மானாவாரி விவசாய நிலங்களில் மழை நீரைச் சேமித்து பயிர்களுக்குப் பயன்படுத்துவதற்கு, பூசா ஹைட்ரோஜெல் என்னும் வேளாண்மை வேதிப் பொருளை, இந்திய வேளாண்மை ஆராய்ச்சித் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. வேதிப் பொருள் பாலிமர் வகையைச் சேர்ந்தது. காய்ந்த நிலையில் இருக்கும் பூசா ஹைட்ரோஜெல் பழுப்பு நிறத்தில் உலர்ந்த சவ்வரிசி போல காணப்படும். இதன்மீது தண்ணீர் பட்டவுடன் தனது இயல்பான எடையை விட 400 மடங்கு எடையுள்ள நீரை உறிஞ்சி சேமித்து வைத்து, சிறிது சிறிதாக மண்ணில்...

நீர்ப் பற்றாக்குறை நீர்ப் பற்றாக்குறை ஏற்படும்போது, பயிர்களின் முக்கிய சத்துகளான பொட்டாட்சியம், மக்னீசியம் பற்றாக்குறை அதிகம் காணப்படும். இதுமட்டுமின்றி கரும்பில் துத்தநாகம், போரான் நுண்ணூட்டச் சத்துகளின் பற்றாக்குறையும் ஏற்படும். இந்தக் குறைபாட்டை நீக்க 20 சதவீதம் அம்மோனியம் பாஸ்பேட், 0.5-1 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு, 0.5 சதவீதம் துத்தநாக சல்பேட், 0.5-1 சதவீதம் இரும்பு சல்பேட் அத்துடன் 1 சதவீதம் யூரியா, 0.3 சதவீதம் போரிக் அமிலம் ஆகியவற்றை பயிர்களுக்கு...

செயற்கை உரங்களை பயன்படுத்தி தக்காளி சாகுபடி செய்வதைக் காட்டிலும், இயற்கை வழி வேளாண் முறையில் தக்காளி சாகுபடி செய்வதன் மூலம் அதிக மகசூல் பெற்று லாபம் பெறலாம். தக்காளி சாகுபடி பொதுவாக கோடைப் பருவத்திலும் இல்லாமல், மழைக்காலத்திலும் இல்லாமல் இதுபோல் இடைபட்ட காலத்தில் செய்வது அதிக லாபம் தரும். மேலும் பூச்சிகளின் தாக்குதல், நோய் பாதிப்பில் இருந்து இப்பருவத்தில் எளிதாக காக்க முடியும். நாற்றங்கால் முறை மண்ணைத் தோண்டி அடித்தாள்களை அகற்ற வேண்டும்....

களை எடுக்கும் பருவத்தில் இலை உறைக் கருகல் நோய் தாக்க வாய்ப்பு உண்டு. அந்நோய் தாக்காமல் நெற்பயிரைக் கட்டுப்படுத்தும் முறைகளை வேளாண்துறை அறிவித்துள்ளது. அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் வாகைக்குளம், பிரம்மதேசம், மன்னார்கோவில், சிவந்திபுரம், விக்கிரமசிங்கபுரம் பகுதியில் நெல் பயிரில் இலை உறைக் கருகல் நோய் பரவலாக ஆங்காங்கே காணப்படுகிறது. இந்நோயை விவசாயிகள் கட்டுப்படுத்த கீழ்கண்ட முறைகளைப் பின்பற்ற வேண்டும். நோய் பரவும் காரணிகள் வயல் வெளிகளிலும்,...

இந்த உலகம், மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் உள்படக் கோடிக்கணக்கான உயிர்களுக்கும் உறைவிடம். நாம்தான், உலகை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறோம் என எண்ணிக் கொண்டிருக்கிறான் மனிதன். ஆனால், உண்மையில் உலகை ஆட்டிவைப்பவை பூச்சிகளும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களும்தாம். நுண்ணுயிர்கள் என்றாலே மனிதனுக்கு எதிரானவை என்ற பொதுவான எண்ணம் உண்டு. உண்மையில் அப்படியில்லை. தனது அனைத்துப் படைப்பிலும் இரண்டு வாசல்களை வைத்தே இருக்கிறது...

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தில் 1847-ம் ஆண்டிலிருந்து இயங்கிவரும் உலகளவில் பிரபலமான நிறுவனம் ‘கார்ட்டியர்’. பெண்களுக்கான ஆடைகள், நகைகள், கைக்கடிகாரங்கள் எனப் பல்வேறு பொருள்களைத் தயாரித்து உலகளவில் சந்தைப்படுத்தி வருகிறது. இந்நிறுவனம், கடந்த 2006-ம் ஆண்டிலிருந்து சிறந்த பெண் தொழில் முனைவோர் மற்றும் சிறந்த பெண் முன்முயற்சியாளர்களுக்கான போட்டியை ஆண்டுதோறும் நடத்திவருகிறது. இப்போட்டியில் இந்த ஆண்டுக்கான கார்ட்டியன் பெண் முன்முயற்சியாளர்...