இயற்கை கொசு விரட்டி (Mosquito Control)

இன்று நிறைய வீடுகளில் கொசுக்களை விரட்ட கெமிக்கல்கள் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு அத்தகைய கொசு விரட்டிகளை பயன்படுத்துவதால், சருமம் மற்றும் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, நுரையீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஒரு கொசுவத்தி சுருள் எரியும்போது, அது வெளியிடும் சாம்பலின் அளவு 75 முதல் 137 சிகரெட் எரிப்பதனால் வரும் சாம்பலுக்குச் சமம்.

பிறந்த குழந்தைகள் மேட் (அ) சுருள் புகையைச் சுவாசிக்கும் சூழலுக்கு ஆளானால், வலிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிலருக்கு மலட்டுத்தன்மை ஏற்படும். நுரையீரல் புற்றுநோய் உருவாவதற்கான வாய்ப்புகள்கூட இருக்கின்றன என்று லக்னோ மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.

அத்தகைய கேடுகள் விளைவிக்கும் கெமிக்கல் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துவதை விட, வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்து இயற்கை முறையில் கொசுக்களை விரட்டலாம். இதனால் கொசுக்கள் அழிவதோடு, உடலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட

ஒரு மண் சட்டியில், தீக்கனல் போட்டு, பச்சை வேப்பிலை  அதன் மேல் மஞ்சள் தூள் தூவி விட்டால், அதிலிருந்து வெளியேறும் புகை மூட்டம், கொசு மட்டுமின்றி, மழைக் காலத்தில் வரக்கூடிய மற்ற பூச்சிகளையும் கட்டுப்படுத்தும். இந்தப் புகை, குளிர் காலத்தில் நமக்கு வரக்கூடிய மூச்சுப் பாதை கோளாறை சரி செய்யும். சுற்றுசூழலுக்கு எந்த கேடும் ஏற்படுத்தாது.

மாலை நேரத்தில் தேங்காய் நார்களை எரித்து வீடு முழுக்க அதன் புகையைக் காண்பித்தால், ஒரு கொசுகூட இருக்காது. இயற்கை நார்களின் புகையால், உடலுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. தற்போது தேங்காய் நார்கள் கூட கடைகளில் விற்கப்படுகிறது.

கொசுக்கள் அழிவதற்கு முக்கியமான பொருள், சல்பர். இந்த சல்பர் எங்கு இருந்தாலும், கொசுக்கள் வெளியில் தான் இருக்கும். கற்பூரம் இந்த சல்பரினால் ஆனது. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அதில் பச்சை கற்பூரத்தைப் போட்டு வைத்தால், அதில் இருந்து வரும் வாசனைக்கு கொசுக்கள் வீட்டை எட்டிக் கூட பார்க்காது.

கெரோசின் மற்றும் கற்பூரம் இந்த இரண்டுமே மிகவும் சிறந்த கொசுக்களை அழிக்க வல்ல பொருட்கள் ஆகும். அதற்கு கொசுக்களை அழிக்க கடைகளில் விற்கும் மிசின்களில் உள்ள காலி டப்பாவில், கெரோசினை விட்டு, அதில் சிறிது கற்பூரத்தை விட்டு, மின்சார பிளக்கில் மாட்டி விட வேண்டும். இதனால் கொசுக்கள் வீட்டில் வராமல் இருப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கு எந்த கெடுதலும் ஏற்படாமல் இருக்கும்.

வீட்டின் ஒரு பக்கத்தில் நெருப்பு வைத்து அதில் மாம்பூக்களைப் போட்டால், அதில் இருந்து வரும் புகை கொசுக்களை விரட்டிவிடும்.

வேப்பிலை, நொச்சி இலை ஆகியவற்றை உலர்த்தி, நெருப்பில் போட்டுப் புகைக்கவைத்தால், கொசுத் தொல்லை இருக்காது.

நாய்த்துளசிப் பூவை உலர்த்தித் தூள் செய்து சாம்பிராணியுடன் சேர்த்துப் புகைக்கவைத்தால், கொசுத் தொல்லை தீரும்.

பூண்டு வாசனை கொசுவுக்கு ஆகாது. நிறையப் பூண்டு சாப்பிட்டால், அதன் மணத்திலேயே கொசு ஓடிவிடும்.

விளக்கு எரிக்க வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பெண்ணெய், நல்லெண்ணெய், நெய் போன்றவற்றை பயன்படுத்தினால் கொசு பக்கத்தில் வரவே பயப்படும்.

கொசுக்களை ஒழிப்பது எப்படி

வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கிக் கிடக்கும் இடங்களில் சிறிதளவு மண்ணெண்ணையை தெளித்து வைத்தால் அந்த இடத்தில் கொசு முட்டைகள் அழிந்து போய் விடுகிறதாம் மற்றும் கொசுக்கள் முட்டையிடுவது அடியோடு நின்று போகும்.

வீட்டைச் சுற்றி துளசி, திருநீற்று பச்சிலை செடியை  நட்டு வைக்க, கொசுக்கள் வருவது குறையும்.

வீட்டைச் சுற்றி தவிர்க்க முடியாமல்  நீர் தேங்கினால், அதில் ஒரு தேற்றான் கொட்டையை, ஒரு லிட்டர் தண்ணீருக்கு, ஒரு விதை வீதம் அரைத்து கலந்து விடலாம். மஞ்சள் கிழங்கையும் அரைத்து அதில் கலக்கி விட்டால், இயற்கையான கிருமி நாசினி இது தான்.

Print Friendly, PDF & Email
About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

5 Comments so far. Feel free to join this conversation.

 1. Velmurugan March 10, 2017 at 4:57 pm -

  மிக்க நன்றி

 2. Velmurugan March 10, 2017 at 4:52 pm -

  இதில் இருக்கக்கூடிய அனைத்து தகவலும் மிக சிறப்பு மிக்க நன்றி

 3. Ramanan September 24, 2016 at 1:01 pm -

  Excellent news and information about your site’s . Thanks for your understanding and sharing

  Keep your site to continue to grow . With heart filled blessing

 4. santhosh December 10, 2015 at 8:23 am -

  பல முக்கிய தகவல்களை தந்ததற்கு நன்றி

  • Arulkumar February 12, 2016 at 10:33 pm -

   நன்றி.

Leave A Response

You must be logged in to post a comment.