்சி, இனப்பெருக்கம் பசியின்மை, வளர்ச்சி குன்றல், வலிப்பு நோய்
3 மெக்னீசியம் செரிமானம், நரம்பு மண்டல செயல்பாடுகள் வலிப்பு நோய்
4 கந்தகம் உறுப்பு வேலைகள் நுண்ணுயிர் செரிமானம் எடை குறைதல், அதிக உமிழ்நீர், கண்ணீர் சுரப்பு
5 இரும்பு நோய் எதிர்ப்புத்திறன், ரத்த ஓட்டம் சுவாசக் கோளாறுகள், ரத்தசோகை
6 தாமிரம் நரம்பு மண்டல செயல்பாடுகள் கழிச்சல், பசியின்மை, ரத்தசோகை
7 மாங்கனீசு இனப்பெருக்கம் குறையுடன் கன்றுகள்
8 கோபால்ட் வைட்டமின் “பி12′ உற்பத்தி ரத்தசோகை, இனவிருத்தி உறுப்பு வளர்ச்சி குறைவு, கழிச்சல்
9 செலினியம் சினைப்பிடிப்பு கருச்சிதைவு
10 அயோடின் தைராய்டு சுரப்பி வளர்ச்சி குறைந்த கன்று பிறப்பு
தாது உப்புக்கலவையை அளிக்க வேண்டிய அளவுகள்
 1. கன்றுகள் – 5 கிராம்
 2. கிடேரிகள் – 15-20 கிராம்
 3. கறவை மற்றும் சினைப்பசுக்கள், காளைகள் – 30-40 கிராம்
 4. கறவை வற்றிய பசுக்கள் – 25-30 கிராம்
மேற்சொன்ன தாது உப்புக்கள் இல்லாமல் உயிர்கள் இயக்கமே இல்லை என்று கூட சொல்லலாம்.

எனவே, தாது உப்புக்களை தேவைக்கேற்ற அளவில் தீவனத்தில் கலந்து கொடுப்பதன் மூலம் விவசாயிகள் வருடம் ஒரு கன்று எடுப்பதோடு மட்டுமல்லாமல் கால்நடைகளிலிருந்து அதிக உற்பத்தித் திறனை பெற்று உயர்வடையலாம் என்பது திண்ணம்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Leave A Response

You must be logged in to post a comment.