வேம்பு (Neem)

வேப்ப மரம் தான் இந்தியாவின் முதல் மூலிகை என்றால் ஆச்சரியம் இல்லை. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய சிந்து சமவெளி நாகரீகம் பற்றி ஆராய்ந்த அறிஞர் தீட்சித் அந்தக் காலத்தில் மக்கள் அன்றாடம் பயன்படுத்திய மருந்துப் பொருள்களில் வேப்பிலைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகக் குறிப்பிடுகின்றார். வடஇந்தியாவில் இப்படி மருந்தாகப் பயன்படுத்தப்பட்ட வேப்பிலை தென் இந்தியாவிலும் மருந்தாக பயன்படுத்தப்பட்டதை தமிழின் முதல் இலக்கண நூலான தொல் காப்பியம் குறிப்பிடுகின்றது.

வேம்பு தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும், வாழ்வோடும், வழிபாட்டோடும் பின்னிப் பிணைந்து விட்ட ஒன்றாகும். சங்க இலக்கியங்களிலேயே “தெய்வம் சார்ந்த பராரை வேம்பு” என்று வேம்பு சிறப்பிக்கப்படுகிறது. 

இதற்கு பராசக்தி மூலிகை என்ற சிறப்புப் பெயர் உண்டு. மூலிகைகளில் பெரும் சக்தி படைத்ததாக சிறந்து விளங்குகிறது. வேம்பின் பூர்விகம் இந்தியாவும் பாக்கீஸ்தானும் தான். பின்னர் உலகம் முழுதும் பரவிற்று.

வேம்பு ஒரு இயற்கை கிருமி நாசினி. உடலின் நோய் தடுக்கும் சக்தியை அதிகப்படுத்துகிறது. பல மருத்துவ பயன்களை உடைய வேம்பு எளிதாக, பரவலாக எங்கும் கிடைக்கிறது. பல ஆயுர்வேத மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. அழற்ஐியை குறைத்து, கிருமிகளை கொல்வதால், முகப்பரு, எக்சிமா, ஸோரியாசிஸ், தோல்அரிப்பு, சருமப்புண்கள் முதலிய சரும நோய்களுக்கு மருந்தாகிறது. பூஞ்சண நோய்களுக்கு வேம்பு நல்ல மருந்து.

வேம்புக்கான காப்புரிமை இந்தியா வாதாடிப் பெற்றது. ஆலமரத்தைப் போலவும், அரசமரத்தைப் போலவும் அனேக ஆண்டுகள் வளரக்கூடிய மரம் இந்த வேப்ப மரமாகும். 

உலகில் மிக அதிகமாக ஆராய்ச்சி செய்யப்பட்ட மரங்களில் வேம்பு முதன்மையானது.

வேம்பின் தன்மை மற்றும் வளர்ச்சி

வேம்பின் இலை, காய், கனி, பூ, பட்டை, பிசின்  என அனைத்தும் மக்களுக்கு பயன்படுவதால். இதை மக்கள் சர்வலோக நிவாரணி, இயற்கை கொடை, அதிசய மரம் மற்றும் கிராம மருந்தகம் என அழைக்கின்றனர்.

வேம்பு சாதாரணமாக 30 அடிமுதல் 40 அடிவரை உயரம் வளரக்கூடியது. இது நல்ல வளமான களி மண்ணில் 50 அடி முதல் 65 அடிவரையிலும் கூட வளரும். வேம்பு அனைத்து மண்ணிலும் வளரக்கூடியது. ஆனால் அதிக குளிர் பிரதேசத்தில் வளராது. மிதமான சீதோசனம் தேவை. இதன் இலைகள் கசப்புத் தன்மையுடையது. கூர் நுனிப் பற்களுள்ள சிறகுக் கூட்டிலைகளையும், வெண்ணிற மணமுள்ள சிறு சிறு பூக்களையும், முட்டை வடிவச் சதைகளையும், எண்ணெய் சத்துள்ள விதைகளையும் உடைய பெரிய மரம். இதன் பசுமையான நிழல் கருதி சாலையோரங்களிலும் அழகுக்காகவும் நிழலுக்காகவும் வளர்க்கப்படுகிறது. இதன் எண்ணெயில் சோப்பு, மகளிர் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் இதன் புண்ணாக்கு உரமாகவும் பூச்சி கொல்லியாகவும் பயன் படுத்துவர். விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

வேம்பின் கசப்புத் தன்மைக்கு காரணம் அசாடிராக்டின் எனக் கண்டறியப்பட்டுள்ளது. 

இது எப்போழுதும் பசுமையாக இருக்கும். கிழைகள் அகலமாக அடர்த்தியாக வளர்ந்து நல்ல நிழல் தரும் மரம்.  பொதுவாக வேப்ப மரத்தைப் பார்ப்பதாலும், அதனடியில் அமர்வதாலும், அதன் காற்றைச் சுவாசிப்பதாலும் நல்ல மன அமைதியை மக்கள் பெறுவார்கள்.


தகவல்
அடுத்த பதிவில் வேம்பின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்  

Print Friendly, PDF & Email
About the Author

I'm interested in blogging and sharing some useful information which I read from other sites and I'm interested on organic farming, home gardening, growing up trees etc...

Leave A Response

You must be logged in to post a comment.