தென்னையில் அதிக மகசூல் பெற (More Yield in Coconut Trees)

தென்னை பணப்பயிர்களில் ௐன்று. செரியான உரநிர்வாகத்தை மேற்கொள்வதன் மூலம் விவசாயிகள் தென்னையில் அதிக மகசூலை பெற்றிட முடியும்.

உரங்களில் உள்ள சத்துக்கள்

இயற்கை உரங்கள்

விளைச்சலை உறுதி செய்ய இயற்கை உரங்களான தொழுஉரம், வேப்பம் புண்ணாக்கு மற்றும் இலுப்பை புண்ணாக்கு போன்றவற்றை கலந்து ஆண்டுக்கு ஓரிரு முறைகள் இட வேண்டும்.

ரசாயன உரங்கள்

தென்னையில் வளர்ச்சிக்கு அவசியமாக ஒரு சில சத்துக்கள் ரசாயன உரங்களிலும் உள்ளன. மணிச்சத்து அவற்றில் மிக முக்கியமானது. சூப்பர் பாஸ்பேட் உரத்தில் அடங்கியிருக்கும் மணிச்சத்தானது நிலத்திற்கு எந்த வித கெடுதலையும் செய்யாமல் தென்னைக்கு ஊட்டமளிக்கிறது.

சூப்பர் பாஸ்பேட்டில் உள்ள சத்துக்களை பற்றி பார்ப்போம்

தென்னையின் வளர்ச்சியில் இச்சத்துக்களின் ஆற்றல்

 மணிச்சத்து

 • குருத்தின் பருமனை அதிகரிக்கவும், குருத்திலிருந்து அதிக இலைகள் உற்பத்தியாவதற்கும் மணிச்சத்தானது மிகவும் உதவுகிறது.
 • தென்னை மரத்தில் வேர்கள் ஆழமாக நிலத்தில் சென்று பிடிப்பை ஏற்படுத்தவும், அதிகமான வேர்கள் உருவாகவும் மணிச்சத்து தேவைப்படுகின்றது. இதனால் மரத்தின் வளர்ச்சி தூண்டப்படுகிறது.
 • மேலும் பாளையில் ஏராளமான பூக்கள் உருவாகவும், அவ்வாறு பூத்த பூக்கள் அனைத்தும் தரம் மிக்க காய்களாக மாறுவதற்கும் உதவி செய்கிறது. தேங்காய் குறுகிய காலத்தில் முற்றவும், கொப்பரையின் பருமனை அதிகரிக்கவும் உதவுகிறது.

கந்தகச்சத்து

 • தேங்காய் பருப்பு கெட்டியாக உருவாக கந்தக சத்தானது உதவுகிறது. இதனால் கொப்பரையில் எண்ணெயின் அளவு கணிசமாக அதிகரிக்கின்றது.
 • சூப்பர் பாஸ்பேட் இடப்படாத தென்னையில் கந்தகச்சத்து குறைபாட்டினால் கொப்பரையில் எண்ணெய்ச்சத்து குறைந்து, சர்க்கரை சத்து மட்டுமே அதிகமாக இருக்கும்.

சுண்ணாம்பு சத்து

 •  மரத்தின் வலிமையை அதிகரிக்க சுண்ணாம்பு சத்து மிகவும் அவசியமானது.
 • மேலும் இந்த சத்தானது மரத்தின் கட்டமைப்பில் உள்ள செல்களின் சுவர்களின் அமைப்பில், வேர்களின் வளர்ச்சியில், சர்க்கரை மற்றும் தனிமங்களின் கடத்திலில் பெரும் பங்கு வகிக்கிறது.
 • தென்னையின் சீரான வளர்ச்சிக்கு தேவையான நொதிப்பொருட்களின் வினையாக்கத்தை தூண்டுகின்றது.
 • தென்னை பயிரிடப்படும் மணற்பாங்கான அமில வகை நிலங்களில் சுண்ணாம்பு சத்தானது  தழை, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்களை நல்ல முறையில் கிரகிக்க வழி செய்கிறது.

போரான், குளோரின் மற்றும் சோடியம்

 • போரான், குளோரின் மற்றும் சோடியம் போன்ற தனிமச்சத்துக்களும் சூப்பர் பாஸ்பேட்டில் அடங்கியுள்ளன. இது தென்னை வளர்ச்சிக்கு அதிக பங்களிக்கின்றன.
 • தேங்காய்கள் பருத்து பருப்பின் அளவு அதிகரிக்கவும், ஓலைகள் திடமாக இருக்கவும், இலைகள் நன்றாக வெளிவரவும் போரான் என்ற தனிமச்சத்து மிகவும் அவசியமானது.
 • தென்னை சீரான அளவில் மக்னீசிய, மணி, சாம்பல் மற்றும் தழை சத்துக்களை எடுத்துக் கொள்வதற்கும் குளோரின் சத்தானது உதவுகிறது.
 • வளர்ந்த தென்னையில் பெண்பூக்கள் அதிகமாக உற்பத்தியாவதற்கும், தென்னையின் தொடக்க கால வளர்ச்சியை தூண்டவும், அவை மகரந்த சேர்க்கைக்கு பின் தரமான குரும்பைகளாக உருவாவதற்கும் சோடியம் உதவுகின்றது.

தென்னைக்கு உரமிடும் முறை

 முதலாம் ஆண்டு

 • யூரியா 500 கிராம்
 • சூப்பர் பாஸ்பேட் 500கிராம்
 • பொட்டாஷ் 825 கிராம்
 • வேப்பம் புண்ணாக்கு 1250 கிராம்
 • தொழுஉரம் 10 கிலோ

இரண்டாவது ஆண்டு

 •  யூரியா 1300 கிராம்
 • சூப்பர் பாஸ்பேட்800 கிராம்
 • பொட்டாஷ் 1625 கிராம்
 • வேப்பம் புண்ணாக்கு இரண்டரை கிலோ
 • தொழுஉரம் 2 கிலோ

மூன்றாம் ஆண்டு

 • யூரியா 1600 கிராம்
 • சூப்பர் பாஸ்பேட் 1200 கிராம்
 • பொட்டாஷ் இரண்டரை கிலோ
 • வேப்பம் புண்ணாக்கு 3 கிலோ 750 கிராம்
 • தொழுஉரம் 3கிலோ

நான்காம் ஆண்டு

 • யூரியா 2கிலோ
 • சூப்பர் பாஸ்பேட் 1 கிலோ 600 கிராம்
 • பொட்டாஷ் 3கிலோ 300 கிராம்
 • வேப்பம் புண்ணாக்கு 5 கிலோ
 • தொழுஉரம் 4 கிலோ

நான்கு ஆண்டுகளுக்கு மேற்பட்ட தென்னைக்கு

 • யூரியா 2 கிலோ
 • சூப்பர் பாஸ்பேட் 1 கிலோ 600 கிராமும்
 • பொட்டாஷ் 3 கிலோ 300 கிராம்
 • வேப்பம் புண்ணாக்கு 5 கிலோ
 • தொழுஉரம் 5 கிலோ

குறிப்பு

இந்த உரங்களை ஜுலை, ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பாதியையும், அக்டோபர் மாதத்தில் மறுபாதியையும் இடவேண்டும்.

இந்த அடிப்படையில் தென்னைக்கு உரங்களை இட்டு வந்தால் மரத்தின் விளைச்சல் தொடர்ந்து அதிகரிக்கும். விவசாயிகள் நல்ல லாபத்தை பெறலாம்.

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Leave A Response

You must be logged in to post a comment.