கிணற்றுப்பாசான் சூரியகாந்தி குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரமாகும். இது வெட்டுக்காயப் பூண்டு என்று அழைக்கப்படும் இது பரவலாக களைச் செடியாக அறியப்படுகிறது. மூக்குத்ததிப்பூண்டு, வெட்டுக்காயபச்சிலை, காயப்பச்சில்லை, செருப்படித்தழை மற்றும் தென்தமிழகத்தில் பேச்சு வழக்கில் தாத்தாப்பூச்செடி என்று பல பெரியர்களில் இது அழைக்கப்படுகின்றது. டிரிடாக்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றது. இதன் தாயகம் மத்திய அமெரிக்கா. இந்த செடி சிறியதாகவும்,...

கால்நடைகள் விவசாய்களின் உற்ற தோழனாக விளங்குபவை. இவை விவசாயிகளின் பணத்தேவையை பூர்த்தி செய்யும் மினி எடிம் என்றே சொல்லலாம். கால்நடைகளுக்கு நோய்கள் மூலமாகவோ அல்லது எதிர்பாராமல் ஏற்படுகிற விபத்துகள் மூலமாகவோ அவற்றின் உயிருக்கோ, உடல் நலத்திற்கோ தீங்கு ஏற்படலாம். நம்மிடம் உள்ள மருந்துகளைக் கொண்டு தக்க மருத்துவம் செய்து பாதிப்பினை அதிகரிக்காமல் இருக்கச் செய்யும் உதவியே முதலுதவி ஆகும். கால்நடைகளுக்கான முதலுதவிகள் காயங்கள் – கால்நடைகளுக்கு...

மூக்குத்தி மற்றும் கம்மல் செடி என அழைக்கப்படும் அசோலா மிகச்சிறிய இலைகளையும், துல்லியமான வேர்களை கொண்ட தண்ணீரில் மிதக்ககூடிய பெரணி வைகையைச் சேர்ந்த தாவரம். இது கால்நடைகளுக்கு சிறந்த மாற்று தீவனமாக விளங்குகிறது.  35-36 டிகிரி செல்சியஸ் வெப்பம் அசோலாவின் வளர்ச்சிக்கு தேவைப்படுகிறது. அசோலாவை உற்பத்தி செய்யும் முறை நிழற்பாங்கான இடத்தில் 10 அடி நீளம், 2 அடி அகலம், ஒரு அடி ஆழம் கொண்ட பாத்தி அமைக்கவும். பாத்தியின் அடித்தளத்தில் சில்பாலின் ஷீட்டை சீராக...

தென்னை மரங்கள் பெற்ற பிள்ளையை போல் காப்பாற்றும் என்பார்கள். பிள்ளைகளை போல வளர்த்த தென்னை மரங்கள் கஜா புயலில் சாய்ந்து கிடப்பதை பார்த்து கத்தி கலங்கி நிற்கிறார்கள் நம் விவசாயிகள். சமூக ஊடகங்கள், வலைதளங்களில், “சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்கலாம்” என்று வரும் தகவல்களால் விவசாயிகள் குழப்பத்தில் உள்ளனர். இது பற்றி துறைசார் வல்லுநர்கள் கூறியது, தென்னை மரங்கள் மறுநடவு “சாய்ந்த தென்னை மரங்களை மறுநடவு செய்வது என்பது சாத்தியமே இல்லாத...

வெள்ளாடுகள் இறைச்சிக்கும், பால் உற்பத்திக்காகவும் அதிகமாக வளர்க்கப்படுகிறது. கொழுப்புதான் ஆடுகளுக்குச் சக்தி அளிக்கும் மாவுப் பொருள். தாது உப்புகள், புரதம் மற்றும் வைட்டமின்கள் உடல் வளர்ச்சிக்கு தேவையானது. ஆடுகள் உண்ணும் உணவு பொருட்களை செரிக்கவும் உடலில் ஏற்றுக் கொள்ளப்படவும் நீர் தேவை. 20% நீர் உடலில் குறைவுபட்டால் அவற்றால் உயிர் வாழ முடியாது. தண்ணீர் சுத்தமான நீர் எப்போதும் ஆடுகளுக்கு அருகில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். முடியாத...

கடுக்காய்க்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் உண்டு. கடுக்காயை பொடியாகவும் மற்றும் லேகியமாகவும் உண்ணும் பழக்கம் நம் முன்னோர்களிடையே உண்டு. கடுக்காயின் விதையை நீக்கி நன்கு காயவைத்து போடி செய்து தினமும் நீரில் கலந்து பருகி வர உடலின் கழிவுகள் அனைத்தும் நீங்கும். கடுக்காய் லேகியம் செய்தும் உண்ணலாம். கடுக்காய் லேகியம் செய்யும் முறை பற்றி கீழே காண்போம். கடுக்காயின் வகைகள் பிஞ்சுக் கடுக்காய் மலச்சிக்கலைப் போக்கும். மலத்தை இளக்கும்; உடலுக்கு அழகூட்டி,...