விளைநிலங்களை பாழாக்கும் பார்த்தீனிய செடிகள் (Parthenium hysterophorus)

கருவேல மரங்களை தொடர்ந்து விஷத்தன்மையுள்ள பார்த்தீனிய செடிகள் விளைநிலங்களை பாழாக்கி வருகின்றன. அரசு உரிய நடவடிக்கை எடுத்து விவசாயத்தை காப்பாற்ற வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் விவசாயத்தின் ஆன்மாவை அழிப்பதற்காக 1960ம் ஆண்டு சப்தமின்றி, அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட கொடூரமான உயிரி ஆயுதம்தான் பார்த்தீனிய செடிகள். அமெரிக்காவில் பெரும் அழிவை உருவாக்கிய இந்த செடிகள் தற்போது தமிழகத்தில் பெரிய அளவில் தலை தூக்கி உள்ளது. இதனால் விளைநிலங்களில் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. வேளாண் அதிகாரிகள், தொழில் நுட்ப வல்லுனர்கள் பார்த்தீனிய செடிகளை அழிக்க எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிந்து விட்டன.

1960ம் ஆண்டு அமெரிக்காவில் கோதுமை வளர்ச்சி அதிக அளவு இருந்தது. இதனால் கோதுமையின் விலை வீழ்ச்சியடைந்தது. போதிய இருப்பு போக மீதமுள்ள கோதுமையை அழிக்க முடிவு செய்தனர். பெரும்பாலானவற்றை கடலில் கொட்டி அழித்தனர். அப்போது இந்தியாவில் கடுமையான வறட்சி உருவானது. இதனால் அமெரிக்காவிடம் கடலில்  வீணாக கொட்டும் கோதுமையை எங்களுக்கு கொடுங்கள் என்று வாங்கி வந்ததது. கோதுமையுடன் இந்தியாவில் இறங்கியதுதான் பார்த்தீனிய செடி. ஒரு செடி ஆயிரம் விதைகளை உண்டாக்கும். இது மெல்ல மெல்ல பரவி விளைநிலங்களை எல்லாம் விஷமாக்கியது. பார்த்தீனிய செடிகள் முளைத்த இடத்தில் வேறு எந்த செடிகளும் முளைக்காது. மிக கொடிய நோய்களான ஆஸ்துமா, தோல் நோய், போன்றவைகளை இச்செடிகள் உண்டாக்கிறது. ஒரு விதையின் வீரியம் 20 ஆண்டுகள் வரை இருக்கும். இதனை தீயிட்டால்தான் அழிக்க முடியம். வேளாண்மை கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளால் கூட இந்த பார்த்தீனிய செடிகளை முழுமையாக அழிக்க முடியவில்லை. இந்தியாவில் அதிக அளவு பார்த்தீனிய செடி விவசாயிகளுக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது.

ஒரே ஒரு செடியை பூக்கும் அளவுக்கு விட்டுட்டீங்கனா அந்த செடியிலிருந்து விதை காற்றிலேயே பரவும் தன்மை இதுக்கு இருக்கு. நாம் வசிக்கும் வீட்டை சுற்றி இந்த செடி இருந்தால் தும்மல், நாள்பட்ட சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் கட்டாயம் வரும். சரி இந்த விஷ விதையை எதுக்காக வெளிநாட்டுகாரங்க பரப்பினாங்க?

ஆனால் இந்த நச்சுக்கள் அந்த விஷ செடி மீது தெளிக்கும் போது பார்த்தீனியா செடி காய்ந்து அதோட விதை வீரியம் ஆகுதுங்க. இதை சோதிச்ச பின்தான் எனக்கு தெரியவந்ததுச்சு.

பார்த்தீனிய செடிகளை கட்டுப்படுத்த சில வழிகள்

பார்த்தீனிய செடி

பத்து லிட்டர் தண்ணீரில் ஐந்து கிலோ கல்உப்பை (சாப்பாட்டு உப்பு) கரைத்து வடிகட்டி கைதெளிப்பான் மூலமா இந்த பார்த்தீனியா செடி மேல நல்லா படும்படியா நனச்சு விட்டீங்கனா ஒரே நாளில் அந்த செடி காய்ஞ்சு போகும். இப்படி இந்த செடி அழிக்கனும்னா, பார்த்தீனியா பூ பிடிச்ச பின்பு உப்பு நீரை தெளிக்கனும். தொடர்ந்து மூன்று மாதத்துக்கு ஒரு மாத இடைவெயில் இப்படி தெளித்தால் இந்த விஷ செடியை முழுவதும் அழித்திடலாம். சரி இப்படி செஞ்சா மண்வளம் பாதிக்காதானு சந்தேகம் வரும்.  கட்டாயம் பாதிக்காதுங்க. நச்சு களைக்கொல்லியில் இருக்கிற வேதி பொருட்கள் இந்த கல் உப்பில் ஒருசதவீதம் கூட இல்லை. அதும் போக கல்உப்பு நீர் தெளித்து அந்த செடி காய்ந்து அப்படியே மண்ணோட மண்ணா உரமாகிடுதுங்க. அதனால பெரிய பாதிப்பு எல்லாம் இல்லை.

