வேம்பு கரைசல் (Neem Pest Control)

வேம்பு கரைசல் தயாரித்தல்

ஒரு ஏக்கருக்கு 10 கிலோ வேப்பங்கொட்டை தேவைப்படும், அவற்றை இடித்து நன்கு தூளாக்கி 20 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு இரவு முழுதும் ஊறவைக்க வேண்டும். பின்பு அவற்றை வடிகட்டி 10 லிட்டர் பசுமாட்டுக் கோமியம், ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும் 200 மில்லி கரைசல் என்ற விகிதத்தில் கலந்து ஒட்டு பசை சேர்த்து தெளிக்கவும்.

கட்டுப்படும் நோய்கள்

  • பாக்டீரியா நோய்கள்
  • நெல் பாக்டிரியா கருகல் நோய்
  • இலையுறைக் கருகல் நோய்
  • நெல் துங்ரோ வைரஸ் நோய் (குட்டைப்புல் நோய்)
  • தக்காளி இலைக்கருகல் நோய்,சாம்பல் நோய்
  • மிளகாய் இலை சுருட்டை நோய்

வேப்பம் புண்ணாக்கு சாறு 

ஒரு ஏக்கருக்கு 2 கிலோ வேப்பம் புண்ணாக்கை, 10 லிட்டர் நீரில் கலந்து 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு இக்கலவையை வடிகட்டி, 100 மில்லி காதி சோப்புடன் 100 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம்.

கட்டுப்படும் நோய்கள் 

  • எலுமிச்சை சொறி நோய்
  • தக்காளி இலைப்புள்ளிநோய்
  • நெல் தோகை அழுகல் நோய்
  • மிளகாய் புழ அழுகல் நோய்

——————————————————————————————————————————————————————————–
அனைத்து இடங்களிலும் வேம்பு வளர்க்கலாம். வேம்பில் பல்வேறு இரசாயனப் பொருட்கள் உள்ளன. இவற்றை பாதுகாக்க நாம் வயல் ஓரங்கள், தரிசு நிலங்களில் மற்ற இடங்களலும் வேம்பு வளர்த்து பயன்படுத்தலாம். இப்பொழுது நடவு செய்தால் தண்ணீர் ஊற்றும் செலவு மிச்சம். எந்தவித பழுதும் வராமல் முளைத்துவிடும். ஆகவே நாம் இப்பவே வேப்பமரம் நடவு செய்வோம். வேப்ப மரத்திலிருந்து ஒரு வருடத்திற்கு 50 கிலோ வேப்பங் கொட்டை கிடைக்கிறது. அதில் 50 சதவீதம் வேப்ப எண்ணெய் கிடைக்கும். அனைத்து வகை பூச்சி, நோய்களையும் கட்டுப்படுத்தும், வேம்பில் கட்டுப்படுத்தப்படும் பூச்சிகளின் எண்ணிக்கை – 123. மனிதர்களுக்கும் நல்லது. எனவே வேப்பமரத்தை இப்பொழுதே நடவு செய்வோம்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Leave A Response

You must be logged in to post a comment.