பயிரைக் காக்கும் இயற்கை மருந்துகள் (Natural pesticide control)

இயற்கையாகக் கிடைக்கும் தாவர இலைச் சாறு, எண்ணெய், உப்புக் கரைசல், சாம்பல் போன்றவற்றைக் கொண்டே, பயிர்களைத் தாக்கும் பூச்சிக்கள், பூஞ்சாணங்கள் உள்ளிட்ட நோய்களைக் கட்டுப்படுத்த முடியும்.

விதை நேர்த்திப் பணிகளை முறையாகச் செய்யாமல் விட்டாலும், தட்ப வெப்பநிலை மாற்றங்கள் காரணமாகவும், காற்று மற்றும் நீர் மூலமாகவும் பயிர்களை பூச்சிகள் பெருமளவுக்குத் தாக்கி சேதப் படுத்துகின்றன. மிகவும் அபாயகரமான விஷத் தன்மை கொண்ட பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்தப் பட்டாலும், பூச்சிகள் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படுவது இல்லை.

ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகள் மனிதர்களுக்கும், விலங்கினங்களுக்கும் பெருத்த சேதத்தை விளைவிக்கின்றன. பல நேரங்களில் பயிர்களுக்கு நன்மை செய்யும் பூச்சிகளும் சேர்த்து அழிக்கப்பட்டு விடுகின்றன.

எனவே ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளின் மோசமான விளைவுகளால், விவசாயிகள் பரவலாகப் பயன்படுத்தி வந்த, என்டோசல்ஃபான், டெமக்ரான் போன்றவை தடை செய்யப்பட்டு வருகின்றன.

எனவே இயற்கை மருந்துகளைப் பயன்படுத்துமாறு அண்மைக் காலமாக வேளாண் விஞ்ஞானிகள் சிபாரிசு செய்கின்றனர்.

அசுவணி, கம்பளிப்புழு, கதிர் நாவாய்ப் பூச்சிக்கள்
ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ மிளகாய்த்தூள் கலந்து, கரைத்து வடிகட்டித் தெளிக்கலாம்.

அசுவணி, இலைப்பேன், வெள்ளை ஈக்கள்
200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ மஞ்சள், மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 8 கிலோ சாம்பல் கலந்து தெளிக்கலாம்

இலைச் சுருட்டுப் புழு, சாறு உறிஞ்சும் பூச்சி, புரோடினியா
200 லிட்டர் தண்ணீரில், 2 கிலோ வேப்பெண்ணையைக் கலந்து, ஒட்டுதிரவமாக சோப்பு கரைசல் 200 மில்லி கலந்து தெளிக்கலாம்.

பயறு வகை சாம்பல் நோய்
200 லிட்டர் தண்ணீரில், 6 கிலோ வேப்பெண்ணெயுடன் ஒரு லிட்டர் சோப்புத் கரைசல் கலந்து தெளிக்கலாம்.

நெல் குலை நோய்க்கு
வேலிக்காத்தான் இலைச்சாறு 20 கிலோவை, 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். 

நெல் இலைச் சுருட்டுப் புழு
200 லிட்டர் தண்ணீரில், 2 கிலோ உப்பு மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 8 கிலோ சாம்பல் கலந்து தெளிக்கலாம்.

அனைத்து காய் துளைப்பான் பூச்சிக்கள்
200 லிட்டர் தண்ணீரில், 2 கிலோ பூண்டு மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 400 மில்லி மண்ணெண்ணெய் கலந்து தெளிக்கலாம்.

வெள்ளை ஈ, இலைப்பேன், மிளகாய்ப்பேன்
200 லிட்டர் தண்ணீரில் 6 லிட்டர் பசுக்கோமியம் மற்றும், 200 லிட்டர் தண்ணீரில் 200 மில்லி புகையிலைச்சாறு கலந்து தெளிக்கலாம்.

பாக்டீரியா, பூஞ்சாணம், நோய்கள்
200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ துளசி இலைச்சாறு கலந்து தெளிக்கலாம். அல்லது 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ பப்பாளி இலைச்சாறு கலந்தும் தெளிக்கலாம்.

அனைத்து சாறு உறிஞ்சும் பூச்சிக்கள்
200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோஅரைத்த சீத்தாப்பழ விதை மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ சீத்தா இலைச்சாறுகலந்து தெளிக்கலாம்.

கம்பளிப் புழு பாக்டீரீயா
200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ சோற்றுக் கற்றாளைச் சாறு கலந்து தெளிக்கலாம்.  

கம்பளிப்புழு சுருள் பூச்சி, இலை சுருட்டுப் புழுக்கள்
200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ வேப்ப இலைச்சாறு கலந்து தெளிக்கலாம்.

மிளகாய்ப் பேன்,வெள்ளை ஈக்கள்
200 லிட்டர் தண்ணீரில் 600 கிராம்புகையிலைச் சாறு கலந்து தெளிக்கலாம்.  

நெல் இலை சுருட்டுப் புழுக்கள்
200 லிட்டர் தண்ணீரில் 20 கிலோ நெய்வேலி காட்டாமணிச் சாறு கலந்து தெளிக்கலாம்.

நெல் தூர்அழுகல், இலை அழுகல் நோய்
200 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ வேப்பெண்ணெய் கலந்து தெளிக்கலாம்.

பாக்டீரியா இலைக் கருகல் நோய்
200 லிட்டர் தண்ணீரில் 20 கிலோ குன்றிமணி இலைச்சாறு அல்லது வேப்ப இலைச்சாறு கலந்து தெளிக்கலாம்.

நிலக்கடலை தூர் அழுகல் நோய்
200 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ வேப்பெண்ணெயுடன் ஒரு லிட்டர் சோப்புத் திரவம் கலந்து தெளிக்காலம். 

தென்னை வாடல் நோய்
200 லிட்டர் தண்ணீரில் 5 கிலோ வேப்பம் பிண்ணாக்கு கலந்து, மரத்தைச் சுற்றி இட்டு மண்ணால் மூடிவிட வேண்டும்.

தகவல்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விதைத்த 25, 35 மற்றும் 50 ஆம் நாட்களில் ஏக்கருக்கு 10 கிலோ வேப்பங்கொட்டையை இடித்து, ஒரு நாள் நீரில் ஊறவைத்து பின்னர் வடிகட்டி அத்துடன் 100 கிராம் காதி சோப் கலந்து 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிப்பான் கொண்டு மாலை வேளைகளில் தெளித்துவர பூச்சிகள் பயிரை அண்டாது.
Print Friendly, PDF & Email
Please follow and like us:

2 Comments so far. Feel free to join this conversation.

 1. selvakumar January 11, 2017 at 7:05 pm - Reply

  sir papaya leaves how many kg required for 1 acre. 10 kg of leaves for 200 litres you said on website. 10 kg of leaves or 10kg of leaves juice

  • Arulkumar
   Arulkumar March 14, 2017 at 10:49 am - Reply

   Just 10kg of leaves.

Leave A Response