சரி இதை வெள்ளாமை செஞ்சு இருக்கிற பூமியில் தெளிக்கலானானனு சந்தேகம் வரலாம். தென்னை தோப்பு, வாய்க்கால், வரப்பு போன்ற இடத்தில் இதை தெளித்து பார்த்தீனியாவை அழிக்கலாம். என்னோட தென்னை மரத்துக்கு இடையில் இப்படி தெளிப்தால் தென்னைக்குனு தனியா உரம் வைக்கிறது இல்லை. இந்த கல்உப்புதான் அதுக்கு உரம். இப்படி செய்வதால் தென்னை குரும்பை, இளநீர் மரத்திலிருந்து உதிர்வது இல்லை.

வெள்ளாமை செய்த பூமியில் தெளிக்க இந்த முறை வேண்டாம். அதுக்கு பத்து லிட்டர் சுத்தமான மாட்டு கோமியத்தில் மூன்று கிலோ கல் உப்பு கலந்து பார்த்தீனியா மேல தெளியுங்க பயிர் மேல படமால்.
கட்டாயம் அழிந்துவிடும். மேல சொன்ன அத்தனை விசயமும் பார்த்தீனியாவை நிரந்தரமா அழிக்க மட்டுமே. மற்ற களையை அழிக்க அல்ல.

இத்தனை பிரச்சனைக்கு அதை கையிலே பிடுங்கி போட்டுட்டா மண்ணுக்கு உரமாகிவிடும்னு சொல்லாதீங்க. இதை நான் கையில் பிடுங்கினால் கையெல்லாம் அரிப்பு வந்து புண் ஆகிடுது. அதும் போக இந்த விஷ செடியை பிடிங்கி பயிருக்கு போட்டு இயற்கை விவசாயம் எல்லாம் செய்யாதீங்க..!! அப்படி செய்யனும்னு ஆசைபட்டா கொழிஞ்சி,எருக்கு அல்லது களை செடிகளை எல்லாம் பிடிங்கி பயிருக்கு போட்டு இயற்கை உரமாக்குங்க. ரசாயன களைக்கொல்லி தெளித்தால் ஒரு டேங்கிற்க்கு நாற்பது ரூபாய் செலவாகும். அதோட மண்ணும் மலடாகி, வரப்பில் இருக்கிற அருகு எல்லாம் அழிந்து, மழை பெய்தா நிலத்தில் இருக்கிற மண்ணும் கரைந்து கடலுக்கே போயிடும்.

ஆனா கல்உப்பு நீர் அப்படி இல்லை. ஒரு டேங்க் தெளிக்க பதினைந்து ரூபாய் போதும்.

பார்த்தீனிய செடிகளை கட்டுப்படுத்த வேறு சில வழிகள்

பார்த்தீனிய செடி

* பார்த்தீனிய செடிகள் பூப்பதற்கு முன்பாக அவற்றை கையுறை அணிந்து கொண்டு வேரோடு பறித்து தீயில் எரித்து விட வேண்டும்.
* பார்த்தீனிய செடிகள் அதிகம் வளரும் இடங்களில் வேறு சில பயிர் செய்தாலும் கட்டுப்படுத்தலாம். குறிப்பாக அடர் ஆவாரை, துத்தி, நாய்வேளை போன்ற தாவரங்களை வளரச்செய்தும் பார்த்தீனிய செடிகளை கட்டுப்படுத்தலாம்.
* செவ்வந்தி சாகுபடி செய்தும், பயிர் சுழற்சி முறையில் பயிரிட்டால் கட்டுப்படுத்த முடியும்.
* மண்ணில் போதுமான ஈரம் இருக்கும்போது அட்ரசின் களைக்கொல்லி மருந்தை பார்த்தீனிய செடிகளில் தெளித்தும் கட்டுப்படுத்தலாம். * சாலைகள் மற்றும் ரயில் பாதை ஒரங்களில் உள்ளவைகளை சமையல் உப்புடன் நீரில் கலந்து தெளித்தும் கட்டுப்படுத்தலாம். அல்லது டீபால் ஒட்டு திரவத்தினை தண்ணீர் கலந்து செடிகள் நனையும்படி தெளித்தால் கட்டுப்படுத்தலாம். சைக்கோ கிரம்மா பைக்கலரெட்டா என்ற வண்டுகளை பார்த்தீனிய செடிகள் இருக்கும் இடத்தில் விட்டு பார்த்தீனிய செடிகளை கட்டுப்படுத்தலாம். கருவேல மரங்களை கண்டு கொள்ளாமல் விட்டதால் தமிழகத்தில் உள்ள கண்மாய்கள், குளங்களில் கூட வளர்ந்து நீராதாரத்தை பாதிக்கிறது. தண்ணீரை தேடி உறிஞ்சும் தன்மை கொண்ட இந்த மரங்களால் பெரும்பாலான இடங்களில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. எனவே, அரசு அதிரடி நடவடிக்கையில் களமிறங்கி கருவேல மரங்கள், பார்த்தீனிய செடிகளை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: Facebook (Thiru Murthy) , Thinakaran

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Leave A Response

You must be logged in to post a comment.