புற்று நோயிலிருந்து குணமடைத்தவரின் உண்மை சம்பவம் (Natural Cure to Cancer)

இந்தியா முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த நோயின் காரணமாக நிகழும் இறப்புகளும் ஏராளம். நோய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததும், அறியாமையுமே பெரும்பாலான இறப்புகளுக்குக் காரணம். பொதுவாகப் புற்றுநோய் வந்துவிட்டால் உயிர்பிழைப்பது கடினம் என்றுதான் படித்தவர்களும் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. பெரும்பாலும் பரம்பரையாக வருகிற புற்றுநோயைத் தடுக்க முடியாது என்றாலும் ஆரம்பக் கட்டத்தில் கண்டறிந்தால், சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். ஆரோக்கியமான பழக்கவழக்கங்களும் புற்றுநோயில் இருந்து நம்மைக் காக்கும்.

குடும்பத்தில் ஒருவருக்குப் புற்றுநோய் இருந்தால் அடுத்து வரும் தலைமுறையில் புற்றுநோயின் தாக்கம் கட்டாயம் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். அதேநேரம் புற்றுநோய் ஏற்பட மரபு மட்டுமே காரணம் இல்லை. சுற்றுச்சூழலின் பங்கு 60% இருக்கிறது என்கிறார் சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தைச் சேர்ந்த வலி மற்றும் நோய் தணிப்பு ஆலோசகர் அசார் உசேன்.

புற்று நோயிலிருந்து குணமடைத்தவரின் உண்மை சம்பவம்

புற்று நோய்க்கு இயற்கைத் தீர்வு1

கோவையில் எனக்கு 8 ஆண்டுகளுக்கு முன் அறுவை சிகிச்சை நடைபெற்றது.

சிகிச்சை முடிந்து அடுத்து எப்போது செக் அப்புக்கு வருவது என்று கேட்டேன். அதற்கு அவர் 6 மாதம் கழித்து வரச் சொன்னார்.

எந்த மருந்தோ பத்திய முறையோ சொல்லாமல் அனுப்பிவிட்டார்.

நான் நலமாகவே இருந்தேன். ஆறு மாதங்கள் கழித்து நானும் என் மனைவியும் கோவை சென்று அவர் அறையில் அமர்ந்திருந்தோம் சிறிது நேரத்தில் அங்கு வந்த டாக்டர் (are still alive) இன்றும் நீ உயிரோடு இருக்கிறாயா என்றார். என் மனைவி அதை புரிவதற்க்கு முன் வேறு மாதிரி பேசினேன். அதை புரிந்து கொண்ட அந்த டாக்டர் இரத்த பரிசோதனைக்கு சீட்டு கொடுத்து என்னை அனுப்பி வைத்தார்.

இரத்த பரிசோதனை செய்த பெண்ணிடம் ரிசல்ட் எப்படி உள்ளது என்று கேட்டேன், அதற்கு டிஸ்சார்ஜ் ரீசல்டை விட புற்றுநோய் அதிகரித்து உள்ளது எனவும் மற்றதை டாக்டர் சொல்வார் என்று ரீசல்டை கையில் கொடுத்தார்.

டாக்டர் ரீசல்டை பார்த்து விட்டு ஆறு மாதம் கழித்து வாருங்கள் என்று கூறிஅனுப்பினார்.

ஆறு மாதம் கழித்து மீண்டும் சென்று இரத்த பரிசோதனை செய்தோம். புற்றுநோய் அறிகுறி இரு மடங்காகி விட்டதாக கூறினார். மீண்டும் 4 மாதம் கழித்து வரும்படி கூறி அனுப்பினார்.

எந்த உபாதையும் இல்லை ஆனால் மனதில் பயத்தோடு இருந்து வந்தேன்.

புற்று நோய்க்கு திராட்சை விதை பொடி

திராட்சை விதை பொடி

அந்த சமயம் பேஸ்புக்கில் திராட்சை விதை பொடி புற்று நோய்க்கு சிறந்த மருந்து என்று வந்திருந்தது. அன்றிலிருந்து தினமும் ஒரு கை விதையுள்ள திராட்சை பழத்தை விதை முழுவதும் நல்ல பொடியாகும் வரை.மிக்ஸியில் அரைத்து ருசியான அந்த கலவையை சாப்பிட்டு வந்தேன்.

நான்கு மாதங்களுக்கு பிறகு உடல் நலமற்ற என் பேத்தியை பார்ப்பதற்காக கோவைக்கு வேறு ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்றேன். அங்கு மருத்துவ சம்பந்த படிப்பு படித்த வெளிநாட்டில் வேலைப்பார்க்கும் என் மகனும் வந்திருந்தான்.  பேச்சினிடையே அடடா உங்கள் மருத்துவ பையிலை எடுத்து வந்திருந்தால் கோவையில் அந்த அந்த ஆஸ்பத்திரிக்கு சென்று இரத்த பரிசோதனை செய்திருக்கலாம் என்றார். என் மனைவியிடம் அதற்கு என் மகன் பைலும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்னோடு வாருங்கள் என்று இரத்த பரிசோதனை நிலையத்திற்கு அழைத்து சென்றான்.பணம் கட்டி இரத்தம் கொடுக்க வைத்தான். மூன்று மணி நேரம் கழித்து பில்லை கட்டி ரிசல்டை வாங்கி என் பையன் பார்த்தான். என்ன ஆச்சரியம் புற்றுநோய் அறிகுறி (NIL) சிறிதும் இல்லை என்று அதில் இருந்தது.

இது என் சொந்த அனுபவம் திராட்சை விதை மையாக அரைப்பட்டு விட வேண்டும்.

அனைவரும் பகிருங்கள்…….. K.C .Bala Krishnan Ex president. KODUMUDI

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Leave A Response

You must be logged in to post a comment.