செடி, கொடி, குற்றுச்செடி, மரங்கள் ஆகியவற்றால் எழுப்பப்பட்ட வேலியே உயிர் வேலி ஆகும். உயிர்தாவரங்களால் அமைக்கப்படுவதாலும், பல உயிரிகள் இதில் வாழ்வதாலும் இவ்வேலி உயிர்வேலி என அழைக்கப்படுகிறது. பழந்தமிழரின் வேளாண்மையில் உயிர் வேலிகளே பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டன. இவ்வகை வேலிகள் உயிரிப்பல்வகைமைப் பெருக்கத்திற்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் அடிப்படையாக அமைகிறது.
நுண்ணுயிரிகளும், மலர் தாவரங்கள், காய்கனி செடிகள், கீரை வகைகள், போன்ற தாவரங்களும், பறவைகள், ஊர்வன, பாலூட்டிகள் உள்ளிட்ட விலங்குகளும் வாழ்வதற்கு ஏற்ற இடமாக உயிர் வேலி அமைகிறது. இதன் மூலம் உணவு சங்கிலி, உணவு வலை போன்றச் சுற்றுசூழல் மேம்பாட்டுக் காரணிகளை பேணுவதுடன் உறுதியான இயற்கைப் பாதுகாப்பையும் வழங்குவது இதன் சிறப்பாகும்.
இப்பொழுது ஐந்தடுக்கு முறையில் உயிர்வேலி அமைப்பதை பற்றி பார்க்கலாம்.
மரம் நட வேண்டியது நம் கடமை வந்தால் மரம் இல்லையேல் அதுவே மண்ணுக்கு உரம் எனும் கருத்தை மனதில் கொள்ளலாம்.
முதல்வரிசை
முள் நிறைந்த வேலி மற்றும் உணவுபொருள் மற்றும் ஆட்டுத்தீவனம்
இலந்தை, களாக்காய், (கிளக்காய்), கோணக்கா (கொடுகழிக்கா அல்லது கொடுக்காய் அல்லது கொடுக்கா புள்ளி), காரை முள், சூரை முள், வில்வம், சப்பாத்திக்கள்ளி, முள் கிளுவை, சூடான் முள், முள் கள்ளி, பரம்பை முள், கருவேல், குடைவேல், காக்கா முள், சங்க முள், யானைக்கற்றாழை.,,,(இன்னும் சில)
இரண்டாம் வரிசை
பறவைக்கான உணவு மற்றும் அதன் வீடு மற்றும் மனிதர்களுக்கான உணவுக்காடு
ஆலமரம், அரச மரம், அத்தி மரம், நாவல், இலுப்பை, கோடை ஆப்பிள், சிங்கப்பூர் செர்ரீ (சர்க்கரை பழம்), வேம்பு, கொய்யா, மாதுளை, மா, பலா, சீத்தா, பேரீச்சை, ஈச்ச மரம், நெல்லி, புளிய மரம், சப்போட்டா, முந்திரி, ஆரஞ்சு, சாத்துக்குடி, நார்த்தங்காய், பேரிக்காய், எலுமிச்சை, விளாம் பழம், பாதாம், தென்னை, பனைமரம், பாக்கு மரம்.,,,(இன்னும் சில)
மூன்றாம் வரிசை
வருங்கால வைப்பு நிதி மற்றும் விறகு மற்றும் பசுந்தாள்உரம் மற்றும் வனக்காடு
சவுக்கு, மூங்கில், சில்வர் தேக்கு, மலைவேம்பு, குமிழ், வேங்கை, புங்கை மரம், புன்னை மரம், வேங்கை, கடம்பு, தீக்குச்சி மரம், வாகை, சந்தனம், தேக்கு, ரோஸ்வுட், செஞ்சந்தனம், கொன்றை, மருதம், கருங்காலி, உசிலை, தடசு, மந்தாரை, நீர் மருது, மஞ்சணத்தி, பூவரசு, மகிழ மரம், வன்னி மரம்,.,,,(இன்னும் சில)
நான்காம் வரிசை
கால்நடை தீவனம்
அகத்தி, சூபா புல், சவுண்டல், கிளைரிசீடியா, மரக்கிளுவை, மல்பெரி, செடி முருங்கை, கல்யாண முருங்கை.,,,(இன்னும் சில)
ஐந்தாம் வரிசை
மூலிகை மற்றும் பூச்சிவிரட்டி மற்றும் உணவுபொருட்கள்
அன்னாசி பழம், பிரண்டை, தூதுவளை, முடக்கற்றான், பண்ணைகீரை, கருவேப்பிலை, கோவக்காய், திராட்சை (முடிந்தால்), வெற்றிலை, செம்பருத்தி, வெட்டி வேர், லெமன் கிராஸ், கற்பூர வள்ளி (ஓம வள்ளி), பூனை மீசை, மருதாணி, சோற்றுக்கற்றாழை, நிலவேம்பு, சிறியா நங்கை, பெரியாநங்கை, முசுமுசுக்கை, திருநீற்றுப்பச்சிலை, துளசி, துத்தி, தும்பை, குப்பைமேனி, கீழாநெல்லி, அம்மான் பச்சரிசி, ஆடாதோடை, ஆடு தின்னாப்பாளை, நொச்சி, ஆவாரை, ஊமத்தை, காட்டாமணக்கு, ஆமணக்கு, எருக்கு, நீர்முள்ளி, சிறுகண்பீளை, சிறுநெறிஞ்சிமுள், வேலிப்பருத்தி.,,,(இன்னும் சில).