இயற்கையின் வரப்பிரசாதம் மூடாக்கு (Mulch)

இயற்கை விவசாயம் என்பது எந்தவித இரசாயனமும் பயன்படுத்தப்படாமல் இயற்கையோடு இயைந்து விவசாயத்தை மேற்கொள்வதாகும். அந்த வகையில், இயற்கை விவசாயத்தின் முதற்படி மண்வளத்தை மேம்படுத்துதலில் துவங்குகிறது என்று சொல்லலாம். இதில் முக்கிய பங்கு வகிப்பது மூடாக்கு.

பூமித் தாய்க்கு நாம் போடும் இந்த இலைகளால் ஆன மூடாக்கு, மண் வளத்தைப் பெருகச் செய்கிறது. தற்போது பின்பனிக் காலம் முடிவடைந்து, கோடைகாலம் துவங்க உள்ளது. மரஞ்செடிகளின் இலைகள் பழுத்து நிலமெங்கும் உதிர்ந்திருக்கும். காடுகளில் இப்போது நாம் நடந்தால் நாம் இலைக் குவியல்களில் தான் தடம்பதித்து நடந்து செல்லமுடியும். இந்த இலைகளை நாம் மூடாக்காக பயன்படுத்தமுடியும்.

பூமியில் விழுந்துள்ள விதைகளை கோடை காலத்தின் தாக்கத்திலிருந்து காப்பதற்கும், விலங்குகள் மற்றும் பறவைகளிலிருந்து காப்பதற்கும், இயற்கை தானே அமைத்துக்கொண்ட ஏற்பாடுதான் இது. இதனால் மண்வளமும் அதிகரிக்கிறது.

மூடாக்கு வகைகள்

  • இலை மூடாக்கு
  • சருகு மூடாக்கு
  • உயிர் மூடாக்கு
  • கல் மூடாக்கு

ஒரே மூடாக்கு கிடைக்கும் ஓராயிரம் நன்மைகள்

  • ஈரப்பதத்தைத்தக்க வைக்க
  • மண்ணின் நலம் மற்றும் வளத்தைப் பாதுகாக்க
  • களைகளைக்கட்டுப்படுத்த
  • அந்தப் பகுதியின் அழகினை அதிகப்படுத்த

மூடாக்கு என்பது வழக்கமாக ஆனால் விதிவிலக்காக அல்லாமல் இயற்கையிலேயே கிடைப்பதாகும்.

மூடாக்கினால் மண்வளம் அதிகரிப்பது எப்படி

இலைகளால் போடப்படும் தாள்மூடாக்கினால் மண்ணில் உண்டாகும் பருவசூழல், நுண்ணுயிர்களையும் மண்புழுக்களையும் முனைப்புடன் செயல்பட ஊக்குவிக்கிறது. பழைய தாவர வேர்கள் சிதைந்து மட்கச் செய்கிறது. மண்ணின் ஈரம் பாதுகாக்கப்படுகிறது. இது மரத்திற்கு நல்ல உரமாக இருப்பதோடு மரத்தின் வேர்ப்பகுதியில் 4 டிகிரி அளவிற்கு வெப்பத்தை குறைக்கிறது. வெப்பத்தையும் காற்றையும் மரத்தின் தரைப்பகுதியில் தடுப்பதால், மரத்திற்கு பாய்ச்சப்படும் நீர் ஆவியாகாமல் காக்கிறது.

களையை நன்மையா மாற்றுவோமா

களைத் தொல்லையால் பயிரோட வளர்ச்சி பாதிக்கிறது மட்டுமில்லாமல் களையெடுக்கும் செலவும் கூடும். களை என்பது பெரிய தொந்தரவு, ஆனால் அது பயிரையும் பாதிக்காமல் கையையும் கடிக்காமல் எளிமையான முறையில் தடுக்கலாம். அதாவது இயற்கை மூடாக்கு முறையை பயன்படுத்துனால் களையானது மிக வெகுவாக தடுக்கப்படும். உங்க தோட்டத்திலேயும் அருகாமையில் கிடைக்க்கூடிய மக்கும் தாவர மிச்சங்களை பயன்படுத்தியே இந்த மூடாக்கை உருவாக்கலாம்.
தென்னை ஓலை, கரும்புச் சோகை, முறிந்து விழுந்த மரக்கிளைகள் (இலையுடன் கூடியவை) இவற்றை கொண்டே மூடாக்கை உருவாக்கலாம்.

மூடாக்கு பயன்படுத்துறது மூலமா பல நன்மைகள் கிடைக்கும். களை வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டு வீண் செலவு தவிர்க்கப்படுகிறது. அப்புறம் இந்த மூடாக்கானது தோட்டத்து மண் விரைந்து காய்வதை தடுத்து ஈரப்பதம் வெளியேறிடாமல் காக்குது. இதன் மூலாமா தண்ணீர் செலவு குறையும். அதுமட்டுமில்லாமல் நுண்ணயிர்ப் பெருக்கத்தை ஊக்குவிப்பதோடு சிறு உயரச் செடியிலுள்ள மலர்கள் காய்கள் ஆகியவற்றை பறவைகளின் கண்ணிலிருந்து தப்பிக்கவும் வைக்கும்.

 

Print Friendly, PDF & Email
About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.