இயற்கை களைக்கொல்லி செய்முறை-1 (Natural Herbicide)

இரசாயன களைக்கொல்லிகளை (herbicide) பயன்படுத்துவதால் மண் மலடாவதுடன், மனித உடலும் மலடாகிவிடுகிறது.. இதற்கு ஓரே தீர்வுதான் இயற்கை களைக்கொல்லி.

சரி இது எப்படி சாத்தியம் என்று தானே நினைக்கிறீர்கள்!

அப்படியே இருந்தாலும் இதற்க்கு  எவ்வளவு செலவாகும்?

இராசயன மருந்து போல சுலபமாக தெளிப்பானில் தெளிக்கலாமா?

இது எப்படி சாத்தியம் என்று பார்ப்போம்.

தயாரிக்க தேவையான பொருட்கள்

 • நீர் கலக்காத மாட்டு கோமியம் 10 லிட்டர் ஒருமாத காலம் ஆகியிருந்தால் இன்னும் சிறப்பு
 • முளைத்த களைச்செடியாக இருந்தால் 1 கிலோ கல் உப்பு
 • களைச்செடிகள் வளர்ந்திருந்தால் 2 கிலோ கல் உப்பை
 • வேப்ப எண்ணை 100 மில்லி

செய்முறை விளக்கம்

 • இக்கரைசலை தெளிக்கும் முன் குறிப்பிட்ட நிலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கவும் கூடாது.
 • கல் உப்பை 10 லிட்டர் கோமியத்தில் போட்டு நன்றாக கலக்கவும், பிறகு ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து விடவும்,  அதனுடன் வேப்ப எண்ணை 100 மில்லியை ஊற்றி கலக்கவும், பிறகு வடிப்பான் வைத்து வடிகட்டி கைத்தெளிப்பானில் களைச்செடிகள் மீது தெளிக்கவும் (பயிருக்கு படாமல்).
 • தெளித்த இரண்டு நாட்களில் அனைத்து களைச்செடிகளும் கருகிவிடும் பார்த்தீனிய உட்பட, கோரை, அறுகம்புல் தவிர.
 • இக்கரைசலை தெளித்தப்பின் குறைந்தது 2 நாட்களுக்கு மழைவிழக் கூடாது.
 • இந்த களைக்கொல்லி பயிருக்கு எந்த தீங்கும் தருவதில்லை, காரணம் கோமியம் பயிர் வளர்ச்சிக்கு உகந்ததது.
 • வேப்ப எண்ணை தொடர்ந்து பயன்படுத்தினால் கோரை கிழங்கு கூட அழிந்து விடும்.
 • கல் உப்பு ஒரு கிலோ என்பதால் மண்ணை பாதிப்பது இல்லை.

சரி இந்த கரைசலை தயார் செய்ய குறைந்த செலவே ஆகிறது..

அந்த காலத்தில் வேப்பமரத்தில் செய்த கலப்பையை கொண்டு  உழுதததால் கோரை விவசாய பூமியில் இல்லாமல் போனது. பச்சை புரட்சி என்ற பெயரில் மரக்கலப்பை இரும்பு கலப்பை ஆன பின்பே கோரைக்கிழுங்கு நம் பூமிக்குள் நுழைந்து விவசாயிகளுக்கு பெரும் தலைவலியை தந்தது.

ஒரு டேங்க் இயற்கை களைக்கொல்லி தயாரிக்க ஆகும் செலவு

கல் உப்பு ஒரு கிலோ = 3 ரூபாய்
எலுமிச்சை பழம்  = 3 ரூபாய்
வேப்ப எண்ணை 100 மில்லி =  12 ரூபாய்
ஆக மொத்தம் 18 ரூபாய்

சுமார் ஒரு ஏக்கரில் இதனை பயன்படுத்த வேண்டுமானால் 250 லிட்டர் கரைசல் தேவைப்படும்.

கோமியம் இல்லாமல் பதினெட்டு ரூபாயில் களைகலை அழித்து விடலாம் மண் எந்த விதத்திலும் பாதிப்பு இல்லாமல்..

 

Print Friendly, PDF & Email
About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.