இயற்கை களைக்கொல்லி செய்முறை-2 (Natural Herbicide)

இக்கலவை களைகளைக் கொல்லும் எந்தப்பயிரிலும் இதைத்தெளித்தால் கருகிப்போகும். ஆனால் இது பயிர்களுடன் வளரும்.

செடிகள் மண்டிக் கிடக்கும் ஒரு நிலத்தை சுத்தம் செய்து அந்த நிலத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற நிலைவரும் போது இந்தக் கலவையைப் பயன்படுத்தலாம்.

சுமார் ஒரு ஏக்கரில் இதனை பயன்படுத்த வேண்டுமானால் 250 லிட்டர் கரைசல் தேவைப்படும்.

10 லிட்டர் கரைசல் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள்

 • சுண்ணாம்பு – 3 கிலோ,
 • கோமியம் – 3 லிட்டர்
 •  தண்ணீர் – 10 லிட்டர்,
 • வேப்ப எண்ணெய் – 2 லிட்டர்
 • கல் உப்பு – 4 கிலோ

செய்முறை

 • தண்ணீரில் சுண்ணாம்பைச் சேர்த்து கலக்கி 10 மணி நேரத்திற்கு வைத்திருக்க வேண்டும்.
 • இதிலிருந்து 7 லிட்டர் எடுத்து அத்துடன் உப்பைக் கரைத்தும், அத்துடன் கோமியத்தையும் சேர்த்து கலக்க வேண்டும்.
 • பின் இந்த கரைசலை வடிகட்டி எடுத்து அத்துடன் வேப்ப எண்ணெயைச் சேர்க்க வேண்டும்.
 • இதனை சுமார் 10 நிமிடங்களுக்கு வைத்திருக்கும் போது மேலே மிதந்து வரும். படிமத்தை நீக்கி விட வேண்டும்.
 • பின் இந்தக் கரைசலை ஸ்பிரேயர் மூலமாக களைச்செடிகளின் இலை மற்றும் தண்டுப் பகுதிகளில் விழுமாறு தெளிக்க வேண்டும்.
 • இக்கரைசலை தெளித்தப்பின் குறைந்தது 2 நாட்களுக்கு மழைவிழக் கூடாது.
 • இக்கரைசலை தெளிக்கும் முன் குறிப்பிட்ட நிலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கவும் கூடாது.

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

2 Comments so far. Feel free to join this conversation.

 1. selventhiran September 9, 2016 at 5:40 pm - Reply

  very nice,congrats sako

 2. mohanraj July 8, 2016 at 11:44 am - Reply

  can use bhendhi after 10 days Natural Herbicide

Leave A Response