தென்னைக்கு இயற்கை உரம் (Natural Fertilizer For Coconut Trees)

இயற்கை உரம் பயன் படுத்துவதால், மகசூல் 15 சதவீதம் அதிகரித்து வருகிறது.

தென்னையில் நல்ல மகசூல் கிடைப்பதற்காக, விவசாயிகள் பெரும் பாலானோர், காம்ப்ளக்ஸ் யூரியா, பொட்டாஷ், போன்ற ரசாயன உரங்களையும், சிறிது இயற்கை உரங்களையுமே சேர்த்து உரமாக இட்டனர்.

காளான் விதை, காயர் வேஸ்ட்,  கோழிஎரு, கற்றாழை, மாட்டுச் சாணம், எருக்கு இலை, சப்பாத்திக்கள்ளி, சணப்பை, கடலை புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு, மஞ்சள் தூள், பூண்டு,  கோமியம், பசுந்தழையை பயன்படுத்தி சில விவசாயிகள், இயற்கை உரங்கள் தயாரித்து தென்னைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

ஆட்கள் பற்றாக்குறை, மழைப் பொழிவு குறைவு, தேங்காய்க்கு கட்டுப்படியான விலையின்மை போன்ற காரணங்களால் அவதிப் படும் விவசாயிகள், இயற்கை உரம் மூலம் மகசூல் அதிகரிப்பு, அவர்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது.

மேலும்தென்னையைச் செழிக்க வைக்கும் மூடாக்கு மந்திரம்(Mulching for Coconut Trees)

பிற விவசாயங்களை விட, தென்னை சாகுபடிக்கு அதிக அளவு ஆட்கள் தேவைப் படுவதில்லை. தென்னை சாகுபடி செய்தால் நீண்ட காலம் தொடர்ந்து வருவாய் கிடைக்கும். பெரும் பாலான விவசாயிகள், தங்களது தென்னைக்கு ரசாயன உரங்களையே இட்டு வந்தனர்.

ரசாயன உரங்களை விட, இயற்கை உரங்களை பயன் படுத்தினால் அதிக மகசூல் கிடைக்கும் என்பது சமீபத்தில் தான் விவசாயிகளுக்கு பரவலாக தெரியவந்துள்ளது. தற்போது, வட்டாரத்தில் பல விவசாயிகள் இயற்கை உரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

தென்னைக்கு இயற்கை உரம் செய்முறை

  • சில இயற்கை பொருட்களான வேப்பம் புண்ணாக்கு, மாட்டுச் சாணம், காளான் விதை,  கோமியம், கோழிஎரு, சணப்பை, கற்றாழை, எருக்கு இலை, சப்பாத்திக்கள்ளி, காயர் வேஸ்ட், மஞ்சள் தூள், பூண்டு, கடலை புண்ணாக்கு,  உட்பட 13  பொருட்களை எடுத்து, பெரிய குழியில் போட்டு மாதம் ஒரு முறை அவைகளை நன்றாக கலக்கி, இரண்டு மாதத்துக்கு ஒரு முறை குழிக்கு தண்ணீர் பாய்ச்சவும்
  • இவை மக்கிய இயற்கை உரமாக மாற ஆறு மாதத்தில் மாதங்கள் ஆகும்.
  • ஓராண்டுக்கு 40 கிலோ முதல் 50 கிலோ வரையிலான இயற்கை உரம் ஒரு தென்னை மரத்துக்கு போதும்.
  • இயற்கை உரம் ஒரு கிலோ தயாரிக்க குறைந்த செலவே ஆகிறது.
  • ரசாயன உரங்களால் விளைவிக்கப்படும் தேங்காய்களில் 100 தேங் காய்க்கு 13 கிலோ கொப்பரை மட்டுமே கிடைக்கும். ஆனால், இயற்கை உரங்களால் விளை விக்கப்படும் தென்னையில் 100 தேங்காய்களுக்கு 17 கிலோ கொப்பரை கிடைக்கும்.

மேலும் : தென்னையில் அதிக மகசூல் பெற (More Yield in Coconut Trees)

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Leave A Response