இயற்கை பூச்சி விரட்டி (Natural pesticide control)

பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, பயன்படுத்தப்படும் தாவரச்சாறே தாவர பூச்சிவிரட்டி என்று அழைக்கப்படுகிறது. இவற்றை இயற்கை விவசாயத்தில் இரசாயனப் பூச்சி கொல்லிகளுக்கு மாற்றாகப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுபுறச் சுழலினை மாசுபடாமல் பாதுகாக்கலாம். மேலும் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றிலும் இரசாயன கலப்பின்றி இருக்கும் இது உடல் நலத்திற்கும் ஏற்றது.

இயற்கையில் இரண்டு வகையான பூச்சிகள் உள்ளன. இவற்றில் ஒருவகை தாவரத்தை உண்டு விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தும். இரண்டாவது வகை தாவரங்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை உண்டு தாவரங்களின் வளர்ச்சியைப் பாதுகாப்பவை விவசாயிகளுக்கு நன்மை தரவல்லவை. தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த, பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவதால் இந்த இரண்டு வகை பூச்சிகளும் கொல்லப்படுகின்றன அல்லது விரட்டப்படுகின்றன. எனவே தீங்கு விளைவிக்கும் பூச்சிகளுக்கு வெறுப்புணர்ச்சியை ஊட்டக்கூடிய தாவரங்களை பூச்சி விரட்டியாக பயன்படுத்துவதே இம்முறையின் நோக்கமாகும்.

பூச்சி விரட்டி கரைசல் தயாரிக்க இலைகளை தேர்வு செய்யும் முறை

 1. கசப்பு சுவையுடன்  இருக்க வேண்டும் (வேம்பு, சோற்று கற்றாழை, குமிட்டிகாய், பிரண்டை)
 2. இலைகளை ஒடித்தால் பால் வரும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் (எருக்கு, காட்டமணக்கு, ஊமத்தை)
 3. ஆடு, மாடு உண்ணாத இலை தழைகள் (ஆடாதோடை, நொச்சி, ஆடுதிண்ணா பாலை, சப்பாத்திக்கள்ளி, அரளி, உண்ணிச் செடி)
 4. துர்நாற்றம் வீசும் இலை தழைகள் (பீச்சங்கு, சீதா, பீ நாரி, ஊமத்தை)

தேவையான பொருட்கள் (ஒரு ஏக்கருக்கு தேவையான அளவுகள்)

 1. காட்டாமணக்கு
 2. ஊமத்தை
 3. குமிட்டிகாய்
 4. பீச்சங்கு
 5. சோற்றுக்கற்றாழை
 6. எருக்கு
 7. அரளி
 8. நொச்சி
 9. சப்பாத்திக் கள்ளி
 10. ஆடா தோடா
 11. காட்டாமணக்கு
 12. வேம்பு
 13. மாட்டு கோமியம்
 14. மாட்டு சாணம்
 15. மஞ்சள் தூள்

மேலே குறிப்பிட்டடுள்ளவைகளில் குறைந்தது 5 வகை தாவரத்தின் இலை தழைகளை தழா 1/2 கிலோ எடுத்து, சிறு சிறு துண்டுகாளக நறுக்கி, உரலில் இட்டு இடித்து மசித்து கொள்ளவும். மசித்த இலை தழைகளை 15 லிட்டர் நாட்டு மாட்டு கோமியத்தில் ஊற வைத்து, பின்னர் மஞ்சள் தூள் 250 கிராம்,  சாணம் 1 கிலோ,  புகையிலை கரைசல் 1 லிட்டர் கலந்து 15  நாட்கள் நொதிக்க விட வேண்டும். அதற்கு பின் கரைசலை வடிகட்டி தெளிவான கரைசலை பயிர்களுக்கு தெளிக்கப்பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை

10 லிட்டர் நீருக்க 500 மி.லிட்டர் பூச்சி விரட்டியை கலந்து (5 விழுக்காடு) தெளிக்க பயன்படுத்தலாம். 

சிறப்பான தன்மைகள்

 • இதை எளிதில் தயாரிக்கலாம்
 • இதற்கு குறைவான முதலீடே போதும்
 • தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களில் எவ்விதமான விஷ வீழ்படிவையும் ஏற்படுத்தாது
 • இயற்கையை பாதிக்காதவை மாறாக இயற்கை ஊக்கியாக செயல்படும்

பூச்சிவிரட்டி கரைசல் 75% பூச்சிவிரட்டியாகவும் 25% பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் மற்றும் நோய் தடுப்பானாகவும் செயல்படுகின்றது.


 

Print Friendly, PDF & Email
About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

3 Comments so far. Feel free to join this conversation.

 1. Mariyappan February 4, 2016 at 10:18 pm -

  இயற்கை்விவசாயத்தின் மீதுள்ள பற்றையும் உமது சேவை மனப்பான்மையையும் பாராட்டுகிறேன்.

  • Arulkumar February 6, 2016 at 3:33 pm -

   தங்களுக்கு நன்றி.

  • Arulkumar February 12, 2016 at 10:33 pm -

   நன்றி.

Leave A Response

You must be logged in to post a comment.